Fri Sep 11, 2026 | 11:46 PM IST

Doctor Verified

உங்க குழந்தைக்கு கிட்டப்பார்வை இருக்கா? அதுக்கு இந்த பழக்கங்கள் தான் காரணம்.. மருத்துவர் தரும் விளக்கம்

நீண்ட நேரம் மொபைல் போன்கள் அல்லது திரைகளைப் பார்ப்பது, கண்களுக்கு ஓய்வு அளிக்காமல் இருப்பது, வெளியே விளையாடாமல் இருப்பது, மோசமான தோரணை, வழக்கமான பரிசோதனைகளைத் தவிர்ப்பது போன்ற கெட்ட பழக்கங்கள் குழந்தைகளில் கிட்டப்பார்வைக்கு பங்களிக்கலாம். இந்தப் பழக்கங்களை சரியான நேரத்தில் சரிசெய்வது குழந்தைகளின் கண் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.

இன்றைய காலங்களில், குழந்தைகள் பலரும் பலவிதமான உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் பார்வை தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்கும் பல பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த வரிசையில், கிட்டப்பார்வையும் அடங்குகிறது. இந்த பிரச்சனைகள் அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அவர்களின் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களும் அமையும். மரபியல் சில பங்கு வகிக்கும் அதே வேளையில், குழந்தைகளின் சுற்றுச்சூழல் மற்றும் நடத்தை போன்றவை அவர்களின் கண் வளர்ச்சியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இது குறித்து, ஹைதராபாத், யசோதா மருத்துவமனை, கண்புரை கார்னியா & ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணர், மூத்த ஆலோசகர் மருத்துவர். பானு பிரகாஷ் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இந்த பிரச்சனைகள், உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது முன்னேறி விழித்திரைப் பற்றின்மை அல்லது கிளௌகோமா போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் குழந்தைகளில் கிட்டப்பார்வை அபாயத்தை அதிகரிக்கும் ஐந்து பழக்கங்கள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உங்க குழந்தை அதிகமா மொபைல் யூஸ் பண்றாங்களா? அப்ப இந்த பிரச்சனை எல்லாம் வரலாம்.

குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வையை அதிகரிப்பதற்கான பழக்கங்கள்

வெளியே விளையாடாமல் இருப்பது - போதுமான வெளிப்புற செயல்பாடு இல்லாமை

இயற்கை ஒளியானது கண் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. ஆராய்ச்சி ஒன்றில், ஒரு நாளைக்குக் குறைந்தது 1-2 மணிநேரம் வெளியே விளையாடும் குழந்தைகளுக்கு பார்வை வளரும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. மயோபியாவின் ஆபத்து குறைவானதாகும். அதே சமயம் வீட்டில் வசிக்கும் குழந்தைகளில் இந்த ஆபத்து அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகப்படியான திரை நேரம்

இன்றைய காலத்தில் குழந்தைகள் அதிக நேரம் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் அல்லது கணினிகளைப் பார்க்கும்போது, அவர்களின் கண்கள் தொடர்ந்து அருகிலுள்ள பொருட்களின் மீது கவனம் செலுத்துகின்றன. இந்நிலையில் அதிகப்படியான திரை நேரத்தின் காரணமாக, கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி, அவை நீளமாகி, கண் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர் பானு பிரகாஷ் அவர்கள் பகிர்ந்துள்ளார்.

காட்சி இடைவெளிகள் இல்லாமை

குழந்தைகள் இடைவெளி எதுவும் இல்லாமல், அதாவது குழந்தைகள் 20-20-20 விதியைப் பின்பற்றவில்லை என்றால்,கண் சோர்வு ஏற்படக்கூடும். இந்த பிரச்சனை அவர்களுக்குக் கிட்டப்பார்வை ஏற்படும் அபாயத்தைப் படிப்படியாக அதிகரிக்கிறது. மருத்துவரின் கூற்றுப்படி, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், ஒருவர் திரையில் இருந்து விலகி, 20 அடி தூரத்தில் உள்ள ஒன்றை 20 வினாடிகள் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

படிக்கும் போது மோசமான தோரணை

குழந்தைகள் புத்தகம் அல்லது திரைக்கு மிக அருகில் வைத்து படிக்கின்றனர். அதே போல, குறைந்த வெளிச்சத்தில் படிப்பது அல்லது கண்ணுக்கும் பொருளுக்கும் இடையே சரியான தூரத்தை பராமரிக்காமல் இருப்பது போன்றவை அவர்களின் கண்களைத் தொடர்ந்து பதற்றமடைகின்றன. இவை கண் பார்வையைப் பாதிக்கக்கூடியதாகவும், கிட்டப்பார்வைக்கு வழிவகுப்பதாகவும் அமைகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Eye Health Tips: குழந்தைகளை அதிகம் பாதிக்கும் கண் பார்வை குறைபாடு எப்படி தவிர்ப்பது?

வழக்கமான கண் பரிசோதனைகளைப் புறக்கணிப்பது

குழந்தைகள் பலரும் முதலில் மங்கலான பார்வை பிரச்சனை ஏற்படுவதை கவனிக்க தவறுகின்றனர். எனவே, கண் பரிசோதனையைச் செய்யத் தவறுபவர்கள், ஆரம்ப முன்னேற்றத்திற்கான வாய்ப்பும் மருத்துவரின் ஆலோசனையும் இழக்கப்படுகிறது. இது கிட்டப்பார்வை மோசமாவதற்கு வழிவகுக்கிறது.

முடிவுரை

குழந்தைகள் பின்பற்றக்கூடிய இந்த ஐந்து பழக்கவழக்கங்கள், அதாவது திரை நேரத்தை அதிகரிப்பது, வெளியே விளையாடாமல் இருப்பது, மோசமான தோரணை, கண்களுக்கு ஓய்வு அளிக்காமல் இருப்பது, வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை, கிட்டப்பார்வை (தொலைநோக்கு பார்வை) அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, சரியான நேரத்தில் வாழ்க்கை முறை மாற்றங்களைக் கையாள்வதன் மூலம் குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Myopia causes: நீண்ட நேர ஸ்க்ரீனின் நீல ஒளியால் மயோபியா ஏற்படுமா? இதை எப்படி தவிர்ப்பது?

Image Source: Freepik

Read Next

உங்க குழந்தைக்கு வலிப்பு வந்தா இந்த 5 விஷயங்களை முதலில் செய்யுங்க.. மருத்துவர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 09, 2025 21:29 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content