Remedies to Control Thyroid Symptoms in rainy season: குளிர்காலம் துவங்கிவிட்டது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த காலகட்டத்தில், சளி, இருமல், காய்ச்சல் தொண்டை வலி என பல்வேறு நோய் தொற்றுக்கள் அபாயமும் அதிகரிக்கும். மழைக்காலத்தில் வெப்பநிலை குறைவாக இருப்பதால், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் பல்வேறு பிரச்சினையை சந்திக்க நேரிடும்.
தைராய்டு என்பது ஒரு நபரின் கழுத்தில் இருக்கும் ஒரு சுரப்பி. இது தைராய்டு எனப்படும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி வெளியிடுகிறது. அது பாதிக்கப்படும் போது அது ஓவர் ஆக்டிவ் மற்றும் அண்டர் ஆக்டிவ் ஆகிவிடும். இதைத்தான் தைராய்டு பிரச்சனை என கூறுகின்றனர். தைராய்டு பாதிப்பு ஏற்பட்டால், அவரின் எடை மிக வேகமாக அதிகரிக்கும் அல்லது குறையும். குளிர் அல்லது மழைக்காலத்தில் தைராய்டு சுரப்பியை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Thyroid In Children: குழந்தைகளுக்கு தைராய்டு ஏற்படுவதற்கான காரணங்களும், அறிகுறிகளும்
மழைக்காலத்தில் தைராய்டு அறிகுறிகளைக் குறைக்க என்ன செய்யணும்?

உடலை சூடான வைக்கும் ஆடைகளைப் பயன்படுத்துங்கள்
வெப்பநிலை குறைவது தைராய்டை மேலும் பாதிக்கலாம், இதனால் தைராய்டு உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். இந்நிலையில், உடலை சூடாக வைக்கும் ஆடைகளை அணிவது குளிர்ச்சியைத் தவிர்ப்பதற்கும் தைராய்டைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு எளிய வழியாகும். நீங்கள் குளிர்காலத்தில் உங்கள் தொண்டையை மறைக்க்கும் வகையில் ஆடைகளை அணிய வேண்டும், இது தொண்டை தொடர்பான பிற பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும்.
சீரான ஊட்டச்சத்து உணவுகளை உண்ணவும்

மழை அல்லது குளிர்காலத்தில், மக்கள் தங்கள் உணவில் சத்துள்ள பொருட்களை அதிகப்படுத்த வேண்டும். சத்தான உணவை உட்கொள்வது தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்துகிறது. தைராய்டு ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகக் கருதப்படும் அயோடின், செலினியம் மற்றும் துத்தநாகம் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மீன், கொட்டைகள், விதைகள் மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : Thyroid foods: தைராய்டு நோயாளிகள் இனிப்பு சாப்பிடுவது நல்லதா? இதோ உங்களுக்கான பதில்
உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும்
தைராய்டு ஆரோக்கியத்திற்கு உடல் நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக வறண்ட குளிர்கால மாதங்களில் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும், நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனையும் உங்களுக்கு உங்களுக்கு வராது. நீரிழப்பு தைராய்டு பிரச்சனைகளை அதிகரிக்கும்.
தொடர்ந்து உடற்பயிற்சி

மழைக்காலம் வெளிப்புற உடற்பயிற்சிக்கு இடையூறாக இருக்கலாம், ஆனால் தைராய்டை கட்டுப்படுத்தவும் உடல் செயல்பாடுகளை பராமரிக்கவும் வீட்டில் உடற்பயிற்சி செய்யலாம். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க யோகா அல்லது வீட்டு உடற்பயிற்சிகள் போன்ற உட்புற உடற்பயிற்சிகளை இணைக்கவும். உடற்பயிற்சி எடையைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், மேம்பட்ட மனநிலை மற்றும் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Thyroid Diet Plan: தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்?
வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ்
குளிர்கால மாதங்களில் சூரிய ஒளியின் வெளிப்பாடு குறைவது வைட்டமின் டி அளவை பாதிக்கும், இது தைராய்டு கோளாறுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான அளவு வைட்டமின் டியை பெற, அதன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். வைட்டமின் டி சோர்வைக் குறைக்கவும் தைராய்டைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
குளிர் அல்லது மழைக்காலத்தில், பெரும்பாலான மக்கள் சோர்வு, பலவீனம், குளிர், மனச்சோர்வு, மலச்சிக்கல் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற ஹைப்போ தைராய்டிசம் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் ஒரு மருத்துவரை அணுகலாம். மேலும், தைராய்டு பிரச்சனையை அலட்சியம் செய்யாதீர்கள். மருத்துவரிடம் ஆலோசிக்காமல் எந்த விதமான மருந்துகள், சப்ளிமெண்ட்ஸ், உணவில் மாற்றம் செய்யாதீர்கள்.
Pic Courtesy: Freepik