Winter Heart Health: குளிர்காலத்தில் இதய பராமரிப்புக்கு நீங்க செய்ய வேண்டியவை

  • SHARE
  • FOLLOW
Winter Heart Health: குளிர்காலத்தில் இதய பராமரிப்புக்கு நீங்க செய்ய வேண்டியவை

ஏனெனில், குளிர்காலத்திலேயே மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது. சில நேரங்களில் இவை மரணத்தை ஏற்படுத்தலாம். எனவே இந்த காலகட்டத்தில் சூடான ஆடைகளை அணிதல், முடிந்த வரை வீட்டுக்குள்ளேயே தங்கியிருப்பது, இரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பது, மன அழுத்தத்தை சீராக வைப்பது, ஆரோக்கியமான உணவை மேற்கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம் இதய பாதிப்பினைத் தடுக்க முடியும்.

இந்தப் பதிவும் உதவலாம்: Walk for Healthy Heart: தினமும் வாக்கிங் செல்வது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்குமா?

இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான வழிகள்

குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்திற்கு மேற்கொள்ள வேண்டிய சில பாதுகாப்பான நடவடிக்கைகள் குறித்துக் காணலாம்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது

குளிர்காலங்களில், இதய நோய் அபாயத்திற்கான முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம் ஆகும். எனவே முன்னெச்சரிக்கையாக இந்த உயர் இரத்த அழுத்தத்தை முன்கூட்டியே கண்டறியலாம். இது சரியான நேரத்தில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஏதுவாக அமைகிறது. இதற்கு உயர் இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவிகளான பிபி மானிட்டருடன் கூடிய ஸ்மார்ட் வாட்ச், டிஜிட்டல் மானிட்டர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தலாம்.

சூடான ஆடைகள் அணிவது

கடுமையான குளிர்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் சூடான ஆடைகளை அணியலாம். குறிப்பாக தலைக்கு தொப்பிகள், காலுக்கு பூட்ஸ், ஜாக்கெட்டுகள் மற்றும் கையுறைகள் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம். இது உடலில் குளிர்ச்சியிலிருந்து தவிர்த்து, வெதுவெதுப்பாக வைத்திருக்க உதவும். இதன் மூலம் நோய்த் தொற்றுக்கள் ஏற்படும் அபாயமும் குறைகிறது. இதன் மூலம் இதய பிரச்சனைகளின் ஆபத்தைக் குறைக்கலாம்.

மருந்தைக் கடைபிடித்தல்

குளிர்காலத்தில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களான நிமோனியா, இன்ஃபுளுயன்ஸா போன்ற தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகிறது. இவை மார்பு நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் முன்னதாகவே இதயத்தில் பிரச்சனை உள்ளவர்கள், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு சரியான இதய மருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்தப் பதிவும் உதவலாம்: Blood Pressure Lowering Tips: இரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் எவ்வாறு உதவுகிறது

ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள்

பொதுவாக, அதிக கலோரி நிறைந்த உணவுகள் இதய பாதிப்பைத் தூண்டலாம். இவற்றில் சமநிலையைக் கையாள்வது அவசியமாகும். மேலும், இதய ஆரோக்கியத்திற்கான உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதன் படி, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெல்லிய புரதங்கள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். இவை இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், அதிகளவு உப்பு எடுத்துக் கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எனவே, உப்பு உட்கொள்வதில் அதிக கவனம் தேவை.

மன அழுத்தத்தை நிர்வகிப்பது

குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கக் கூடிய காரணிகள் பல உள்ளன. இதில் மன அழுத்தமும் அடங்கும். ஏனெனில் அதிக மன அழுத்தம் இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே தியானம், யோகா, ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் போன்ற மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் நுட்பங்களை அன்றாட வாழ்வில் கையாளலாம்.

நீரேற்றமாக இருப்பது

குளிர்காலத்தில் அதிகம் தண்ணீர் குடிப்பதை பெரும்பாலானோர் விரும்ப மாட்டார்கள். ஆனால், இதய ஆரோக்கியத்திற்கு உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும். மேலும் குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க சூப்கள், மூலிகை தேநீர் போன்ற சூடான பானங்களை அருந்தவும்.

மேலும் குளிர்காலத்தில் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். இந்த நடவடிக்கைகளின் மூலம் குளிர்காலத்தில ஏற்படும் இதய பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

இந்தப் பதிவும் உதவலாம்: Sudden Cardiac Arrest: திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் முறைகள்

Image Source: Freepik

Read Next

Heart attack and stroke: உஷார்; லேட் நைட்டில் இதைச் செய்வதால் மாரடைப்பு வரலாம்!

Disclaimer