$
Symptoms Of Thyroid In Children: தைராய்டு என்பது கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பி ஆகும். இது ஒரு பட்டாம்பூச்சி போன்ற வடிவத்தில் இருக்கும். இது குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு உதவும் ஹார்மோன்களை வெளியிடுகிறது. பெரியவர்களில், வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
பெரியவர்களுக்கு தைராய்டு பிரச்னை ஏற்படுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், குழந்தைகளுக்கு இது ஏற்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். குழந்தைகளுக்கு தைராய்டு பிரச்னை ஏற்படும். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஹைப்போ தைராய்டிசம் மற்றொன்று ஹைப்பர் தைராய்டிசம். இப்போது குழந்தைகளில் இந்த அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது என்று பார்ப்போம்.

ஹைப்போ தைராய்டிசம் (Hypothyroidism)
ஹார்மோன்கள் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டால், அது ஹைப்போ தைராய்டிசம். இது மரபணு ரீதியாக தோன்றும். பிறவி ஹைப்போ தைராய்டிசம் என்பது புதிதாகப் பிறந்த குழந்தைகளில் கண்டறியப்படும் பொதுவான பிரச்னையாகும். ஒரு பெண் கருத்தரிக்கும்போது தைராய்டு பிரச்னை வந்தால், அது குழந்தைக்கும் பரவும். ஆனால் எந்த வயதில் வெளிப்படும் என்று சொல்வது சற்று கடினம்.
அறிகுறிகள்
குழந்தைகளில் ஹைப்போ தைராய்டிசத்தின் சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. சோம்பல், ஆற்றல் இல்லாமை, மலச்சிக்கல், வறண்ட சருமம், குளிர் உணர்வு, தசைவலி போன்றவை காணப்படும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு தைராய்டு ஏற்படுவதற்கான காரணங்கள்..
ஹைப்பர் தைராய்டிசம் (Hyperthyroidism)
தைராய்டு சுரப்பிகள் அதிக வேலை செய்து, தேவைக்கு அதிகமாக ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் போது, அது ஹைப்பர் தைராய்டிசம் எனப்படும். இருப்பினும், இது குழந்தைகளில் அரிதாகவே காணப்படுகிறது. அதாவது 10,000 குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே இந்த நிலை இருக்கும்.

அறிகுறிகள்
வேகமான இதயத் துடிப்பு, வெப்பம், தீவிர பசி, எடை இழப்பு, கடுமையான குளிர், தூக்கப் பிரச்சினைகள், தசை பலவீனம் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஹைப்பர் தைராய்டிசம் அறிகுறிகளில் அடங்கும். இந்த அறிகுறிகள் இருந்தால், தங்கள் குழந்தைகள் ஹைப்பர் தைராய்டிசத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் அடையாளம் காண வேண்டும். எனவே, குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.
குழந்தைகளின் தைராய்டு அளவை சரிபார்க்க சோதனைகள் (TSH (தைராய்டு தூண்டுதல் ஹார்மோன்), T4 (தைராக்ஸின்) செய்யப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், தைராய்டு சுரப்பியின் கட்டமைப்பை மதிப்பிடுவதற்கு அல்ட்ராசவுண்ட் அல்லது பிற இமேஜிங் சோதனைகளும் செய்யப்படுகின்றன. இந்த சோதனைகள் குழந்தைக்கு தைராய்டு இருப்பதை உறுதிப்படுத்தினால், உடனடியாக சிகிச்சைக்காக நிபுணரை அணுக பரிந்துரைக்கப்படுகிறது. தாமதம் ஏற்பட்டால், பிரச்னை அதிகரித்து, குழந்தையின் உடலில் தீவிர மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.
Image Source: Freepik