Ways To Prevent Malaria From Children: மழைக்காலம் வந்துவிட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பலவிதமான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதில் மழைக்காலத்தில் பரவும் பொதுவான நோய்களில் ஒன்றாக மலேரியா அமைகிறது. இது தேங்கி நிற்கும் தண்ணீரால் பரவும் கொசுக்களால் உண்டாவதாகும். சமீப காலமாக டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதுவும் கொசுக்களால் ஏற்படும் நோயாகும்.
கொசுக்களால் பரவக்கூடிய இந்த நோயினை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியமாகும். ஏனெனில் தீவிரமான நிலையை அடையும் போது இறப்பு கூட நேரிடலாம். இந்நிலையில் குழந்தைகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். இதில் குழந்தைகளுக்கு மலேரியாவைத் தடுப்பதற்கான சரியான வழிமுறைகள் குறித்து நவி மும்பை, மருத்துவக் காப்பீட்டு மருத்துவமனை குழந்தை நல மருத்துவர் டாக்டர்.நர்ஜோஹன் மெஷ்ராம் (குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைத் துறைத் தலைவர்) அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Child Stomach Pain: உங்க குழந்தைக்கு தீராத வயிற்று வலியா? இந்த ஆயுர்வேத வைத்தியங்களை டிரை பண்ணுங்க
குழந்தைகளில் மலேரியா ஏற்படுவதற்கான அறிகுறிகள்
நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கூற்றுப்படி, “மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள், பல வகையான நோய்கள் மற்றும் சிக்கல்களின் அறிகுறிகளை அனுபவிக்கலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு காய்ச்சல், நடுக்கம், தசைவலி, சோர்வு, தலைவலி போன்றவை ஏற்படலாம்.”
இது மட்டுமின்றி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை மலேரியாவிற்கான அறிகுறிகளாகும். மேலும், இது இரத்த சிவப்பணுக்களை சேதப்படுத்துகிறது.இவை இரத்த சோகை மற்றும் மஞ்சள் காமாலை போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தலாம். இதை நீண்ட காலமாகக் கண்டறியப்படாமல் இருப்பவர்களுக்கு தொற்று முன்னேறலாம். இது சிறுநீரக செயலிழப்பு, மனநலப் பிரச்சனைகள், கோமா போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
மலேரியாவைக் கண்டறியும் முறை
குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுவதை வைரஸ் காய்ச்சலாகக் கருதி, அதற்கு ஏற்றவாறு பெற்றோர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். அதே சமயம், மலேரியாவிற்கான சிகிச்சையானது வழக்கமான காய்ச்சலிலிருந்து வேறுபட்டதாகும். குழந்தைகளுக்கு மலேரியா ஏற்படும் போது, பத்து நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருக்கலாம் மற்றும் தொற்று நீண்ட காலம் நீடிக்கும். எனவே, 4 முதல் 5 நாள்கள் வரை காய்ச்சல் நீடித்திருப்பின், காய்ச்சல் குறையாத போது, குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு மலேரியா இருக்கிறதா? என்பதை இரத்தப் பரிசோதனை மூலம் மருத்துவரிடம் கண்டறிவர்.
இந்த பதிவும் உதவலாம்: Child Tooth Decay: உங்க குழந்தைக்கு பற்சொத்தை வராமல் தடுக்க இதெல்லாம் செய்யுங்க.
குழந்தைகளுக்கு மலேரியாவைத் தடுப்பதற்கான வழிகள்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மலேரியாவிலிருந்து பாதுகாப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கொசுக்கள் தடுப்பானைப் பயன்படுத்துதல்
கொசுக்களால் ஏற்படும் மலேரியாவைத் தடுக்க, வீட்டிற்குள் கொசுக்கள் வராமல் தடுக்க முயற்சிக்க வேண்டும். குறிப்பாக, மாலை நேரங்களில் கொசுக்கள் வீட்டிற்குள் வராதவாறு வீட்டின் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். மேலும் வீட்டிற்குள் கொசுவர்த்தி சுருள்களைப் பொருத்தலாம். குழந்தைகள் தூங்கும் முன்னரே கொசு தடுப்பானைப் பயன்படுத்தலாம்.
முழுக்கை ஆடைகள் அணிய வைத்தல்
கொசுக்கள் வேகமாகப் பரவும் இந்த காலகட்டத்தில், குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாடுவதை நிறுத்த முடியாது. இந்த சூழ்நிலையில், குழந்தைகளை முழுக்கை சட்டை அல்லது முழு பேன்ட் அணிவது முக்கியம். இதன் மூலம் கொசுக்கடியின் அபாயத்தைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Nuts For Babies: 6 மாத குழந்தைக்கு நட்ஸ் கொடுக்கணுமா? அப்ப இப்படி கொடுங்க.
மாலைப் பயணத்தைத் தவிர்த்தல்
மாலை நேரத்தில் குழந்தைகள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெளியில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பின், முழு பாதுகாப்பையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் கொசுக்கள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.
கொசுவலையில் குழந்தைகள் பயன்படுத்துதல்
வீட்டில் கொசுவர்த்தி சுருள் இருப்பினும், கொசுக்கள் வந்தால் குழந்தைகளைக் கொசுவலைக்குள் படுக்க வைக்கலாம். குறிப்பாக, வடிகால் உள்ள வீடுகளில் இது போன்ற நிலை ஏற்படலாம். மேலும் குழந்தை தூங்குவதற்கு முன் கொசு வலையைப் பயன்படுத்துவது நல்லது.
இந்த வகை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு மலேரியா ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Child Tuberculosis: குழந்தைக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா. அப்ப இது காசநோய் தான்
Image Source: Freepik