What body pain indicates a heart attack: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதன் காரணமாக, பல நேரங்களில் இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படும் சூழல் உண்டாகிறது. குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே மாரடைப்பு காரணமாக மக்கள் உயிரிழப்பது அவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களையும், அதனால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும் அறிந்திருத்தல் அவசியம். ஆம். உண்மையில், மாரடைப்பு காரணமாக உடலில் சில இடங்களில் வலி ஏற்படக்கூடும். இது குறித்து NIT ஃபரிதாபாத், சாந்த் பகத் சிங் மகாராஜ் அறக்கட்டளை மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் சுதிர் குமார் பரத்வாஜ் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: தோள்பட்டை வலி இதய நோய் அபாயத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் சொன்ன இந்த தகவலைக் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
மாரடைப்பால் உடலில் எந்தெந்த இடங்களில் வலி ஏற்படுகிறது?
கழுத்து, தொண்டை அல்லது தாடையில் வலி
கடுமையான இதயப் பிரச்சனை காரணமாக கழுத்து, தாடை அல்லது தொண்டை போன்ற பகுதிகளில் மக்கள் வலியை அனுபவிக்கின்றனர். இதனால், மக்கள் தாடையில் வலி, தொண்டையில் அசௌகரியம், விறைப்பு, அழுத்தம்,தொண்டை வலி இருப்பது, மன அழுத்தம், சுவாசிப்பதில் சிரமம், வியர்வை அல்லது வலி போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம்.
இடது கையில் வலி
இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனை ஏற்படும் சமயத்தில், மக்கள் இடது கை அல்லது மார்பின் இடது பக்கத்தில் வலியை அனுபவிக்கின்றனர். இது மாரடைப்பின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக அமைகிறது. இது தோள்பட்டை மற்றும் கையில் வலி, கனத்தன்மை மற்றும் உணர்வின்மை போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
மேல் இரைப்பை வலி
இதயம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக, சிலருக்கு வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்படுகிறது. இதன் காரணமாக, எரியும் உணர்வு, வீக்கம், குமட்டல் மற்றும் கனமான உணர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்நிலையில், நீண்ட காலமாக இந்த அசௌகரியத்தை உணர்ந்தால், நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
மேல் முதுகு வலி
மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் முதுகின் மேல் பகுதியில் வலி ஏற்படுகிறது. இதனால், மக்கள் கடுமையான வலி, எரியும் உணர்வு மற்றும் அழுத்தத்தை உணர்கின்றனர். இதனால் தசைகள் பதற்றமடைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Silent Heart Attack: உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் வந்தா மாரடைப்பு வரப்போகுதுனு அர்த்தம்!
மார்பு வலி பிரச்சனை
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு மக்கள் கடுமையான மார்பு வலியை அனுபவிக்கும் நிலை ஏற்படலாம். இதில் மார்பின் நடுவில் அல்லது இடது பக்கத்தில் வலி ஏற்படுகிறது. இதன் காரணமாக மக்கள் இறுக்கம், அழுத்தம், கனத்தன்மை, எரியும் மற்றும் அசௌகரியத்தைச் சந்திக்கும் நிலை உண்டாகும். மேலும், மாரடைப்பின் போது, லேசான வலி அல்லது சங்கடமான அழுத்தம் போன்ற உணர்வு இருக்கும். இது காலப்போக்கில் படிப்படியாக அதிகரிக்கிறது.
தோள்பட்டை வலி
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக, மக்கள் இடது தோள்பட்டையில் வலியை அனுபவிக்கின்றனர். இது ஒரு தீவிர அறிகுறியாக அமைகிறது. எனவே இதைப் புறக்கணிக்கக்கூடாது. இது மக்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இதயம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டால், மக்களுக்கு தோள்பட்டையில் லேசான வலி, தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதன் காரணமாக, சில சமயங்களில் வியர்வை மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
முடிவுரை
மாரடைப்பு பிரச்சனை வருவதற்கு முன்பாக, மக்கள் தோள்பட்டை, மேல் முதுகு, மேல் வயிறு, இடது கை, மார்பு வலி, அமைதியின்மை, கழுத்து, தாடை மற்றும் தொண்டையில் வலி போன்றவற்றை சந்திக்கின்றனர். இது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், இது போன்ற அறிகுறிகளைப் புறக்கணிக்கக்கூடாது.
மேலும், இதய வலி அல்லது பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது தவிர, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். அதன்படி, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஊட்டச்சத்து நிறைந்த நட்ஸ், விதைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவது போன்றவற்றை பின்பற்றலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Heart Attack: யாருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்? ஆண்களுக்கா அல்லது பெண்களுக்கா?
Image Source: Freepik