செயற்கை நகையால் அலர்ஜியா? உங்களுக்கான டிப்ஸ் இதோ.!

  • SHARE
  • FOLLOW
செயற்கை நகையால் அலர்ஜியா? உங்களுக்கான டிப்ஸ் இதோ.!


How To Get Rid Of Artificial Jewellery Allergy: பெண்கள் நகைகளை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. சிலர் தங்க நகைகளை பண வசதிக்கேற்ப அணிகிறார்கள். மற்றவர்கள் செயற்கை நகைகளை அணிகின்றனர். 

தற்போது தங்கத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதால், அதிகமான பெண்கள் செயற்கை நகைகளின் பக்கம் சாய்ந்துள்ளனர். ஆனால் இந்த நகை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சில உலோகங்களால், சருமத்தில் சிவப்பு சொறி, அரிப்பு, எரிதல் போன்ற அலர்ஜியை ஏற்படுகின்றன.

இதையும் படிங்க: Childhood Allergy: குழந்தைக்கு ஏற்படும் இந்த அலர்ஜியிலிருந்து பாதுகாக்க பெற்றோருக்கான டிப்ஸ்

அலர்ஜியை தடுக்க வழிகள்

நிக்கல் என்ற உலோகம் செயற்கை நகைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. பலருக்கு அலர்ஜி ஏற்படுவதற்கு இதுவே முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அலர்ஜியை தடுக்க சில எளிய வழிகள் உள்ளன. அவை பின்வருமாறு,

* செயற்கை நகைகளை அணிவதற்கு முன் பவுடர், மாய்ஸ்சரைசர் அல்லது கேலமைன் லோஷன்களைப் பயன்படுத்துவது நல்லது. இவை உங்கள் தோலில் நகைகளில் உள்ள உலோகத்தின் தாக்கத்தை தடுக்கிறது.

* நகைகளை வாங்கியவுடன் அணியாமல், நெய் தடவி, அதை உலரவிட்டு பின் பயன்படுத்தவும்.

* நகையை ஒரு முறை அணிந்த பின், அதனை நன்கு உலரவிட்டு பின் அதனை பெட்டியில் வைக்கவும். இல்லை யென்றால் இதில் ஒட்டுயுள்ள வியர்வை, நீங்கள் நகையை மீண்டும் அணியும் போது உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

* செயற்கை நகையை கழட்டிய பின், கற்றாழை ஜெல்லை தடவி ஒரு இரவு முழுவதும் அப்படியே விடவும். பின் காலை எழுந்தவுடன், வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுத்து பகுதியை துடைக்கவும். இது போல் செய்தால், அலர்ஜியில் இருந்து விடுபடலாம். 

Image Source: Freepik

Read Next

Forehead Acne: நெற்றி பருக்கள் ஏற்பட காரணம் என்ன? தடுப்பு முறை இதோ!

Disclaimer