How To Treat Calcium Deficiency In Babies: குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் கால்சியம் சத்துக்கள் மிகவும் தேவையானதாகும். இது எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைய உதவுகிறது. இவை குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், சிறு வயதில் குழந்தைகளுக்கு போதுமான கால்சியம் சத்துக்கள் கிடைக்கவில்லை எனில், அவர்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். பொதுவாக குழந்தைகளுக்கு கால்சியம் குறைபாடு பிரச்சனை இருந்தால், அது ஹைபோகால்சீமியா நிலை என அழைக்கப்படுகிறது. இதில், ஹைபோகால்சீமியா நிலைக்கான அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்துக் காணலாம்.
குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் அளவு
பொதுவாக, குழந்தை வளர்ச்சிக்கு போதுமான அளவு கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துகளும் தேவைப்படுகின்றன. தகவலின் படி, 1 முதல் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு தினமும் 700 மிகி கால்சியம் தேவைப்படுகிறது. அதே போல, 4 முதல் 8 வயது குழந்தைகளுக்கு 1000 மில்லிகிராம் அளவு கால்சியமும், 9 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 1300 மில்லிகிராம் கால்சியமும் தேவைப்படுகிறது.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Autism child : ஆட்டிசம் பாதித்த குழந்தையை வளர்ப்பது எப்படி? - பெற்றோர்களுக்கான டிப்ஸ்!
குழந்தைகளுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கான காரணங்கள் (Causes of Child Calcium Deficiency)
குழந்தைகளில் கால்சியம் குறைபாடு பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை குழந்தை மற்றும் தாயின் சூழ்நிலையைப் பொறுத்ததாகும்.
மரபணு கோளாறு
ஜார்ஜ் சின்ட்ரோம் என்ற மரபணு கோளாறு காரணமாகவும் குழந்தைகளுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும். அதாவது, இந்த மரபணு கோளாறு ஏற்படும் சூழ்நிலையில் குழந்தைகளில் கால்சியம் குறைபாடு உள்ளது.
வளர்ச்சியடையாத பாராதைராய்டு சுரப்பிகள்
குறைப்பிரசவக் குழந்தைகள் அல்லது எடை குறைவாக பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படலாம். இவர்களின் பாராதைராய்டு சுரப்பி குறைவாக வளர்ச்சியடைவதே இதற்குக் காரணமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Peanut Powder Benefits: குழந்தைகளுக்கு வேர்க்கடலை பொடி தருவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
தாய்க்கு சர்க்கரை நோய்
பிரசவத்தின் போது, தாய் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பின், அவர்களின் குழந்தைகளுக்கு கால்சியம் குறைபாடு பாதிப்பு ஏற்படலாம்.
வைட்டமின் டி குறைபாடு
குழந்தைக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படின், அவை கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் சில மருந்துகளின் விளைவு மற்றும் இரத்தத்தில் மெக்னீசியம் சமநிலை தொந்தரவு போன்றவற்றால், குழந்தைகள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுவர்.
குழந்தைகளில் கால்சியம் குறைபாடு சிகிச்சை முறைகள் (Calcium Deficiency in Child Treatment)
குழந்தைகளுக்கு கால்சியம் குறைபாடு உள்ளதா என்பதை அறிய ஒரு சோதனை செய்யலாம். இதில் கால்சியத்தின் அளவைக் கணக்கிட முடியும். இந்த சோதனையில் குழந்தையின் உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால், கீழே குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- மருத்துவரின் ஆலோசனையின் படி, குழந்தைக்கு கால்சியம் சப்ளிமென்ட்ஸ்களைக் கொடுப்பது
- குழந்தை சற்று பெரியதாக இருந்தால், சிறிது நேரம் சூரிய ஒளியில் உட்கார வைப்பது கால்சியம் அளவை மேம்படுத்துகிறது
இந்த பதிவும் உதவலாம்: World Prematurity Day: குறைமாத குழந்தைக்கு கண்பார்வை தெரிய இந்த டெஸ்ட் ரொம்ப முக்கியம்
- குழந்தைக்கு அதிகளவு கால்சியம் நிறைந்த உணவுகளைக் கொடுப்பது
- குழந்தை உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, பாதாம், வெள்ளை எள், பால், தயிர், பாலாடைக்கட்டி, பிளம்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- குழந்தை பிறந்து சில நாட்களில் கால்சியம் குறைபாடு இருப்பின், மருத்துவரின் ஆலோசனை படி நர்சரியில் வைத்து சிகிச்சை அளிக்கலாம்.

மேலும் குழந்தைக்கு எலும்புகளில் வலி இருப்பின், அது கால்சியம் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இந்த சூழ்நிலையில் உடனடியாக குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: ADHD In Children: குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் ADHD; அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் என்ன?
Image Source: Freepik