Arthritis Symptoms And Foods: ஆர்த்ரிடிஸ் அறிகுறிகளும், ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளும் இங்கே

  • SHARE
  • FOLLOW
Arthritis Symptoms And Foods: ஆர்த்ரிடிஸ் அறிகுறிகளும், ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளும் இங்கே


ஆர்த்ரிடிஸ் இருப்பதற்கான அறிகுறிகள்

ஆர்த்ரிடிஸ் அல்லது முடக்குவாதம் ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.

மூட்டுகளில் விறைப்பு

ஆர்த்ரிடிஸ் நோயின் முக்கிய அறிகுறி, ஒன்றுக்கு மேற்பட்ட சிறிய மூட்டுகளில் விறைப்புத் தன்மை ஏற்படுவதாகும். சாதாரணமாக ஓய்வில் இருக்கும் போதும் இது நிகழலாம். பொதுவாக விறைப்பு கைகள், மூட்டுகளில் தொடங்குகிறது. இது பொதுவாக ஆரம்ப அறிகுறியாகும். திடீரென தொடங்கும் இந்த அறிகுறி, தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு நாள்களில் மூட்டுக்களை அதிகம் தாக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Appetite Loss: பசியின்மை வர காரணம் என்ன? இதை சரிசெய்வது எப்படி?

குறைவான மூட்டு இயக்கம்

மூட்டுகளில் ஏற்படும் அழற்சியானது தசைநாண்கள் மற்றும் தசைநார்களை சிதைந்ததாகவோ அல்லது நிலையற்றதாகவோ மாற்றலாம். ஆர்த்ரிடிஸ் முன்னேறும் சமயத்தில் கால்களை வளைக்க அல்லது நேராக்க முடியாமல் போகலாம். ஆனால், பலரும் இந்நிலையின் தீவிரத்தை உணர்வதில்லை. இந்த சமயத்தில் மூட்டுகளை இயக்குவதில் சிரமம் உண்டாகலாம்.

உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு

தசை நாண்கள் அழற்சி நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது கார்பல் டன்னல் நோய்க்குறி என அழைக்கப்படுகிறது. கைகளில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு அல்லது எரியும் உணர்வை ஏற்படுத்தும். நகரும் போது, மூட்டுக்களுக்கு எதிராக சேதமடைந்த குருத்தெலும்பு நகர்வதால் கை அல்லது கால்களில் சத்தம் வெடிக்கலாம். இந்த சத்தம் ஆர்த்ரிடிஸ் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

இது போன்ற பல்வேறு அறிகுறிகள் ஆர்த்ரிடிஸ் இருப்பதை உணர்த்துகிறது.

ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

மேலே கூறப்பட்ட அறிகுறிகளை உணர்ந்த பிறகு, ஆர்த்ரிடிஸ் தீவிரமாகாமல் தடுக்க சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வழக்கமாக உணவு முறையில் சில குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்ப்பது ஆர்த்ரிடிஸ் பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Asthma During Monsoon: மழைக்காலத்தில் ஆஸ்துமாவை தடுக்கும் முறைகள்

பால் பொருள்கள்

பாலில் அதிக கால்சியம் மற்றும் புரதங்கள் நிறைந்திருக்கின்றன. இவை ஊட்டச்சத்து மிக்கதாக இருந்தாலும், இவற்றில் சில அழற்சியைத் தூண்டும் பண்புகளும் இருக்கின்றன. எனவே ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள் பால் தொடர்பான க்ரீம், சீஸ், வெண்ணெய், தயிர் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிக சர்க்கரை உணவுகள்

அதிகளவிலான சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள், சோடா, பழச்சாறுகள் போன்ற பானங்களில் சர்க்கரை அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. இவற்றைச் சேர்த்துக் கொள்ளும் போது உடலில் உள்ள எலும்புகள் உள்ளிட்டவையும் முதுமை அடைகின்றன. இதன் காரணமாக ஆர்த்ரிடிஸ், கீழ்வாதம் போன்ற பிரச்சனைகளும் உண்டாகலாம்.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்

இந்த உணவுகள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிக்கக் காரணமாகிறது. இது உடலில் வீக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. பாஸ்தா, குக்கீஸ், வெள்ளை ரொட்டி போன்றவை சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டிருக்கிறது. இந்த குளுட்டன் நிறைந்த உணவுப் பொருள்கள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே இந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Lower Blood Pressure: இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?

சிவப்பிறைச்சி

இதில் அதிக அளவிலான சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இது இன்பிளமேஷன்களை அதிகரிக்கச் செய்வதுடன், உடலில் கொழுப்பு அளவையும் அதிகரிக்கிறது. குறிப்பாக, க்ரில் மற்றும் வறுத்த சிவப்பிறைச்சிகளில் உள்ள அதிகப்படியான கிளைக்கோசைலேஷன்கள் கீழ்வாதம் போன்ற தொற்றுக்களில் விகிதத்தை அதிகமாக்கலாம். எனவே ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள் கட்டாயம் சிவப்பிறைச்சியைத் தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

இந வகை உணவுகள் கீழ்வாதம், ஆர்த்ரிடிஸ் பிரச்சனைகளை உண்டாக்குவதற்கான காரணிகளாக இருக்கின்றன. எனவே கீழ்வாதம் உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்கள் இந்த வகியயான உணவுகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளில் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக உள்ளது. எனவே இந்த உணவுகளை ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Liver Cirrhosis Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் கல்லீரல் சிரோசிஸ் ஏற்பட காரணமாம்..

Image Source: Freepik

Read Next

பேக் செய்யப்பட்ட இஞ்சி பூண்டு பேஸ்ட் உடலுக்கு நல்லதா? உணவியில் நிபுணர் கருத்து!

Disclaimer

குறிச்சொற்கள்