Ways To Prevent Tooth Decay: குழந்தைகளுக்கு பற்சொத்தை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவது அவசியமாகும். மேலும், குழந்தைகளின் வளர்ப்பில் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதில் பற்சொத்தையும் அடங்கும். இதைக் கவனிக்காமல் விட்டு விட்டால், பற்களை இழக்கும் அபாயம் ஏற்படலாம். எனவே குழந்தைகளின் பற்களில் சொத்தை உருவாகாமல் தடுப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்கள்
பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பற்சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பாலில் கலந்திருக்கும் இனிப்புகளே காரணமாகும். பெற்றோர்கள் பெரும்பாலும், இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுத்து விட்டு, உறங்க வைத்து விடுகின்றனர். இதனால், பாலில் உள்ள இனிப்புகள் வாயில் பாக்டீரியாவுடன் வினைபுரிந்து பற்களை சேதப்படுத்துகிறது.
எனவே சிறு குழந்தைகள் இனிப்பு உணவுகளை எடுத்துக் கொண்ட பிறகு, தண்ணீரால் வாயைக் கொப்பளிக்கும் பழக்கத்தை கற்றுத் தர வேண்டும். இதன் மூலம் இனிப்பால் ஏற்படும் வாய் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Nuts For Babies: 6 மாத குழந்தைக்கு நட்ஸ் கொடுக்கணுமா? அப்ப இப்படி கொடுங்க.
குழந்தைகள் அதிகம் விரும்பும் திண்பண்டங்களில் சாக்லேட், கேக் மற்றும் பிஸ்கட் போன்றவை அடங்கும். இவற்றை அடிக்கடி உண்பது, குழந்தைகளுக்கு பற்களில் சொத்தையை ஏற்படுத்தலாம். மேலும், சர்க்கரை அதிகம் கலந்த பால், குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதன் மூலம் பற்களில் சொத்தை ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு பற்சொத்தை வராமல் பாதுகாக்கும் முறைகள்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பற்சொத்தை வராமல் தடுக்க சில பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- சிறு குழந்தைகள் பால் அருந்திய பிறகு, ஒவ்வொரு முறையும் குழந்தையின் பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும். இதில் பெற்றோர்கள் தங்கள் விரலில் துணியைச் சுற்றி, குழந்தையின் ஈறுகளைச் சுத்தம் செய்யலாம்.
- குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும் போது, அவர்களுக்கென தனியாக பிரஸ் மற்றும் பேஸ்ட் பயன்படுத்தி காலை, இரவு இரு நேரங்களிலும் பற்கள் மற்றும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். இதில் 7 வயது குழந்தைக்கு பால் பற்கள் விழுந்து, நிரந்தரமாக பற்கள் முளைப்பதில் பிரச்சனை ஏற்படின், டனடியாக பல் மருத்துவரை நாடுவது நல்லது.
- குழந்தைகளுக்கு பற்சொத்தை சிறியதாக வர ஆரம்பித்தாலும் அதைக் கவனிக்காமல் விடக்கூடாது. இவ்வாறு கவனிக்காமல் விட்டால், பற்சொத்தை மற்ற பற்களையும் எளிதில் பாதிக்கலாம். எனவே தண்ணீர் கொண்டு வாயைக் கொப்பளிப்பது நல்லது.
- இனிப்பு நிறைந்த உணவை குழந்தைகள் சாப்பிட்ட பின், நார்ச்சத்துள்ள பழங்களைச் சாப்பிடலாம். இது பற்சொத்தை உருவாகாமல் தடுக்க உதவுகிறது.

இவ்வாறு குழந்தைகளுக்கு ஏற்படும் பற்சொத்தைக்கான காரணங்களை கண்டறிவதுடன், அதைத தவிர்க்க மேற்கூறிய நடவடிக்கைகளைக் கையாள வேண்டும். இது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதாக அமையும்.
இந்த பதிவும் உதவலாம்: Child Tuberculosis: குழந்தைக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா. அப்ப இது காசநோய் தான்
Image Source: Freepik