Waterborne Diseases: குழந்தைகளை எளிதில் தாக்கும் நீர் மூலம் பரவும் நோய்கள்! தடுக்கும் முறைகள் இங்கே

  • SHARE
  • FOLLOW
Waterborne Diseases: குழந்தைகளை எளிதில் தாக்கும் நீர் மூலம் பரவும் நோய்கள்! தடுக்கும் முறைகள் இங்கே

நீரினால் பரவும் நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைவது நோய்க்கிருமிகளே ஆகும். இந்த நோய்கள் யாரை வேண்டுமானாலும் பாதிக்கும். அதிலும் குறிப்பாக, குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில், குழந்தைகளுக்குப் பொதுவாக நோயெதிர்ப்புச் சக்தி குறைவாகவே காணப்படும். இது எளிதில் அவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. இதில் குழந்தைகளுக்கு நீரினால் பரவும் நோய்களின் தாக்கங்கள் மற்றும் அதனைத் தடுக்கும் முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகளைக் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வெயில் காலத்தில் குழந்தைகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள்! கவனம் தேவை..

நீர் மூலம் பரவும் நோயால் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கங்கள்

பொதுவாக அசுத்தமான நீரில் வைரஸ், பாக்டீரியாக்கள் போன்ற நோய்க்கிருமிகளின் தாக்கங்கள் அதிகளவு காணப்படும். இந்த அசுத்தமான நீர் ஆதாரங்களால் வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு காய்ச்சல் மற்றும் ஹெபடைடிஸ் ஏ போன்ற நோய்கள் ஏற்படலாம். இதனால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, கடுமையான நீரிழப்பு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மரணம் கூட ஏற்படலாம்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஆண்டுதோறும் சுமார் 1.4 மில்லியன் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் மட்டும் இறப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணத்திற்கு வயிற்றுப்போக்கே முக்கிய காரணமாகும். எனினும், குழந்தைகளுக்கு ஏற்படும் நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க சில ஆரோக்கியமாக வழிமுறைகளைக் கையாள்வது அவசியமாகும்.

நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும் முறைகள்

குழந்தைகளை நீர் மூலம் பரவும் நோய்களிலிருந்து பாதுகாக்க சில தடுப்பு மற்றும் பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றை இதில் காண்போம்.

சுத்தமான தண்ணீர் குடிப்பது

மழைக்காலத்தில் பரவும் பெரும்பாலான நோய்களுக்கு முக்கிய காரணம் தண்ணீர் ஆகும். இதனால் நோய்த்தொற்றுக்கான ஆபத்து அதிகரிக்கிறது. எனவே இதைத் தவிர்க்க சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதற்கு தண்ணீரை வடிகட்டுவது மட்டும் போதாது. தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிப்பது மிகவும் முக்கியமாகும். இது தவிர, தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ள கூரையில் மழை நீர் விழக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் நீர் மாசுபாடு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகளுக்கு உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள், அறிகுறிகள் அதனைத் தடுக்கும் முறைகளும்

சுகாதாரத்தைப் பராமரிப்பது

சுத்தமான நீரை அருந்துவது போல சுகாதாரத்தைப் பேணுவது மிகவும் முக்கியமாகும். ஏனெனில், மழைக்காலங்களில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் மிக எளிதாக வளரவும், பரவவும் ஆரம்பிக்கிறது. எனவே எந்தவொரு உணவுகளை சாப்பிடும் முன் அல்லது குடிக்கும் முன்னதாக கைகளை நன்கு கழுவ வேண்டும். கைகளை கழுவாமல் உணவுப் பொருள்கள் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் ஏதேனும் அழுக்குப் பொருள்களைத் தொட்ட பிறகு, கட்டாயம் கை கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் இவை வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

ஆரோக்கியமான உணவு

மழைக்காலத்தில் எந்த விதமான நோய்களும் வராமல் இருக்க மற்றொரு வழியாக அமைவது ஆரோக்கியமான உணவு உட்கொள்ளல் ஆகும். ஏனெனில், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலமே நோயெதிர்ப்பு சக்தியைச் சக்தியை அதிகரிக்க முடியும். அதே சமயம் நீர் மூலம் பரவும் நோய்களின் அபாயத்தையும் குறைக்கலாம். அதன் படி, உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். கூடுதலாக நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.

தண்ணீர் தேங்குவதைத் தவிர்ப்பது

வீடுகளிலும், வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் அழுக்கு நீர் தேங்குவதை அனுமதிக்கக் கூடாது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள படி, சுற்றுப் பகுதிகளில் அழுக்கு நீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் மலேரியா போன்ற நோய்கள் ஏற்படலாம். அதே போல, வீட்டில் உள்ள கூலர், குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றை அவ்வப்போது சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். மேலும் வீட்டில் ஏதேனும் பாத்திரம் ஒன்றில் தண்ணீரை சேமித்து வைத்தால், அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில், நீண்ட நேரம் தண்ணீரை சேமித்து வைப்பது கொசுக்கள் உற்பத்திக்குக் காரணமாகிறது.

இந்த வகை பராமரிப்பு முறைகளைக் கையாள்வதன் மூலம் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் நீர் மூலம் பரவும் நோய்களிலிருந்து விடுபட முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Newborn Cold Reducing Tips: புதிதாக பிறந்த குழந்தைக்கு சளி மற்றும் இருமலைக் குறைக்க இதெல்லாம் ஃபாலோப் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

குழந்தைக்கு பாதாம் பருப்பை இப்படி கொடுத்தால் எடை ஆரோக்கியமாக கூடும்!

Disclaimer