Early Symptoms Of Heart Failure: மனித உடலில் முக்கிய உறுப்பாக செயல்படும் இதயத்தைப் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம். ஆனால் உணவு பழக்க வழக்கங்கள், நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த தீவிர நிலையைச் சந்திக்கும் முன் சில நேரங்களில் இதயம், சில நுட்பமான எச்சரிக்கைகளை வெளியிடும். இந்த இதயம் தோல்வி அடைவதற்கு முன் அனுப்பும் முக்கிய அறிகுறிகளை ஆராயவும், முன்கூட்டியே கண்டறிந்து அதன் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதய செயலிழப்புக்கு முன் உணர்த்தும் அறிகுறிகள்
இதய செயலிழப்பை உணர்த்தக் கூடிய வகையில் முன்பே உணர்த்தும் சில அறிகுறிகளைக் காணலாம்.
மூச்சுத்திணறல்
குருகிராம், பராஸ் மருத்துவமனை, இருதயவியல் இணை இயக்குநர் டாக்டர் பாரத் குக்ரேட்டியின் கூற்றுப்படி, இதயப் பிரச்சனைகளின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக மூச்சுத்திணறல் ஏற்படுவது அமைகிறது. அதிலும் குறிப்பாக, ஓய்வு நேரத்தில் அல்லது உடல் உழைப்பில் இருக்கும் போது இந்த வகை அறிகுறி ஏற்படலாம். இந்த நிலை இதயம் இரத்தத்தை எடுத்துச் செல்லத் தவறினால், நுரையீரலில் திரவம் உருவாகும் போது நிகழ்வதாகும். வழக்கமான பணிகளின் போது, காற்றுக்காக மூச்சுத்திணறல் உணர்ந்தால் இதயத்தில் ஏற்படும் அடிப்படை சிக்கலைக் குறிக்கும்.
தொடர்ச்சியான இருமல்
ஆய்வின் படி, இளஞ்சிவப்பு நிற அல்லது வெள்ளை நிற சளியை உருவாக்கக் கூடிய நீண்ட நாள்கள் ஏற்படக்கூடிய இருமலும் இதய செயலிழப்பை ஏற்படுத்துவதாக அமையும். இது இரத்தத்தை திறம்பட எடுத்துச் செல்வதற்கு போராடுவதால், நுரையீரலில் திரவம் குவிந்து இதய பாதிப்பிற்கு வழிவகுக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Egg Health Benefits: முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா? கெட்டதா?
அதிக சோர்வு மற்றும் பலவீனம்
இதயம் பிரச்சனையில் இருப்பதற்கான முக்கிய அறிகுறிகளில் ஒன்று விவரிக்க முடியாத சோர்வு மற்றும் பலவீனம் ஆகும். குறிப்பாக இந்த நிலையில் போதுமான ஓய்வுக்குப் பிறகும் சோர்வை உணர்வர். இந்த நிலை ஏற்படும் போது கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதயம் இரத்தத்தை திறம்பட செயலாற்ற முடியாத நிலை ஏற்படுவதால், உடலுக்கு ஆக்ஸிஜன் வழங்குவது குறைக்கப்படும். இதனால் தொடர்ந்து சோர்வு ஏற்படும்.
வீக்கம்
இதய செயலிழப்புக்கான முக்கிய அறிகுறியாக, கால்கள், கணுக்கால், பாதங்கள் மற்றும் வயிற்றில் வீக்கம் உண்டாவதாகும். இது இதயம் இரத்தத்தை திறம்பட செயலாற்ற போராடுவதால் மற்ற உடல் பாகங்களில் குவித்து விடும். இது அசாதாரண வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
சீரற்ற இதயத்துடிப்பு
இதயத்துடிப்பு சீராக இருக்கும் போது, இதயம் ஆரோக்கியமாக இருப்பதை உணர்த்துகிறது. சீரற்ற அல்லது ஒழுங்கற்ற இதயத்துடிப்பு அரித்மியா என அழைக்கப்படுகிறது. இது இதயப் பிரச்சனைக்கு முக்கிய அறிகுறியாக இருக்கலாம். சில அரித்மியாக்கள் பாதிப்பற்றவையாக இருப்பினும், மற்றவை இரத்த ஓட்டத்தை பாதித்து இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலை ஏற்படும் போது படபடப்பு ஏற்படும். எனவே, இது போன்ற அறிகுறியை உணரும் போது உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Healthy Heart Tips: இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சில வழிகள்
மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கிய உறுப்பாக விளங்கும் இதயம், துன்பங்களை எதிர்கொள்ளும் போது மேற்கூறிய அறிகுறிகளை உணர்த்தும். எனவே, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சில பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். மேலும், இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை உணரும் போது, உடனடியாக சுகாதார நிபுணரை அணுகி பொருத்தமான சிகிச்சை முறை எடுத்துக் கொள்வது நல்லது.
Image Source: Freepik