Bed wetting: குழந்தை படுக்கையை நனைப்பதை நிறுத்த… இதை முயற்சித்து பாருங்கள்!

  • SHARE
  • FOLLOW
Bed wetting: குழந்தை படுக்கையை நனைப்பதை நிறுத்த… இதை முயற்சித்து பாருங்கள்!


சில குழந்தைகள் ஆறு வயதுக்குப் பிறகும்படுக்கையை நனைக்கும் பழக்கம் போவதில்லை. பல பெற்றோர்கள் குழந்தைகளின் இந்த பழக்கத்தை நிறுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை திட்டுவதை விட்டுவிட்டு சில டிப்ஸ்களை பின்பற்றினால்.. உங்கள் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் இருந்து விடுதலை பெற உதவலாம்…

how-to-stop-bed-wetting-in-your-children

இதையும் படிங்க: Vitamin D: அம்மாக்களே தெரிஞ்சிக்கோங்க… வீட்டிலேயே விளையாடினால் உங்க குழந்தைக்கும் இந்த பிரச்சனைகள் வரலாம்!

How to control bed wetting: தூக்கத்தில் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது என்பது குழந்தைகளிடையே தோன்றும் பொதுவான விஷயமாகும். ஆனால் இந்த பழக்கமானது 6 வயதிற்கு மேல் நீடிக்கிறது என்றால் அதுகுறித்து பெற்றோர்கள் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இது பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய மனநல கோளாறுகளின் வெளிப்படாகக்கூட இருக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பிள்ளைகளை திட்டுவதை விட்டுவிட்டு, பெற்றோர்கள் அவர்களது வாழ்க்கை முறை மற்றும் உணவுத் திட்டத்தில் மாற்றங்களைச் சேர்ப்பதன் மூலம், இதைக் கட்டுப்படுத்தலாம். (Bed wetting)

குழந்தை படுக்கையை நனைக்க காரணங்கள்:

  • குழந்தையின் சிறுநீர்ப்பை முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பது.
  • குழந்தையின் உணவில் காஃபின் அல்லது டையூரிடிக்ஸ் அதிகமாக இருந்தாலும், அவர்களால் சிறுநீர் கழிப்பதை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது.
  • குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் இருந்தாலும், அவர்களுக்கு சிறுநீர் கட்டுப்பாடு இருக்காது.
  • தூக்கத்தில் மூச்சுத்திணறல் சிறுநீர் தன்னிச்சையாக கசிவை ஏற்படுத்துகிறது.
  • சிறுநீர் பாதை தொற்று, மன அழுத்தம் அல்லது உளவியல் பிரச்சனைகள் போன்றவற்றாலும் சிறுநீரை அடக்கமுடியாமல் போகலாம்.
  • குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படுவது.
  • ஆழ்ந்த உறக்கம்

படுக்கைக்கு செல்லும் முன் செய்ய வேண்டியது:

  • குழந்தைகள் தூங்குவதற்கு முன் அமைதியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கதைகளையும் நகைச்சுவைகளையும் சொல்லுங்கள்.
  • மன அழுத்தம் உங்கள் குழந்தைகள் படுக்கையை ஈரமாக்குவதற்கும் காரணமாக இருக்கலாம். வீட்டுச் சூழலை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.
  • குழந்தையை நீரேற்றமாக வைத்திருக்க காலையில் தண்ணீர் உள்ளிட்ட பானங்களை அதிகமாக கொடுங்கள். ஆனால் மாலை வேளைகளில் தண்ணீரின் அளவை குறைப்பதோடு, சர்க்கரை அல்லது காஃபின் கொண்ட பானங்களையும் தவிர்க்கவும். படுக்கைக்கு இரண்டு மணி நேரத்திற்குள் தண்ணீர், பால், குளிர்பானங்கள் கொடுப்பதை தவிர்க்கவும்.
  • படுக்கைக்குச் செல்லும் முன்பு சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.
  • உங்கள் குழந்தையின் படுக்கையை நனைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த நள்ளிரவில் அலாரம் வைத்து எழுப்பிவிடலாம், சிறுநீர் கழித்துவிட்டு வந்து மீண்டும் தூங்க பழக்கப்படுத்தலாம்.
  • இந்த குறிப்புகளை பின்பற்றியும் குழந்தையிடம் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கும் பழக்கம் நிற்கவில்லை என்றால், கட்டாயம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
how-to-stop-bed-wetting-in-your-children

இதையும் படிங்க: Diabetes in children: குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்க இந்த 5 விஷயங்களை செய்தாலே போதும்!

படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பதை தடுக்க உதவும் உணவுகள் எவை?

சிறுதானியங்கள்:

ஆறு வருடங்களுக்குப் பிறகும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைளின் உணவில் சிறுதானியங்களை சேர்க்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சிறுதானியங்கள் குழந்தைகள் சிறுநீரை கட்டுப்படுத்திக்கொள்ளும் திறனை மேம்படுத்துகின்றன.

ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ், கோதுமை போன்ற நார்ச்சத்து நிறைந்த தானியங்கள் மற்றும் வால்நட்ஸ், திராட்சை போன்ற பொட்டாசியம் நிறைந்த நட்ஸ் வகைகளும் குழந்தைகள் இந்த பழக்கத்தில் இருந்து விடுபட உதவும்.

வாழைப்பழம்:

வாழைப்பழம் சாப்பிடுவதால் செரிமான அமைப்பு மேம்படும். வாழைப்பழம் சிறுநீர்ப்பையில் அதிகப்படியாக சேகரிக்கப்படும் திரவத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது.

துளசி:

இந்தப் பிரச்னையைக் குறைக்க துளசி இலைகள் மருந்தாகச் செயல்படுகின்றன. துளசி இலைகளை வறுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் இந்த பிரச்சனை குறையும்.

Image Source: Freepik

Read Next

Peanut Powder Benefits: குழந்தைகளுக்கு வேர்க்கடலை பொடி தருவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

Disclaimer