How do you know if leg pain is heart related: நம்மில் பலர் அடிக்கடி கால் வலியால் அவதிப்படுவம். பெரும்பாலும் கால் வலியை நாம் லேசாக எடுத்துக்கொள்வோம். ஆனால், கால்களில் அடிக்கடி அல்லது நீடித்த வலி இதய பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அட கால்களுக்கும் இதயத்திற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.
ஆனால், இந்த இரண்டிற்கும் தொடர்பு உள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, இதய நோயாளிகள் கால்களை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தங்களை கவனித்துக் கொள்ளாவிட்டால், இதய நோயின் தாக்குதல் அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Heart Disease: தினமும் இரவு லேட்டாக தூங்குபவரா நீங்க? கவனம் இதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகம்!
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அறிக்கையின்படி, இதய நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் நோயாளியின் கால்களில் தோன்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை அவர்கள் கவனிக்கவில்லை என்றால், அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். அதாவது, கால்களில் வீக்கம் மற்றும் கால்களில் தொடர்ந்து வலியை புறக்கணித்தால், அவை பெரிய விளைவை ஏற்படுத்தலாம். கால்களில் ஏற்படும் இதய நோயின் அறிகுறிகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
இதய நோயின் அறிகுறிகள்

- தோள்பட்டை மற்றும் முதுகில் வலி
- மிகவும் சோர்வாக உணர்தல்
- வயிறு பிரச்சனைகள்
- புளிப்பு ஏப்பம்
- சுவாசிப்பதில் சிரமம்
- கைகளில் நிலையான வலி
- வாந்தி பிரச்சனை
- அதிகமாக வியர்ப்பது
- தலை சுற்றல்
இவை தவிர வேறு சில அறிகுறிகளும் ஏற்படலாம். ஏனென்றால், ஒருவரின் உடல் நிலையை பொறுத்து அதன் அறிகுறிகள் மாறுபடும். கால்களில் தோன்றும் இதய அறிகுறிகள் பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Snoring and Heart Disease: குறட்டை விடுபவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுமா? நிபுணர்கள் கூறுவது இங்கே!
காலுக்கும் இதயத்திற்கும் தொடர்பு உண்டா?
கால்களுக்கும் இதயத்திற்கும் மிக ஆழமான தொடர்பு உள்ளது. இதய பிரச்சனைகள் உங்கள் கால்களின் ஆரோக்கியத்தை மட்டும் அல்ல, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். PAD போன்ற நோயினால் இதயத்தின் உந்துதல் பாதிக்கப்படும் போது, அது உங்கள் கால்களுக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. இதன் காரணமாக கால்கள் வீக்கமடைகின்றன. கால்களுக்கு பம்ப் செய்யப்படும் இரத்தத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காதபோது கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் எழுகின்றன.
கால் வலியை புறக்கணிக்காதீர்கள்

கால்களில் வலி மற்றும் வீக்கம் பல நிலைகளுக்கு காரணமாக இருக்கலாம். குறிப்பாக இதய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, கால் வலியை நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. கரோனரி தமனி நோய் ஒரு வகை இதய நோய். இதில், இதயத் தமனிகள் சுருங்க ஆரம்பிக்கும். சிஏடி பிரச்சனையால், இதய நோய் மற்ற அபாயங்கள் உருவாகும் அபாயமும் அதிகரிக்கிறது. பின் அது கால்களையும் பாதிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : இதய பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் தண்ணீர் குடிக்கக் கூடாதாம். ஏன் தெரியுமா.?
பாத பராமரிப்பு என முக்கியமானது?
கால்களில் இரத்த ஓட்டம் மற்றும் ஆரோக்கியமான கால் செயல்பாட்டை பராமரிக்க, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, சரியான உணவை உட்கொள்வது மற்றும் கால்களை நன்கு கவனித்துக்கொள்வது முக்கியம். கால் வலியிலிருந்து நிவாரணம் பெற, உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் நனைக்கவும்.
இது வீக்கத்திலிருந்து நிறைய நிவாரணம் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். இது தவிர, வீக்கம், வலி அல்லது பிற அறிகுறிகள் நீண்ட காலமாக கால்களில் காணப்பட்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதய நோயாளிகளுக்கு, கால் பராமரிப்பு மற்றும் அவ்வப்போது பரிசோதனைகள் இரண்டும் முக்கியம்.
Pic Courtesy: Freepik