Expert

Dark Underarms.. வெறும் அழகு பிரச்சினை அல்ல.. உங்கள் உடல் அனுப்பும் Signal.! உடனே தெரிஞ்சிக்கோங்க..

அக்குள் கருமை வெறும் அழகு பிரச்சினை அல்ல. ஹார்மோன் சமநிலையின்மை, இன்சுலின் எதிர்ப்பு, தைராய்டு, PCOS போன்ற நோய்களின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். காரணங்கள், சிகிச்சை, தடுப்பு முறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
Dark Underarms.. வெறும் அழகு பிரச்சினை அல்ல.. உங்கள் உடல் அனுப்பும் Signal.! உடனே தெரிஞ்சிக்கோங்க..


இன்றைய காலத்தில் பெண்கள், ஆண்கள் என பலரும் சந்திக்கும் ஒரு முக்கிய அழகு பிரச்சினை அக்குள் கருமை (Dark Underarms). பொதுவாக வியர்வை, டியோடரண்ட், சோப்பு அல்லது முடி அகற்றும் முறைகள் காரணமாகவே அக்குள் கருமை ஏற்படுகிறது என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால், மருத்துவ உலகம் கூறுவதாவது – இது வெறும் அழகுச் சிக்கல் மட்டுமல்ல, உடலில் இருக்கும் ஹார்மோன் சமநிலையின்மையின் (Hormonal Imbalance) முக்கிய அறிகுறியாகவும் இருக்கலாம்.

ஹார்மோன்களின் பங்கு

மனித உடலில் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இன்சுலின், தைராய்டு ஹார்மோன், பாலியல் ஹார்மோன்கள் (ஈஸ்ட்ரஜன், புரோஜெஸ்ட்ரோன், டெஸ்டோஸ்டெரோன்) ஆகியவை உடலின் வளர்ச்சி, சீரான செயல்பாடு, சரும ஆரோக்கியம் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. இவற்றில் ஏதேனும் சீர்கேடு ஏற்பட்டால், அதன் வெளிப்பாடு உடலில் பல்வேறு அறிகுறிகளாக தெரியும். அதில் ஒன்று அக்குள் கருமை.

artical  - 2025-08-20T230520.005

அக்குள் கருமை.. ஒரு எச்சரிக்கை அறிகுறி..

அக்குள், கழுத்து, கை முட்டி, முழங்கால் பகுதிகளில் திடீரென கருமை தோன்றும் நிலைக்கு Acanthosis Nigricans என்று பெயர். இது பெரும்பாலும் ஹார்மோன் சமநிலையின்மை விளைவாகவே உருவாகிறது.

இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance)

சர்க்கரை நோய் (Diabetes) ஆரம்ப நிலைகளில், உடல் இன்சுலின் ஹார்மோனுக்கு எதிர்ப்பை உருவாக்குகிறது. இதனால் உடலில் சர்க்கரை சீராக கரையாமல், சருமத்தில் கருமை தோன்றும்.

தைராய்டு சிக்கல் (Thyroid Disorder)

தைராய்டு ஹார்மோன்களின் அதிகம் அல்லது குறைவு, உடலின் நிறப்பொருளான மெலனின் உற்பத்தியை பாதித்து, அக்குள் பகிதியில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.

PCOS (Polycystic Ovary Syndrome)

பெண்களில் அதிகமாகக் காணப்படும் PCOS பிரச்சினை காரணமாக ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, அக்குள் மற்றும் கழுத்தில் கருமை தென்படும்.

மருந்துகள்

குறிப்பாக ஹார்மோன் அடிப்படையிலான மருந்துகள் (பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள், ஸ்டீராய்டுகள்) நீண்ட காலம் எடுத்துக்கொண்டால், அக்குள் கருமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

இந்த பதிவும் உதவலாம்: தவறான Shaving methods-ஐ உடனே நிறுத்துங்க… இல்லையென்றால் Underarms black ஆகும்!

பிற வெளிப்புற காரணிகள்

* அடிக்கடி டியோடரண்ட், பர்ஃப்யூம் பயன்படுத்துதல்

* அதிகமாக வியர்வை சுரத்தல்

* அடிக்கடி முடி அகற்றுதல்

* உடல் பருமன் (Obesity)

* நிறமூட்டும் சோப்புகள்

மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

தோல் நிபுணர் டாக்டர் அனுராதா கூறுகையில், “பலர் அக்குள் கருமையை அலட்சியப்படுத்துகிறார்கள். ஆனால், இது உடலின் ஹார்மோன் சமநிலையின்மை சுட்டிக்காட்டும் மிக முக்கிய சிக்னல். குறிப்பாக சர்க்கரை நோய், PCOS, தைராய்டு பிரச்சினை போன்றவை ஆரம்பத்தில் கண்டறிய உதவும்,” என எச்சரிக்கிறார்.

how to get rid of underarm smell

எப்போது கவனிக்க வேண்டும்?

* திடீரென அக்குள் கருமை அதிகரித்தால்

* கழுத்து, முழங்கால், விரல் பகுதிகளிலும் கருமை பரவினால்

* உடல் எடை திடீரென அதிகரித்தால்

* மாதவிடாய் சிக்கல் அல்லது ஹார்மோன் தொடர்பான மாற்றங்கள் ஏற்பட்டால்

சிகிச்சை மற்றும் பராமரிப்பு

* மருத்துவ பரிசோதனை: ஹார்மோன் டெஸ்ட், இன்சுலின், தைராய்டு பரிசோதனை அவசியம்.

* வாழ்க்கை முறை மாற்றம்: ஆரோக்கியமான உணவு, தினசரி உடற்பயிற்சி, எடை கட்டுப்பாடு.

* தோல் சிகிச்சை: மருத்துவரின் ஆலோசனையின்படி லேசர், பிலிங், வெளிர் கிரீம்கள் பயன்படுத்தவும்.

* இயற்கை முறைகள்: எலுமிச்சை சாறு, ஆலோவேரா, வெள்ளரிக்காய் சாறு போன்றவை கருமையை குறைக்க உதவும்.

இறுதியாக..

அக்குள் கருமை என்பது வெறும் வெளிப்புற அழகு பிரச்சினை அல்ல. அது உடலின் உள்ளார்ந்த ஹார்மோன் சீர்கேட்டின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். எனவே, இந்த பிரச்சினை நீடித்தால் அல்லது திடீரென அதிகரித்தால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

Read Next

கொசு கடியால் தோலில் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் தொற்றுகள்: அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்