Doctor Verified

World Thyroid Day 2024: தைராய்டு நோயின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர் விளக்கம் இங்கே…

  • SHARE
  • FOLLOW
World Thyroid Day 2024: தைராய்டு நோயின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர் விளக்கம் இங்கே…


இன்று உலக தைராய்டு தினத்தை முன்னிட்டு, தைராய்டு என்றால் என்ன? இது எப்படி செயபடும்? இதற்கான சோதனை என்ன? தைராய்டு நோய்க்கான சிகிச்சைமுறை என்ன? என்பது குறித்து, காட்டாங்குளத்தூரில் உள்ள SRM குளோபல் மருத்துவமனையின் முதியோர் பராமரிப்பு ஆலோசகர் மருத்துவர் நிவேதா இங்கே பகிர்ந்துள்ளார்.

தைராய்டு என்றால் என்ன?

தைராய்டு நோய் என்பது பத்தில் ஒரு பங்கு பாதிக்கப்படும் நோய் ஆகும். இது ஆண்களை விட பெண்களை அதிகம் தாக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு பிரச்னை இருந்தால், அது உங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தைராய்டு சுரப்பி கழுத்து பகுதியில் அமைந்திருக்கும். இது ஹார்மோன் சுரப்பதற்கும், நமது உடலில் செயல்பாட்டிற்கும் உதவுவதாக மருத்துவர் நிவேதா கூறினார். ஆனால் இது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் ஆபத்து தான்.

தைராய்டு வகைகளும் செயல்பாடுகளும்

தைராய்டு வகைகள் குறித்தும் அதன் செயல்பாடுகள் மற்றும் விளைவுகள் குறித்தும் மருத்துவர் விரிவாக பகிர்ந்துள்ளார். தைராய்டு பிரச்னை இரண்டு வகை படுத்தப்படுகிறது. ஒன்று ஹைப்போ தைராய்டிசம், மற்றொன்று ஹைப்பர் தைராய்டிசம். ஹார்மோன் குறைவாக சுரப்பதை ஹைப்போ தைராய்டிசம் என்றும், ஹார்மோன் அதிகமாக சுரப்பதை ஹைப்பர் தைராய்டிசம் என்றும் மருத்துவர் கூறினார்.

தைராய்டு சுரப்பி போதுமான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யாதபோது ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது, அதேசமயம் ஹைப்பர் தைராய்டிசம் அதிகப்படியான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த இரண்டு நிலைகளும் பெண்களை பாதிக்கும்.

இதையும் படிங்க: பெண்களை குறிவைக்கும் தைராய்டு நோய்.? இதன் அறிகுறிகள் என்ன.?

தைராய்டு நோயின் அறிகுறிகள் என்ன?

ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்பதை மருத்துவர் நிவேதா விவரித்துள்ளார்.

ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள்

  • சோர்வு
  • மனநிலை மாற்றம்
  • எடை அதிகரிப்பு
  • மெதுவான இதயத் துடிப்பு

ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகள்

  • வேகமான இதயத் துடிப்பு
  • கவலை
  • எடை இழப்பு
  • பதற்றம்

தைராய்டு சோதனை

மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை அறிந்தால், உடனடியாக இரத்த பரிசோதனை செய்துக்கொள்ளுமாறு மருத்துவர் நிவேதா அறிவுறித்தியுள்ளார். இரத்த பரிசோதனை மூலம் ஹார்மோன் அளவை சோதனை செய்து, ஒருவருக்கு தைராய்டு நோய் உள்ளதா என்பதை அறிய முடியும் என்று மருத்துவர் நிவேதா கூறினார்.

தைராய்டு சிகிச்சை முறை

இரத்த பரிசோதனையில் தைராய்டு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அதனை மருந்து மூலம் குணப்படுத்தலாம் என்று மருத்துவர் கூறினார். ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் காலை வெறும் வயிற்றில் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள், ஆன்டி தைராய்டு மருந்துகள் உட்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர் கூறினார். இவ்வாறு செய்தால் தைராய்டு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் நிவேதா கூறினார்.

தைராய்டு நோயாளிகள் தவிர்க்க வேண்டியவை

ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள் முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார். மேலும், உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர் நிவேதா அறிவுறுத்தினார்.

குறிப்புகள்

தைராய்டு நோயை மருத்துவம் மூலம் எளிதில் குறைக்கலாம் என்றும், இதற்கு கவலை தேவை இல்லை என்றும் மருத்துவர் நிவேதா கூறினார். மேலும் தைராய்டு அறிகுறிகள் உள்ளவர்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுகுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Read Next

Birth Control Weight Gain: கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் எடை அதிகரிக்குமா?

Disclaimer

குறிச்சொற்கள்