Prevent Heart Attack In Winter: குளிர்காலத்தில் பலரும் பலவிதமான நோய்களைச் சந்தித்து வருகின்றனர். வானிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் இன்னும் பல விதமான நோய்களை சந்திக்கும் சூழல் ஏற்படலாம். இதில் குளிர்காலத்தில் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
மருத்துவர்களின் கூற்றுப்படி, வெப்பநிலை வீழ்ச்சியின் காரணமாக உடலில் இரத்த நாளங்களில் விறைப்பு ஏற்படும். இதனால், இரத்த அழுத்தம் மாறுவதுடன், இரத்த ஓட்டம் குறையத் தொடங்குகிறது. இவ்வாறு இரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் இதயத்தைப் பாதிக்கிறது. இதன் காரணமாக மாரடைப்பு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. எனவே குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர் நிரஞ்சன் அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Lower Cholesterol Tips: கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க நிபுணர் கூறும் சில வழிகள்
குளிர்காலத்தில் மாரடைப்பிற்கான அபாயம் அதிகரிக்குமா?
குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள் ஒன்றில், இதய பிரச்சனை கொண்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க, இதயம் கடினமாக உழைக்க வேண்டும். இதனால் இதயத்தில் அழுத்தம் ஏற்படலாம். குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து காணலாம்.
- இரத்த அழுத்தம் அதிகரிப்பு
- இதயம் அதிகமாக துடிப்பது
- ஆக்ஸிஜன் பற்றாக்குறை
- இரத்தம் கெட்டியாகும் போது, இரத்தம் உறைவதற்கான வாய்ப்பு அதிகரிப்பது
குளிர்காலத்தில் இதய நோயாளிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் இதய நோயாளி நரம்புகள் வீக்கம், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை அனுபவிக்கலாம். இந்த காரணிகள் அனைத்தும் இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
இது தவிர, சுவாச தொற்று பிரச்சனை கொண்ட நபர்களுக்கும் குளிர்காலத்தில் சுவாச பிரச்சனை அதிகரிக்கலாம். குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுக்கள் எளிதில் பரவலாம். இதன் காரணமாக, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மாரடைப்பிற்கான அறிகுறிகள்
குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பிற்கான அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம். இந்த அறிகுறிகளைச் சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம் பெரிய அளவில் குறைக்க முடியும். இதன் தீவிரம் நபருக்கு நபர் மாறுபடலாம். சிலர் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் கடுமையான வலியை உணர்வர். சிலர் குறைவான வலியை உணரலாம்.
ஒருவருக்கு மாரடைப்பு அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக மருத்துவ கவனிப்பு தேவை. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு உடனடியாக CPR கொடுப்பதன் மூலம் உயிருக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Drinks For Heart Health: இந்த பானங்களை வெறும் வயிற்றில் குடியுங்கள்! இதய ஆரோக்கியம் மேம்படும்!
மாரடைப்புத் தடுப்பு குறிப்புகள்
குளிர்காலத்தில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதான வாய்ப்புகளைக் குறைக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறைந்த வெப்பநிலையால் இதயத்தில் ஏற்படும் விளைவைக் குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் காணலாம்.
- குளிர்காலத்தில் அதிகப்படியான உடல் செயல்பாடுகளைத் தவிர்த்தல் வேண்டும்.
- உடல் வெப்பநிலையை பராமரிக்க சூடான ஆடைகளை அணியலாம்.
- குளிர்காலத்தில் மது அல்லது பிற போதைப் பொருள்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- இந்த நேரத்தில் சூடான சூப் மற்றும் தேநீர் போன்ற பானங்களை உட்கொள்ளலாம்.
- வீட்டிலேயே லேசான உடற்பயிற்சி அல்லது யோகா செய்யலாம். இதைக் கொண்டு இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த முடியும்.

குளிர்காலத்தில் இதயம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க, வீட்டிற்குள் சூடாக வைத்திருக்க உதவும் ஹீட்டர்களைப் பயன்படுத்தலாம். மேலும், வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இந்நிலையில் மார்பு வலியின் நிலையை புறக்கணிக்கக் கூடாது. இதயம் தொடர்பான பிரச்சனை ஏற்படும் போது, உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Heart Failure Signs: நீங்கள் கவனிக்க வேண்டிய இதய செயலிழப்புக்கான ஆரம்ப கால அறிகுறிகள்
Image Source: Freepik