Tips For Parents To Manage Childhood Allergies: பொதுவாக குழந்தைகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், நோய்த் தொற்றுக்களின் பாதிப்புக்கு உள்ளாகலாம். மேலும் குழந்தைகளின் உணவு முறையைப் பாதுகாப்பாக கையாள வேண்டியதும் அவசியமான ஒன்று. சிறு குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் பல்வேறு புரதங்களைக் கொடுப்பது, உணவு ஒவ்வாமை பிரச்சனையை உண்டாக்கலாம்.
எனவே புரதங்கள் நிறைந்த பசும்பால், முட்டை, வேர்க்கடலை, கோதுமை போன்ற ஒவ்வாமை உண்டாக்கும் உணவுகளை குழந்தைகளுக்குத் தாமதமாக அதாவது 10 முதல் 12 மாதங்களுக்குப் பிறகு அறிமுகப்படுத்தலாம். இது குழந்தைகளுக்கு ஒவ்வாமை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், பிறந்த குழந்தைக்கு குறைந்தது முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது, ஒவ்வாமையைத் தடுக்க உதவும். இது போல குழந்தைகளுக்கு இன்னும் சில வழிகளில் ஒவ்வாமை பிரச்சனை உண்டாகலாம். அவை குறித்துக் காண்போம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: World Prematurity Day: குறைமாத குழந்தைக்கு கண்பார்வை தெரிய இந்த டெஸ்ட் ரொம்ப முக்கியம்
குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை வகைகள்
உணவு ஒவ்வாமை
குழந்தையின் உணவில் ஆரம்ப கட்டங்களில் சாத்தியமான ஒவ்வாமை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எனவே, குழந்தைகளுக்கு புதிய உணவுகளை அறிமுகப்படுத்தும் போது , ஒவ்வாமை எதிர்வினையின் அறிகுறிகளை நன்றாகக் கண்காணிக்க வேண்டும். இதில் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டால், அந்த உணவைத் தவிர்க்கவும்.
இவ்வாறு குழந்தைகளிடம் அறியப்பட்ட ஒவ்வாமை உணவுகளின் பட்டியலை உருவாக்கி, குழந்தையின் உணவில் அதை சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கலாம். மேலும், குழந்தைக்கு பாதுகாப்பான உணவு தயாரிப்பை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் அனாபிலாக்ஸிஸ் போன்ற கடுமையான ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு இந்த விழிப்புணர்வு முக்கியமானதாகும்.
சுவாச ஒவ்வாமை
குழந்தைகளுக்கு பல்வறு காரணங்களால் சுவாச ஒவ்வாமைகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க முறையான தடுப்பூசிகள், சுத்தமான வாழ்க்கை சூழலைப் பேணுதல் போன்றவற்றைக் கையாள வேண்டும். குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் ஒவ்வாமையை அதிகரிக்கச் செய்யக் கூடிய சுவாச நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கலாம்.
மேலும் புகை, விரிப்புகள், தூசி, பூச்சிகள், வாசனைத் திரவியங்கள் போன்ற எரிச்சலூட்டும் பொருள்களைத் தவிர்ப்பது அவசியமாகும். இவை சுவாச ஒவ்வாமை அறிகுறிகளைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது. சுத்தம் மற்றும் குறைந்த ஈரப்பதம் உள்ள சுற்றுச்சூழலை பராமரிப்பது, ஒவ்வாமை ஏற்படுவதைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Peanut Powder Benefits: குழந்தைகளுக்கு வேர்க்கடலை பொடி தருவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
தோல் ஒவ்வாமை
இந்த வகை ஒவ்வாமைப் பிரச்சனையை தொழில்துறை, மாசுபட்ட அல்லது பெருநகரப் பகுதிகளில் அதிகம் காணலாம். தோல் ஒவ்வாமை அபாயத்தைக் குறைக்க, சருமத்தை நீரேற்றமாக வைப்பதும், எரிச்சலூட்டுவதைத் தவிர்ப்பதும் முக்கியமாகும்.
வெளிப்படும் தோலை மறைப்பதன் மூலமும், வழக்கமான ஈரப்பதத்தைக் கையாள்வதன் மூலமும் தோல் அழற்சியின் வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்க முடியும். மேலும் குழந்தைகளுக்கு சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணிகளில் அழகு சாதனப் பொருள்கள் மற்றும் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதும் ஆகும். எனவே, இந்த ஒவ்வாமை எதிர்வினைகளைத் தூண்டும் காரணிகளைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் ஒவ்வாமை எதிர்வினையை அனுபவித்தால், பெற்றோர்கள் அதன் தீவிரத்தை உடனடியாக மதிப்பிட வேண்டும். இதன் மூலம் அவை கடுமையானதாக மாறுவதற்கு முன்னதாகவே, ஒவ்வாமை பிரச்சனையைத் தீர்க்கலாம். மருத்துவ ஆலோசனையுடன் இதைக் கண்காணிப்பது முக்கியமாகும். லேசான அல்லது சிறிய மற்றும் கடுமையான ஒவ்வாமைகளுக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளலாம். எனினும், ஒவ்வாமை எதிர்வினையின் தீவிரத்தை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது.
இந்த பதிவும் உதவலாம்: Child Calcium Deficiency: குழந்தைக்கு கால்சியம் சத்து குறைவா இருக்க இது தான் காரணமாம்
Image Source: Freepik