திடீர் மாரடைப்பு; பிரபல நடிகர் ராஜேஷுக்கு என்ன ஆச்சு? - தனியாக இருக்கும் போது ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் ராஜேஷ் இன்று காலை திடீர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற அதிர்ச்சி செய்தி திரையுலகை உலுக்கி வருகிறது.
  • SHARE
  • FOLLOW
திடீர் மாரடைப்பு; பிரபல நடிகர் ராஜேஷுக்கு என்ன ஆச்சு? - தனியாக இருக்கும் போது ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன செய்ய வேண்டும்?


தமிழ் சினிமாவில் நடிப்பால் தனக்கென தனி முத்திரை பதித்த சில நடிகர்களில் ராஜேஷும் ஒருவர். அவரது மரண இரங்கலில் கூட “அந்த 7 நாட்களை மறக்க முடியுமா?”, “கன்னி பருவத்திலே” பட கதாபாத்திரம் கண்களிலேயே நிற்கிறது என்றெல்லாம் புலம்பி வருகின்றனர். அந்த அளவிற்கு தனது கதாபாத்திரங்களால் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

1974-ம் ஆண்டு கே. பாலசந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர், ஜோதிடம் மற்றும் ஆரோக்கியம் மீதான அதீத ஈர்ப்பு காரணமாக யூடியூப் சேனலில் அதுதொடர்பான பிரபலங்களை பேட்டி எடுத்து வெளியிட்டு வந்தார்.

75 வயதாகும் ராஜேஷுக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்ததாகவும், அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

திடீர் மாரடைப்பின் அறிகுறிகள் என்னென்ன?

  • மார்பு வலி அல்லது அசௌகரியம்
  • மார்பில் கனமான உணர்வு, இறுக்கம், அழுத்தம், வலி, எரிச்சல்
  • கைகள், இடது தோள்பட்டை, முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிற்று பகுதிகளில் வலி
  • சுவாசிப்பதில் சிரமம்/மூச்சுத் திணறல்
  • வியர்த்தல் அல்லது உடல் ஜில்லென மாறுவது
  • குமட்டல் அல்லது வாந்தி
  • தலைச்சுற்றல், மயக்கம் அல்லது உணர்வின்மை
  • கடுமையான பதற்றம், விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது இந்த அறிகுறிகளை எதிர்கொண்டால் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை மட்டும் செய்யுங்கள்.

தனியாக இருந்து மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஆம்புலன்ஸை அழையுங்கள்:

மாரடைப்பு ஏற்பட்டதாக சந்தேம் ஏற்பட்டால் மிக முக்கியமான விஷயம் அவசர மருத்துவ சேவைகளை அழைப்பதுதான். வேறு யாரையாவது தொடர்பு கொள்ள முயற்சிக்கும் முன் 108க்கு போன் செய்யுங்கள். இதன் மூலம் உடனடியாக உங்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வசதி கிடைப்பதோடு, முதலுதவியும் வழங்கப்படும். அதன் பின்னர் அருகே வசிக்கக்கூடிய நண்பர்கள் அல்லது அண்டை வீட்டாருக்கு போன் செய்து உதவி கேட்க மறக்காதீர்கள். ஆனால் அவர்களுடன் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பாக ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.

ஆஸ்பிரின் மெல்லுங்கள்:

325-மி.கி அல்லது இரண்டு பேபி ஆஸ்பிரின் 81-மி.கி மாத்திரைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். முதல் அறிகுறிகளின் 30 நிமிடங்களுக்குள் ஆஸ்பிரின் மென்று சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆஸ்பிரின் பிளேட்லெட் வளர்ச்சியைத் தடுக்கிறது. ஆஸ்பிரின் உட்கொள்வது மாரடைப்பின் போது உங்கள் தமனிகளை மேலும் தடுக்கக்கூடிய இரத்தக் கட்டிகள் உருவாவதை தாமதப்படுத்தும்.

