Blood Pressure Lowering Tips: இரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் எவ்வாறு உதவுகிறது

  • SHARE
  • FOLLOW
Blood Pressure Lowering Tips: இரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் எவ்வாறு உதவுகிறது

ஈரானில் உள்ள ஷாஹித் சடோகி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவதற்கு ஆப்பிள் சைடர் வினிகர் உதவுகிறது. மேலும் இது நச்சுத்தன்மையை அகற்ற உதவுவதுடன், திசு சேதத்தைத் தடுக்க உதவுகிறது. இவை அனைத்தும் இரத்த அழுத்தத்திற்கு சாதகமாகவே பங்களிக்கின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Heart Tips: இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சில வழிகள்

இதய ஆரோக்கியத்திற்கு ஆப்பிள் சைடர் வினிகர் தரும் நன்மைகள்

ஆப்பிள்களை நொறுக்கி தயாரிக்கப்படும் புளிக்கவைக்கப்பட்ட திரவம் ஆப்பிள் சைடர் வினிகர் ஆகும். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காக நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் விளைவுகளுக்கு ஆப்பிள் சைடர் வினிகரின் சில கலவைகளைக் காணலாம்.

பொட்டாசியம்

குறைந்த இரத்த அழுத்தத்திற்கு போதுமான அளவு பொட்டாசியம் உட்கொள்வது சிறந்த வழியாகும். ஆப்பிள் சைடர் வினிகரில் பொட்டாசியம் சிறிதளவு நிறைந்துள்ளது. இவை உடலில் சோடியம் அளவை சமநிலைப்படுத்துவதுடன், உயர் இரத்த அழுத்த அபாயம் ஏற்படுவதைக் குறைக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள்

ஆப்பிள் சைடர் வினிகரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. நாள்பட்ட வீக்கம் ஏற்படுவது உயர் இரத்த அழுத்தத்திற்குப் பங்களிக்கும். ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த ஆப்பிள் சைடர் வினிகர் வீக்கத்தைக் குறைக்கின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Heart: இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடலாம்!

அசிட்டிக் அமிலம்

ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள முதன்மை மூலக்கூறு அசிட்டிக் அமிலம் ஆகும். இவை சாத்தியமான இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும் இது இரத்த நாளங்களைத் தளர்த்துவதுடன், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தமனி சுவர்களில் அழுத்தத்தைக் குறைக்கிறது.

ஆப்பிள் சைடர் வினிகரை எவ்வாறு சேர்ப்பது?

உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க ஆப்பிள் சைடர் வினிகரை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காணலாம். இதை மிகப் பாதுகாப்பா செய்வது அவசியமாகும்.

நிலைத்தன்மை

ஆப்பிள் சைடர் வினிகரின் நன்மைகளைப் பெற, இதை அன்றாட தினசரி வழக்கத்தில் சேர்க்க வேண்டும்.

நீர்த்தல்

ஆப்பிள் சைடர் வினிகரில் அதிக அமிலத்தன்மை இருப்பதால், இதை நுகர்வதற்கு முன் எப்போது தண்ணீரில் நீர்த்த வேண்டும். அதாவது ஒரு பெரிய கிளாஸ் தண்ணீரில் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவிலான ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Heart Health: இதய ஆரோக்கியத்தை கெடுக்கும் தவறுகள் என்னென்ன தெரியுமா?

கண்காணிப்பு

இரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணிக்க சுகாதார நிபுணரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

ஆப்பிள் சைடர் வினிகர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனினும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்குப் பதில் ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்தக் கூடாது. எனினும், ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்த விரும்புபவர்கள் சுகாதார வல்லுநரை அணுகி பயன்பெறுவது நல்லது. அதே சமயம் ஆப்பிள் சைடர் வினிகரை மட்டும் சார்ந்து இதயத்தைப் பாதுகாக்க முடியும் என்பது கிடையாது. ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவைப் பராமரிக்க ஆப்பிள் சைடர் வினிகருடன், ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி உள்ளிட்ட அணுகுமுறையைப் பின்பற்றலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Heart Failure Symptoms: இதயம் செயலிழப்பு ஏற்படுவ முன்பே உணர்த்தும் அறிகுறிகள்

Image Source: Freepik

Read Next

Cholesterol Diet: கொழுப்பை குறைக்க போராட்டமா? இந்த உணவுகளை ஃபாளோ பண்ணுங்க!

Disclaimer