Doctor Verified

Dry Fruits For BP: இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க இந்த உலர் பழங்கள் எல்லாம் சாப்பிடுங்க.

  • SHARE
  • FOLLOW
Dry Fruits For BP: இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க இந்த உலர் பழங்கள் எல்லாம் சாப்பிடுங்க.

உலர் பழங்களை சாப்பிடுவது மூளையை கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இவை செரிமான அமைப்பை மேம்படுத்தும். அது மட்டுமின்றி சரும மேம்பாட்டிற்கும் உதவுகிறது. உலர் பழங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும். உலர் பழங்களை எடுத்துக் கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதில், இரத்த அழுத்தத்தைக் குறைக்க என்னென்ன உலர் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ஆரோக்யா டயட் மற்றும் நியூட்ரிஷன் கிளினிக்கின் டயட்டீஷியன் டாக்டர். சுகீதா முத்ரேஜா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Heart Attack In Winter: குளிர்காலத்தில் ஷாக் தரும் மாரடைப்பு.. எப்படி தடுக்கலாம்?

இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உலர்பழங்கள்

உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க சில ஆரோக்கியமான உலர் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இவை இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

பாதாம்

உடல் ஆரோக்கியத்திற்கு பாதாம் பெரிதும் உதவுகிறது. பாதாமில் மக்னீசியம், நார்ச்சத்துக்கள், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு போன்றவை நிறைந்துள்ளது. இவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பாதாமை உண்பதன் மூலம் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் முடியும். தினமும் காலையில் ஊறவைத்த பாதாமை சாப்பிட்டு வருவது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிறந்த பலனைத் தரும். இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இதய பாதிப்பில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

உலர்ந்த பிளம்ஸ்

உலர்ந்த பிளம்ஸ் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் உலர் பழங்களில் ஒன்றாகும். தொடர்ந்து வெறும் வயிற்றில் பிளம்ஸை உண்பதன் மூலம் இரத்த அழுத்த அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இவை இதய நோய்களிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. குளிர்காலத்தில் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் 4 முதல் 5 பிளம்ஸ் சாப்பிடலாம்.

வேர்க்கடலை

குளிர்காலத்தில் பெரும்பாலானோர் வேர்க்கடலை சாப்பிட விரும்புவர். இதில் புரதச்ச்சத்து நிறைந்துள்ளது. வேர்க்கடலை சாப்பிடுவது தசைகள் வலுவடைவதுடன், பல பிரச்சனைகளை நீக்குகிறது. குளிர்காலத்தில் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க வேர்க்கடலை உட்கொள்ளலாம். மேலும், வேர்க்கடலையில் நியாசின், மாங்கனீசு, துத்தநாகம் போன்றவை நிறைந்துள்ளன. இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால், வறுத்த வேர்க்கடலை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Paneer For Heart Health: இதய நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா? நன்மை, தீமைகள் என்னென்னு பாருங்க.

வால்நட்

வால்நட் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உலர் பழங்களில் ஒன்றாகும். இதில் கால்சியம், வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் போன்றவை நிறைந்துள்ளன. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இதய ஆரோக்கிய மேம்பாட்டிற்கு வால்நட் சேர்க்கலாம்.

திராட்சை

திராட்சைப் பழம் ஊட்டச்சத்து மிக்க ஒன்றாகும். இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாக அமைகிறது. இதில் பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்த உதவுகிறது. மேலும், இவை இதய ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்காலத்தில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5 முதல் 6 ஊறவைத்த திராட்சையை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த உலர் பழங்களின் உதவியுடன் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் இதய நோய் அபாயத்தைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Winter Heart Health: குளிர்காலத்தில் இதய பராமரிப்புக்கு நீங்க செய்ய வேண்டியவை

Image Source: Freepik

Read Next

Heart Healthy Foods: இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சூப்பர் ஃபுட்ஸ்.!

Disclaimer

குறிச்சொற்கள்