Thu Oct 29, 2026 | 04:27 PM IST

Thyroid Diet: தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் பால் குடிக்கலாமா? டாக்டர் கூறுவது இங்கே!

Thyroid Diet: தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் பால் குடிக்கலாமா? டாக்டர் கூறுவது இங்கே!Thyroid Diet: தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் பால் குடிக்கலாமா? டாக்டர் கூறுவது இங்கே!

Can thyroid patients drink milk: மிகவும் பொதுவானதாக கருதப்படும் பிரச்சனைகளில் ஒன்று தைராய்டு. பெரும்பாலும் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக சில பெண்களுக்கு தைராய்டு இருப்பதே தெரியாது. தைராய்டு என்பது கழுத்துக்கு அருகில் உள்ள பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். இது உடலின் உறுப்புகளை சரியாக செயல்பட வைக்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த சுரப்பி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஹார்மோன்களை வெளியிட்டால் அது தைராய்டாக மாறும்.

தைராய்டு சுரப்பியானது உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாமல் போனால், அது ஹைப்போ தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பிரச்சனை அடிக்கடி காணப்படுகிறது. குறிப்பாக, தைராய்டு சுரப்பியில் இருந்து டி3 மற்றும் டி4 ஹார்மோன்களின் வெளியீடு குறைகிறது. அதைக் கட்டுக்குள் வைத்திருக்க, சரியான உணவுப் பழக்கம் அவசியம். உணவில் தைராய்டை அதிகரிக்கும் பல விஷயங்கள் உள்ளன. இதனால், சில நோயாளிகள் பால் அருந்துவதை தவிர்க்கின்றனர். பால் உண்மையில் தைராய்டை அதிகரிக்குமா? என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Thyroid foods: தைராய்டு நோயாளிகள் இனிப்பு சாப்பிடுவது நல்லதா? இதோ உங்களுக்கான பதில்

தைராய்டு நோயாளிகள் பால் குடிக்கலாமா?

நிபுணர்களின் கூற்றுப்படி, தைராய்டு நோயாளிகள் அயோடின் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்தலாம். இது தவிர, வைட்டமின் டி உட்கொள்வது தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் பால் மற்றும் பால் பொருட்களில் உள்ளன.

எனவே, நீங்கள் பால் குடித்தால், அது உங்களுக்கு நன்மை பயக்கும். ஆனால், அது சில சமயங்களில் தீங்கு விளைவிக்கும். ஏனெனில், பாலில் கால்சியம் உள்ளது. இது நீங்கள் தைராய்டு கட்டுப்பாட்டு மருந்துகளை எடுத்துக் கொண்டால், கால்சியம் மருந்தை உறிஞ்சுவதில் தலையிடலாம். பால் குடிப்பது மருந்தின் செயல்திறனைக் குறைக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Thyroid Diet Plan: தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்?

பாலில் உள்ள கால்சியம், தைராய்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் லெவோதைராக்ஸின் என்ற மருந்துடன் வினைபுரியும். எனவே, நீங்கள் தைராய்டு மருந்துகளை எடுத்துக் கொண்டால், பால் மற்றும் மருந்துகளுக்கு இடையில் குறைந்தது நான்கு மணிநேர இடைவெளியை வைத்திருக்க வேண்டும். இது மருந்தின் செயல்திறனைக் குறைக்காது மற்றும் கால்சியம் மற்றும் அயோடினையும் வழங்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

→ Red Grapes Benefits: சிறுநீரக பிரச்சினையால் அவதியா? இந்த ஒரு பழத்தை 7 நாள் மட்டும் சாப்பிடுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.