$
Ways To Protect Child Eyes And Vision: குழந்தையின் உடல் மிகவும் மென்மையானதாகும். இந்த சூழ்நிலையில் குழந்தைகளைப் பாதுகாப்பாக கவனித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் சிறிய கவனக்குறைவும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். அந்த வகையில் கண்கள் உடலின் மிக மென்மையான பகுதியாகும். அத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
இந்த காலகட்டத்தில் சிறு குழந்தைகள் கூட நீண்ட நேரம் மொபைல் அல்லது டிவி பார்ப்பது போன்றவற்றில் நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் குழந்தைகளின் கண்பார்வை பாதிக்கப்படலாம். மேலும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளாததன் காரணமாக குழந்தைகளின் கண்களைப் பாதிக்கப்படலாம். இந்த சூழ்நிலையில் குழந்தையின் கண்களை ஆரோக்கியமாக வைக்க என்ன செய்ய வேண்டும் என சாரதா கிளினிக் மருத்துவர் டாக்டர் கே.பி.சர்தானா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Thyroid In Children: குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டாக இருக்கலாம்!
குழந்தைகளின் கண்களைப் பாதுகாக்கும் முறை
ஆரோக்கியமான உணவு
குழந்தைகளின் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். குழந்தைகளின் உணவில் பழங்கள், பருப்புகள், பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு மிட்டாய்கள், சாக்லேட்டுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இதைத் தவிர, ஆம்லா, கேரட் மற்றும் ப்ரோக்கோலி போன்றவற்றை குழந்தைகளின் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

கூர்மையான பொருள்களைத் தள்ளி வைப்பது
குழந்தைகளிடமிருந்து கூர்மையான பொருள்களைத் தள்ளி வைப்பது அவசியமாகும். சில சமயங்களில் இதில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் நிறைந்திருக்கும். இந்த சூழ்நிலையில், கூர்மையான பொருள்களை குழந்தைகளிடமிருந்து வெகு தொலைவில் வைத்திருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் கூர்மையான பொருள்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம். குறிப்பாக, டேபிள் மூலைகள் போன்ற மற்ற கூர்மையான பொருள்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளை விளையாட வைப்பது
குழந்தைகளின் கண்பார்வையை பராமரிக்க, குறைந்தபட்சம் 1 மணி நேரம் வெளியே விளையாட அழைத்துச் செல்லலாம். வெளியில் விளையாடுவது, கண் தசைகளை வலுவடையச் செய்து பார்வைத் திறனை மேம்படுத்தலாம். குழந்தைகளை வெளியில் விளையாடச் செய்வது கண் பார்வையை மேம்படுத்துவதுடன், மனவளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Child Phone Addiction: குழந்தைகள் மொபைல் டிவி பார்க்காமல் சாப்பிட வைப்பது எப்படி?
சன்கிளாஸ் அணிவது
சன்கிளாஸ் அணிவதால் குழந்தையின் கண்கள் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். புறஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாப்பாக வைக்க கண்ணாடிகளை வாங்கலாம். குழந்தைகளுக்குக் கண்ணாடி வாங்கும் போது, அவற்றின் தரம் நன்றாக இருக்க வேண்டும்.

திரை நேரத்தை வரம்பிடுவது
டிஜிட்டல் சாதனங்களிலிருந்து வெளிவரும் நீலக்ததிர்கள் குழந்தைகளின் கண்களுக்கு மிகவும் ஆபத்தானதாகும். இது மங்கலான பார்வை மற்றும் கவனம் செலுத்துவதில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். இந்த சூழ்நிலையில் பகலில் குழந்தைகளுக்கு குறைந்தபட்ச நேரத்தைத் திரைகளைக் காட்ட வேண்டும். திரையைப் பார்த்த சில நிமிடங்களுக்குப் பிறகு குழந்தைகளை ஓய்வு எடுக்க வைக்க வேண்டும்.
இந்த முறைகளைக் கையாண்டு குழந்தைகளின் கண்களை ஆரோக்கியமாக வைக்கலாம். எனினும், குழந்தைகளின் கண் பிரச்சனை இருப்பின் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Children Mobile Radiation: மொபைல் கதிர்வீச்சால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள்!
Image Source: Freepik