How to Get Rid of Tooth Decay in Children: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, முதுமையில் சந்திக்கும் பிரச்சனைகளை இளம் வயதிலேயே சந்திக்கும் சூழல் நிகழ்கிறது. இந்த குறிப்பிடப்பட்ட பிரச்சனையில் பற்சொத்தையும் அடங்கும். பெரும்பாலும் குழந்தைகளே பற்சொத்தையினால் மிகவும் அவதியுறுகின்றனர்.
குழந்தைகளுக்குப் பற்சொத்தை ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். எனினும், இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவது அவசியமாகும். மேலும் குழந்தைகளின் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதில் பற்சொத்தையும் அடங்குகிறது. இந்த பற்சொத்தையை நாம் கவனிக்காமல் விட்டு விட்டால், பற்களை இழக்கும் அபாயம் ஏற்படலாம். எனவே குழந்தைகளின் பற்களில் சொத்தை ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Mosquito Bites: கொசுக்கடியில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்!!
குழந்தைகளின் பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்கள்
பொதுவாக குழந்தைகளின் பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். முறையற்ற பற்சுத்தம், அதிக இனிப்பு உட்கொள்ளல், நீரிழப்பு, பாதுகாப்பற்ற முறைகள் போன்ற அனைத்தும் குழந்தைகளுக்கு பற்சொத்தை ஏற்படுத்துவதற்கான காரணங்களாக அமைகிறது. இது போன்ற சூழ்நிலையில் பற்களின் ஆரோக்கியத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.
குழந்தைகளுக்கு பற்சொத்தை வராமல் தடுக்க செய்ய வேண்டியவை
பற்சுத்தம் செய்வது
குழந்தைகள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் பற்சுத்தம் மிகவும் முக்கியமாகும். எனவே குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கத் துவங்கியவுடனே, அவர்களின் பற்கள் பராமரிப்பிற்கான முறைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மிருதுவான துணி அல்லது கைகளால் பற்களைத் துலக்க கற்றுக் கொள்ளலாம். இதனுடன், வாயை கொப்பளிக்கும் வழக்கத்தையும் இணைக்க வேண்டும். அதன் பிறகு, குழந்தைக்கு பிரஸ் பயன்படுத்தி, பற்களை சுத்தம் செய்யலாம். பற்களை மட்டும் சுத்தம் செய்யாமல் பற்களின் உட்புறத்தில் உள்ள ஈறுகள், கன்னங்கள் மற்றும் நாக்குகள் போன்றவற்றை பருத்தி துணி ஒன்றின் உதவியுடன் கிளிசரினை நனைத்து சுத்தம் செய்யலாம். பின் வாயை நன்றாக கொப்பளிக்க பழக்கி விட வேண்டும்.
பற்கள் ஆரோக்கியத்திற்கான பழங்கள்
பொதுவாக, ஆப்பிள் ஒரு இயற்கை டூத் பிரஷாகக் கருதப்படுகிறது. ஆப்பிளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைப்பதுடன் பற்களை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும், ஸ்ட்ராபெரிகளும் பற்களை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால், இதையும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இவை குழந்தைகளின் பற்களை ஆரோக்கியமாக வைப்பதுடன், சுத்தமாக வைக்கவும் உதவுகிறது. இந்த நல்ல முடிவுகளைப் பெற, இது போன்ற உணவுகளை குழந்தைகள் மென்று சாப்பிட வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Tooth Decay Cavities In Children: உங்க குழந்தைக்கு பற்களில் சொத்தை ஏற்படுவதை தவிர்க்க இதை செய்யுங்க!
பற்களின் ஆரோக்கியத்திற்கு நீர்ச்சத்துக்கள்
உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கும் நீர்ச்சத்து மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், பற்களின் ஆரோக்கியத்திலும் நீர்ச்சத்து முக்கியத்துவம் பெறுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். வாய் மற்றும் பற்கள் ஆரோக்கியத்திற்கு நீர்ச்சத்து மிகவும் முக்கியமானவையாகும். எனவே குழந்தைகளின் வாய் மற்றும் பற்கள் நீர்ச்சத்துடன் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வது மிகவும் கட்டாயம் ஆகும். எனவே குழந்தைகளுக்கு நாள் முழுவதும் தண்ணீர் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
வாயைப் கொப்பளிப்பது
குழந்தைகள் எங்கு சென்றாலும், பெற்றோர்கள் அவர்களுடன் தண்ணீர் எடுத்துச் செல்வது அவசியமாகிறது. இதில் குழந்தைகள் எதை சாப்பிட்டாலும், உடனே அவர்கள் வாயை கழுவிவிட வேண்டும். குழந்தை உறங்கும் போது தண்ணீர் அல்லது பால் பாட்டில் வாயில் இருக்கக் கூடாது. இவ்வாறு இருக்கும் போதும் குழந்தைகளுக்கு பற்சொத்தை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது விரைவாக பரவும் தன்மை கொண்டதாகும். எனவே குழந்தைகள் எதை சாப்பிட்டாலோ, பருகினாலோ உடனே வாயைக் கழுவ வைப்பதன் மூலம் பற்சொத்த பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். இதில் குறிப்பாக உணவு உண்ட பிறகு உணவு துகள்கள் அங்கேயே தங்கி பற்சொத்தையை உண்டாக்கலாம். எனவே குழந்தைகளுக்கு வாயைக் கொப்பளிப்பது நல்லது.
குழிகளை அடைப்பது
குழந்தைகளுக்கு பற்களில் குழிகள் இருப்பின், அதை எப்போதும் அடைப்பது மிகவும் நல்லது. அப்போது தான் எந்த உணவு சிக்கி இருப்பினும், அது அவர்களுக்கு பற்சொத்தையை ஏற்படுத்தாது. குழிகளை அடைத்த பிறகு பற்சொத்தை பிரச்சனைகள் மேலும் வராமல் தடுக்க முடியும். மேலும் இது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக அமையும்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பற்சொத்தை பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Child Tooth Decay: உங்க குழந்தைக்கு பற்சொத்தை வராமல் தடுக்க இதெல்லாம் செய்யுங்க.
Image Source: Freepik