Cheese For Heart Patients In Tamil: பால் பொருள்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. குறிப்பாக பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒவ்வொரு பொருளும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது புரதத்தின் நல்ல மூலமாகும். இது தவிர பால் மற்றும் பால் பொருள்கள், எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
அதன் படி, பெரும்பாலானோர் பாலில் செய்யப்பட்ட பன்னீர் சாப்பிட விரும்புவர். ஆனால், இதய நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா என்ற கேள்வி எழும். சீஸ் சாப்பிடுவது இதய நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? இது குறித்து டயட் என் க்யூர் டயட்டீஷியன் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா காந்தி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Almonds: தினமும் காலையில் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிட்டால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்!
இதய நோயாளிகள் சீஸ் சாப்பிடலாமா?
இதய நோயாளிகள் மட்டுமல்ல, யாராக இருப்பினும் எந்த உணவையும் அதிகளவு எடுத்துக் கொள்வது ஆபத்தில் தான் முடியும். இது பன்னீருக்கும் பொருந்தும். ஒரு நபர் அதிகளவு சீஸ் உட்கொள்வதால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகலாம். எதுவாயினும், சீஸ் புரதம் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும். அதிகப்படியான பன்னீர் உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சீஸில் அதிகளவு நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால், இது இதய நோயாளிகளுக்கு நல்லதல்ல.
சீஸ் அதிகமாக உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம். கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது இரத்த நாளங்கள் தடைபட்டு, இரத்தம் உறைதல் ஏற்படலாம். இதனால், இதய நோயாளிகள் சீஸ் சாப்பிடக்கூடாது என்று கூற முடியாது. இதய நோயாளிகளும் பன்னீரை உட்கொள்ளலாம். ஆனால் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். இது தவிர, இதய நோயாளிகளுக்கு வேறு ஏதேனும் பிரச்சனை இருப்பின், சீஸ் சாப்பிடுவதற்கு முன் நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
இதய நோயாளிகள் பன்னீர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்த தகவல்களைக் காணலாம்.
இதய நோயாளிகள் பன்னீர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பன்னீர் அல்லது சீஸ் ஆனது புரதம் மற்றும் கால்சியம் மிகுந்த நல்ல மூலமாகும். புரதம் நிறைந்த உணவுகள் தசைகளில் ஏற்படும் காயத்தை சரிசெய்ய உதவுகிறது. அதே போல, கால்சியம் நிறைந்த உணவுகள் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைய உதவுகின்றன. பொதுவாக இதய நோயாளிகளின் நோயெதிர்ப்புச் சக்தி மிகவும் பலவீனமாக இருக்கலாம். இந்த வழியில் சீஸ் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Winter Heart Health: குளிர்காலத்தில் இதய பராமரிப்புக்கு நீங்க செய்ய வேண்டியவை
இதய நோயாளிகள் பன்னீர் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்
இதய ஆரோக்கியத்திற்கு குறைந்த அளவில் சீஸ் உட்கொள்வது நன்மை பயக்கும். அதே சமயம், அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கலாம். சீஸில் அதிகளவிலான நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் நிறைந்துள்ளது. இதில் பன்னீர் தயாரிக்கும் முறை முக்கியமானதாகும். பன்னீர் தயாரிக்கும் போது சோடியத்தின் அளவு அதிகரித்தால், அதை இதய நோயாளிகள் உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் அதிக சோடியம் உட்கொள்வது இரத்த அழுத்த பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கும்.
இதய நோயாளிகள் பன்னீர் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதே சமயம் பன்னீரைக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Heart Attack In Winter: குளிர்காலத்தில் ஷாக் தரும் மாரடைப்பு.. எப்படி தடுக்கலாம்?
Image Source: Freepik