Sat Sep 12, 2026 | 02:22 AM IST

Doctor Verified

இந்த அறிகுறிகளை லேசுல விட்றாதீங்க. மாரடைப்பு வந்தா கண்களில் இதெல்லாம் தெரியுமாம்!

Signs Of Heart Attack In Eyes: ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான பழக்க வழக்கங்களால் இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம். குறிப்பாக, உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்றவற்றால் மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பல்வேறு நோய்கள் அதிகரிக்கலாம். மேலும், மாரடைப்பு பிரச்சனை இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது.

முன்னதாக, இந்த நோய் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது. ஆனால், இப்போது இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு அதிகமாகி வருகிறது. எனவே, மாரடைப்புக்கான அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம் மட்டுமே, உயிரை எளிதாகக் காப்பாற்ற முடியும். இதில், மாரடைப்புக்கு முன் கண்களிலும் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dry Fruits For BP: இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க இந்த உலர் பழங்கள் எல்லாம் சாப்பிடுங்க.

மாரடைப்பு அறிகுறிகள்

மாரடைப்பில் பொதுவான அறிகுறிகளாக நெஞ்சு வலி, எரியும் உணர்வு போன்ற அறிகுறிகள் காணப்படலாம். ஆனால் இவை மிகவும் பொதுவான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை மக்கள் புறக்கணிப்பதால் மரணம் ஏற்படும் அபாயம் உண்டாகலாம். லக்னோவின் பிரபல இருதய நோய் நிபுணர் டாக்டர் கே.கே.கபூர் கூறுகையில், “மாரடைப்புக்கு முன்னதாக உடல் பல்வேறு அறிகுறிகளை அளிக்கிறது. அந்த வகையில் உரிய நேரத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. மாரடைப்பு முன்னதாக கண்களில் இரத்த விநியோகம் தடைபடலாம். இதனால், கண்களிலும் அறிகுறிகள் தென்படலாம்.” என கூறியுள்ளார்.

மாரடைப்பால் கண்களில் தோன்றும் அறிகுறிகள்

  • மாரடைப்புக்கு முன்னதாக கண்களில் மஞ்சள் நிறம் தோன்றலாம். இந்நிலையில் கண் இமைக்கு அருகில் மஞ்சள் தகடு தோன்றும். இந்த அறிகுறிகளை புறக்கணிக்காமல் இருப்பது நல்லது.
  • மாரடைப்பின் ஆரம்ப அறிகுறியாக கண்களின் இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படலாம். ஆனால், சிலர் இதை சாதாரண கண் நோயாகக் கருதுவர். இவை கண் பிரச்சனையை அதிகரிக்கலாம்.
  • மாரடைப்பு முன், கண்களில் விழித்திரை தமனி அடைப்பு நிலை ஏற்படும். இந்நிலையில் விழித்திரைக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதுடன், கண்பார்வை திடீரென நின்று விடலாம். இந்த பிரச்சனை கரோனரி தமனி நோயிலும் காணப்படுகிறது. இந்நிலையை புறக்கணிக்காமல் தவிர்க்கப்பட வேண்டும்.
  • இரத்தம் உறைதல் கோளாறு காரணமாக, கண்களுக்கு இரத்தத்தை வழங்கும் நரம்புகளில் அடைப்பு ஏற்படலாம். இதனால், கண்களில் வலி மற்றும் பதற்றம் அதிகரிக்கலாம்.
  • தமனிகளில் அடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனை காரணமாக இந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இதய தசைகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் இரத்தம் சரியாக வழங்கப்படாவிட்டால், மாரடைப்பு ஏற்படலாம்.

மேலும், மாரடைப்பு ஏற்படுமாயின் முதல் 15 நிமிடங்களுக்குள் நோயாளிக்கு முதலுதவி அளிப்பதன் மூலம் அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். மாரடைப்பு நோயாளிக்கு முதலுதவி செய்யும் போது அவசரப்படாமல், நோயாளியை விரைவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Paneer For Heart Health: இதய நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா? நன்மை, தீமைகள் என்னென்னு பாருங்க.

Image Source: Freepik

Read Next

குளிர்காலத்தில் இதய நோயை தடுக்க சூப்பர் டிப்ஸ்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content