ஆஸ்பிரின் விழுங்குவதற்கு பதிலாக அதை மென்று சாப்பிடுங்கள். ஆஸ்பிரின் மென்று சாப்பிடுவதன் மூலம், நீங்கள் மருந்தை நேரடியாக உங்கள் வயிற்றில் வெளியிடுகிறீர்கள், மேலும் அது உங்கள் இரத்த ஓட்டத்தில் சேரும் திறனை விரைவுபடுத்துகிறீர்கள். இதனால் விரைவான நிவாரணம் கிடைக்கும்.

 

எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீர்கள்:

மருத்துவமனைக்குச் செல்ல நீங்களே வண்டியை ஓட்டலாம் என்றும் மட்டும் நினைக்காதீர்கள். ஒருவேளை நீங்கள் கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்டிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டால் உடனே சாலையோரத்தில் நிறுத்திவிட்டு உதவி கோருவது தான் நல்லது. ஏனெனில் மாரடைப்பு ஏற்பட்டால் நீங்கள் மயக்கமடைய வாய்ப்புள்ளது. இதனால் தீவிரமான சாலை விபத்து ஏற்படக்கூடும்.

அமைதியாக இருங்கள்:

மாரடைப்பு எவ்வளவு பயமுறுத்துகிறதோ, அவசரமாகச் சுற்றித் திரிவது அல்லது உங்களை பீதி நிலைக்குத் தள்ளுவது பிரச்சினையை மோசமாக்கும். உங்கள் இதயத் துடிப்பை சீராகவும் அமைதியாகவும் வைத்திருக்க முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். உங்கள் இதயத் துடிப்பை மெதுவாக்குவதற்காக எண்களை எண்ண ஆரம்பியுங்கள்.

படுத்துக் கொள்ளுங்கள்:

கால்களை மேல்நோக்கி உயரமாக வைத்து நேராக நிமிர்ந்து படுத்துக்கொள்ளுங்கள். இதனால் நீங்கள் சுவாசிக்கவும் உங்கள் இரத்தத்திற்கு ஆக்ஸிஜனை வழங்கவும் உதவும்.

ஆழமாக சுவாசியுங்கள்:

காற்றை ஆழமாகவும், சீராகவும் சுவாசிக்கவும். மாரடைப்பு ஏற்படும் போது உங்கள் உள்ளுணர்வு வேகமாக சுவாசிக்க வேண்டும் என்று தோன்றினாலும், உங்கள் இரத்தத்திற்கும் இதயத்திற்கும் தொடர்ந்து ஆக்ஸிஜன் விநியோகத்தை பராமரிப்பதற்கான சிறந்த வழி மெதுவான, ஆழமான சுவாசத்தை எடுப்பதாகும். திறந்த ஜன்னல், திறந்த கதவு, மின்விசிறி அல்லது ஏர் கண்டிஷனரின் முன் படுத்துக் கொள்ளுங்கள். புதிய காற்றின் சீரான ஓட்டத்தை உங்களுக்கு வழங்குவது உங்கள் இதயத்திற்கு ஆக்ஸிஜனை வழங்க உதவும்.

உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்கவும்:

மாரடைப்பு ஏற்பட உடனேயே ஏதாவது சாப்பிடவோ அல்லது குடிக்கவோ தோன்றலாம். ஆனால் எக்காரணம் கொண்டு அதை செய்யக்கூடாது. ஆஸ்பிரின் தவிர வேறு எதையாவது சாப்பிடுவது, மருத்துவர்கள் உங்களுக்கு போதுமான சிகிச்சையை வழங்குவதை மிகவும் சிக்கலாக்கும். தேவைப்பட்டால், ஆஸ்பிரின் உங்கள் உடலில் சேர உதவும் வகையில் சிறிதளவு தண்ணீர் மட்டும் குடிக்கலாம்.

Image Source: Freepik

Read Next

ஹார்ட் அட்டேக் வராம இருக்க இந்த உணவுகளைக் கட்டாயம் உங்க டயட்ல சேர்க்காதீங்க

Disclaimer

குறிச்சொற்கள்