Sat Sep 12, 2026 | 12:46 AM IST

Water Borne Diseases: உஷார்.! கொட்டும் மழையில் பரவும் நோய்க்கான அறிகுறிகள் இது தான்!

Water Borne Diseases: மழை அதிகமாக பெய்யும் காலகட்டத்தில் மக்கள் பல்வேறு விதமான நோய்களைச் சந்திக்கும் சூழல் ஏற்படும். இவை நீர் மூலம் பரவும் நோய்கள் எனப்படுகின்றன. இவை தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள், நீரில் காணப்படும் அசுத்தங்கள் மற்றும் இன்னும் பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. இந்த நீர் மூலம் பரவும் நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதன் தடுப்பு முறைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

நீர் மூலம் பரவும் நோய்க்கான காரணங்கள் (Water Borne Diseases Causes)

பொதுவாக நீர் மூலங்களில் நோய்க்கிருமி நுண்ணுயிர்கள் மற்றும் அசுத்தங்கள் இருப்பதை நாம் கவனித்திருப்போம். இதன் காரணமாகவே, நோய்கள் உருவாகின்றன. மேலும், இந்த நோய்களுக்கான காரணங்கள் பன்முகத்தன்மை கொண்டவையாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Arthritis Symptoms And Foods: ஆர்த்ரிடிஸ் அறிகுறிகளும், ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளும் இங்கே

போதிய சுகாதாரமின்மை

முறையான கழிவுநீர் மேலாண்மை அமைப்புகள், கழிப்பறைகள் போன்ற சுகாதார வசதிகள், நீர் ஆதாரம் மாசுபடுவதற்குக் காரணமாகின்றன. முறையற்ற முறையில் உள்ள கழிவறைகள், சுத்திகரிப்பு வசதிகள் இல்லாதது போன்றவை நோய்க்கிருமிகளை நீர் மூலம் பரப்புகின்றன.

தொழில்துறை வெளியேற்றம்

தொழில்துறை நடவடிக்கைகள் மாசுபடுத்திகள் மற்றும் நச்சுப்பொருள்களை, நீர் உள்ள ஆதாரங்களில் வெளியிடுவது ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்த நச்சுப்பொருள்கள் மற்றும் மாசுபடுத்திகள், தண்ணீரை மாசுபடுத்தலாம். இதன் மூலம் நீரினால் பரவும் நோய்களும் வளர்ச்சியடைகிறது.

நுண்ணுயிர் மாசுபாடு

பாக்டீரியாக்கள், வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்றவற்றால் நீர் மாசுபாடு ஏற்படுகிறது. இவை காலரா, டைபாய்டு, ஜியாடியாசிஸ், கிரிப்டோஸ்போரிடியோசிஸ், மற்றும் ஜியார்டியாசிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்தலாம். இந்த நுண்ணுயிர்கள் பல்வேறு வழிகளில் நீர் ஆதாரங்களில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Pneumonia In Winter: குளிர்காலத்தில் இந்த அறிகுறி எல்லாம் இருக்கா? அப்ப இது நிம்மோனியா தான்.

அசுத்தமான குடிநீர்

முறையாக கிருமி நீக்க செய்யப்படாத அல்லது போதிய சிகிச்சைக்கு உட்படுத்தப்படாத குடிநீரை அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம்.

நீர் மூலம் பரவும் நோய்க்கான அறிகுறிகள் (Signs And Symptoms Of Waterborne Diseases)

இதில் நீரினால் பரவும் நோய்களின் பல்வேறு காரணங்களின் அடிப்படையிலேயே அதன் அறிகுறிகளும் அடங்கும். இவற்றில் சில பொதுவாக அறிகுறிகளைக் காணலாம்.

  • குமட்டல் மற்றும் வாந்தி
  • காய்ச்சல்
  • வயிற்று வலி மற்றும் தசை பிடிப்புகள்
  • மஞ்சள் காமாலை
  • வயிற்றுப்போக்கு
  • தோல் தடிப்புகள்
  • இருமல் மற்றும் தொண்டை புண்
  • சுவாசிப்பதில் சிரமம்

இவை டைபாய்டு, காலரா, ஜியார்டியா, ஹெபடைடிஸ் ஏ போன்ற பல்வேறு நோய்க்கான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Winter Migraines Treatment: குளிர்கால ஒற்றைத் தலைவலி நீங்க இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க.

Image Source: Freepik

Read Next

குளிர்காலத்தில் வரும் திடீர் வெயிலின் போது வெளியே செல்லலாமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content