Waterborne Diseases: மக்களே உஷார்… மழைக்காலத்தில் இந்த கொடிய நோய்கள் நீரின் மூலம் பரவுமாம்!

  • SHARE
  • FOLLOW
Waterborne Diseases: மக்களே உஷார்… மழைக்காலத்தில் இந்த கொடிய நோய்கள் நீரின் மூலம் பரவுமாம்!


அழுக்கு நீர்நிலைகள் மூலம் பரவும் நோய்கள், சில நாட்கள் அல்லது வாரங்கள் வரை நீடிக்கும். எனவே, மழைக்காலத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குடிக்கும் நீரை காயவைத்து குடிப்பது, இருக்கும் இடத்தில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது என பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீரினால் பரவும் சில நோய்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Asthma During Monsoon: மழைக்காலத்தில் ஆஸ்துமாவை தடுக்கும் முறைகள்…

மழைக்காலத்தில் நீர் மூலம் பரவும் நோய்கள் எவை?

டைபாய்டு

இந்தியாவில் மிகவும் பொதுவான மழைக்கால நோய்களில் ஒன்று டைபாய்டு. ஒரு நபர் அசுத்தமான உணவு அல்லது அழுக்கு நீரைப் பயன்படுத்துவதன் மூலம் டைபாய்டு நோய் ஏற்படும். இதன் அறிகுறிகள் பற்றி கூறினால், படிப்படியாக காய்ச்சல் அதிகரிக்கும், தசை வலி, சோர்வு, அதிக வியர்வை, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.

காலரா

காலரா என்பது மழைக்காலத்தில் ஏற்படும் மற்றொரு பொதுவான மற்றும் நீரினால் பரவும் நோயாகும். காலரா வயிற்றுப்போக்கு, நீரிழப்பு மற்றும் பல அபாயங்களை ஏற்படுத்தும். சுத்தமான தண்ணீர் மற்றும் சூடான உணவுகளை உட்கொள்வது காலராவைத் தவிர்க்க உதவும். இதன் அறிகுறிகள் பற்றி கூறினால், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தசைப்பிடிப்பு போன்றவை ஏற்படும்.

இந்த பதிவும் உதவலாம் : குளிர்காலத்தில் வரும் திடீர் வெயிலின் போது வெளியே செல்லலாமா?

ஹெபடைடிஸ் ஏ

ஹெபடைடிஸ் ஏ (Hepatitis A) என்பது தண்ணீரால் பரவும் நோயாகும். இது நமது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இது அழுக்கு நீர் மூலமாகவோ அல்லது ஹெபடைடிஸ் ஏ நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்தோ மற்றவருக்கு பரவலாம். இது மஞ்சள் காமாலை, வாந்தி, காய்ச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்தும். சோர்வு, களிமண் நிற மலம், குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்று வலி, பசியின்மை, திடீர் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

வயிற்றுப்போக்கு

பேதி, வயிற்றுப்போக்கு (Dysentery) என்பது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் மலத்தில் இரத்தம் அல்லது சளி வெளியேறும் ஒரு நீர்வழி நோயாகும். இந்த நோயை தவிர்க்க, உங்கள் கைகளை கழுவுவதே சிறந்த வழிமுறையாகும். இது, மோசமான சுகாதாரத்தின் மூலம் பரவும் ஒரு நோய். பாதுகாப்பற்ற உணவு மற்றும் தண்ணீரில் உள்ள பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது ஒட்டுண்ணிகள் மற்றும் மலத்துடன் தொடர்பு கொள்ளும் நபர்களால் இது ஏற்படலாம். வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குமட்டல், வாந்தி மற்றும் நீரிழப்பு ஆகியவை இதன் அறிகுறிகள்.

இந்த பதிவும் உதவலாம் : Thyroid Food: மழைக்காலத்தில் தைராய்டு நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?

சால்மோனெல்லா

சால்மோனெல்லாவின் (Salmonella) பெரும்பாலான நிகழ்வுகள் உணவு அல்லது அசுத்தமான தண்ணீரை உட்கொள்வதால் வருகிறது. வேகவைக்கப்படாத இறைச்சி, முட்டைப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றால் இந்த தொற்று ஏற்படலாம். இது பெரும்பாலும், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள். இதன் அறிகுறிகள் பற்றி பேசினால், மலத்தில் இரத்தம், குளிர், தலைவலி, வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகள் தோன்றும்.

ஜியார்டியா (Giardia)

இந்த நீரினால் பரவும் நோய் அசுத்தமான நீர் மூலம் பரவுகிறது. இந்த தொற்று ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. இவை சில வாரங்களில் குணமாகும் தொற்று ஆகும். இருப்பினும், பாதிக்கப்பட்ட நபர் குடல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதன் அறிகுறிகள், வயிற்று வலி, பிடிப்புகள் மற்றும் வீக்கம், வயிற்றுப்போக்கு, குமட்டல், எடை இழப்பு ஆகியவை.

இந்த பதிவும் உதவலாம் : விடிய விடிய கொட்டித் தீர்க்கும் கனமழை.! இந்த நோயெல்லாம் வரலாம்..

என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

தூய்மையைக் கவனியுங்கள்: மழைக்காலத்தில் தண்ணீர் அருந்துவதற்கு முன், அந்தத் தண்ணீர் சுத்தமாகவும், குடிப்பதற்குத் தகுந்ததாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் நகரங்களில் வசிக்கிறீர்கள் என்றால், ஒரு நல்ல இடத்தில் பாட்டில் தண்ணீரை வாங்கவும்.

தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்தவும்: மழைக்காலத்தில் தண்ணீரைக் குடிப்பதற்கு முன், தண்ணீரைக் கொதிக்கவைக்கவும் அல்லது சரியாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தவும். இதன் மூலம் மற்ற கிருமிகள் மற்றும் நோய்க்கிருமிகளை தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Winter Migraines Treatment: குளிர்கால ஒற்றைத் தலைவலி நீங்க இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க.

மூடிய டிஸ்பென்சர்களைப் பயன்படுத்தவும்: நீங்கள் ஒரு பொது இடத்தில் இருந்தால், தண்ணீர் வழங்கும் சாதனத்தில் இருந்து தண்ணீர் குடிக்க வசதி இருந்தால், சரியான சுகாதாரத்தை கவனித்துக் கொள்ளுங்கள். டிஸ்பென்சர் சரியாக சுத்தம் செய்யப்பட்டு குடிப்பதற்கு ஏற்றதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

பாத்திரங்களின் தூய்மை: குடிநீருக்கு உங்கள் வீட்டில் பாத்திரங்களை பயன்படுத்தினால், பாத்திரங்களின் தூய்மையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். அவற்றை அடிக்கடி கழுவி, சுத்தமான தண்ணீரில் கழுவி உலர வைக்கவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Water Borne Diseases: உஷார்.! கொட்டும் மழையில் பரவும் நோய்க்கான அறிகுறிகள் இது தான்!

Disclaimer