Asthma During Monsoon: மழைக்காலத்தில் ஆஸ்துமாவை தடுக்கும் முறைகள்…

  • SHARE
  • FOLLOW
Asthma During Monsoon: மழைக்காலத்தில் ஆஸ்துமாவை தடுக்கும் முறைகள்…

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வரும் டிசம்பர் 3ஆம் தேதி புயலாக வலுபெறும் எனவும், டிசம்பர் 4ஆம் தேதி அன்று வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயலாக கரைய கடக்கும் என்றும் வானைலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung) என்று பெயரிடப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் ஆஸ்துமாவை நிர்வகிப்பது மிகவும் கடினமான ஒன்று. இதற்கு நல்ல சுவாச ஆரோக்கியத்தை பேணுவது மிக அவசியம். மழைக்காலத்தில் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த  உங்களுக்கான சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 

மழைக்காலத்தில் ஆஸ்துமாவை தடுக்கும் முறைகள்

1. வானிலை நிலைமைகளை கண்காணிக்கவும்: 

நீங்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர் என்றால் வெளியே செல்வதற்கு முன் வானிலை நிலைகளை அறிந்திருக்க வேண்டும். அதிக மழை அல்லது அதிக ஈரப்பதம் உள்ள நிலைகளில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை ஆஸ்துமா அறிகுறிகளை தூண்டும். 

2. உட்புற காற்றின் தரத்தை பராமரிக்கவும்: 

நீங்கள் வசிக்கும் இடங்களை சுற்றமாக வைத்துக்கொள்ளவும். தூசி மற்றும் ஒவ்வாமை அற்றவையாக வைத்திருக்கவும். ஆஸ்துமா தூண்டுதல்களின் அபாயத்தை குறைக்க காற்று சுத்திகரிப்பு கருவிகளை பயன்படுத்த வேண்டும். 

இதையும் படிங்க: frequent cold and cough: தொடர் இருமல், சளி என்பது சாதாரண விஷயமல்ல!

3. மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்: 

உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆஸ்துமா மருந்துகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் இன்ஹேலர்களை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். இதனை தவராமல் பயன்படுத்த வேண்டும். 

4. ஒவ்வாமையை தவிர்க்கவும்: 

தும்பல் ஏற்படும் வகையில் தூசி, வாசனை போன்ற ஒவ்வாமையிலிருந்து விககி இருக்க வேண்டும். தூசிகள் வீட்டில் நுழையாமல் இருக்க ஜன்னல்களை எப்போதும் மூடியே வைத்துக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே சுற்றமாக வைத்துக்கொள்ளவும். 

5. சுய-கவனிப்பு:

சீரான உணவு, ஒழுங்கான உடற்பயிற்சி, போதுமான ஓய்வு பெறுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க முடியும். அதற்கு சுய கவனிப்பு அவசியம். இதற்கு உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். 

குறிப்பு

உங்கள் உடல்நல பராமரிப்பு வழங்குனரை தவறாமல் கலந்தாலோசிக்கவும், உங்கள் செயல் திட்டத்தை புதுப்பிக்கவும் மற்றும் மழைக்காலத்தில் ஆஸ்துமா மேலாண்மை தொடர்பான ஏதேனும் குறிப்பிட்ட கவலைகளைப் பற்றி விவாதிக்கவும்.

Read Next

HIV and AIDS: எய்ட்ஸ் நோயாளியை தொட்டாலே நோய் பரவுமா? HIV குறித்த கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

Disclaimer

குறிச்சொற்கள்