Tips To Lower Cholesterol Fast: நம் உடலின் இன்றியமையாத மூலப்பொருளாக விளங்கும் கொலஸ்ட்ரால், உடலில் உள்ள செல்களின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது. ஆனால், இந்த கொலஸ்ட்ரால் அதிகப்படியாக இருப்பது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவே அமைகிறது. குறிப்பாக, இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள், இரத்த நாளங்களின் சுவர்களில் படிகிறது. இதனால் கரோனரி தமனி நோய் மற்றும் பிற இதய நோய்களுக்கும் வழிவகுக்கிறது.
கொலஸ்ட்ரால் இரத்தத்தில் தனியாக இருப்பதில்லை.. அது லிப்போபுரோட்டின்கள் எனப்படும் புரதங்களில் இரத்தத்தின் வழியாக பயணிக்கிறது. பல வகையான லிப்போபுரோட்டீன்கள் உள்ளன. அவற்றில் ஒன்றே எல்டிஎல் அல்லது குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம் ஆகும். இவை கெட்ட கொழுப்பு என அழைக்கப்படுகிறது. அதிகளவிலான எல்டிஎல் தமனிகளில் கொலஸ்ட்ரால் கட்டமைக்க வழிவகுக்கிறது. இதில் மற்றொரு வகை HDL. என்ற நல்ல கொழுப்பு ஆகும். இது உடலின் மற்ற பகுதிகளிலிருந்து கொலஸ்ட்ராலை மீண்டும் கல்லீரலுக்கு கொண்டு சென்று அகற்றப்படுகிறது. மேலும், இதய நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்க எல்டிஎல் கொழுப்பைக் குறைத்து, பல்வேறு வழிகளில் ஹெச்டிஎல் என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Low Cholesterol Fruits: உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும் பழங்கள் என்னென்ன தெரியுமா?
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க சில வழிகள்
உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கான சில வழிகளை ஃபோர்டிஸ் மருத்துவமனை ஷாலிமார் பாக், கார்டியாலஜி மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி இயக்குநர் & HOD மருத்துவர் நித்யானந்த் திரிபாதி அவர்கள் விவரித்துள்ளார்.
உணவுப் பழக்க வழக்கங்கள்
இதய ஆரோக்கியத்திற்கு உணவு முறையை சரியாகக் கடைபிடிப்பது முக்கியமாகும். குறிப்பாக, நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க முடியும். எனவே, ஆரோக்கியமான எடையுடன் இருக்க போதுமான கலோரிகள் சாப்பிடுவதும் குடிப்பதும் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட இன்னும் பிற சத்தான உணவுகளிலிருந்து உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகள்
சில வாழ்க்கை முறை மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே கொலஸ்ட்ரால் அளவை சரியாக வைத்திருக்க முடியும். கூடுதலாக, இதற்கு மருந்துகள் தேவைப்படலாம். கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் மருந்துகள் பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. இவை செயல்பாட்டின் பல்வேறு வழிமுறைகள் மற்றும் பாதகமன விளைவுகளைக் கொண்டிருக்கும். எனினும் சிறந்த மருந்து குறித்த தகவல்களை மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. மேலும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொண்டாலும், வாழ்க்கை முறை மாற்றங்களைத் தொடர்வது நல்லது.
புகைப்பிடித்தலைத் தவிர்த்தல்
புகைப்பிடித்தலைத் தவிர்ப்பதன் மூலம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அல்லது HDL கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம். இவ்வாறு ஹெச்டிஎல் அதிகமாக இருப்பது, எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். ஏனெனில், எச்டிஎல் தமனிகளில் உள்ள கெட்ட கொழுப்பான எல்டிஎல் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Heart Failure Symptoms: இதயம் செயலிழப்பு ஏற்படுவ முன்பே உணர்த்தும் அறிகுறிகள்
உடற்பயிற்சி
வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது பல்வேறு விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தாமல் பாதுகாக்கிறது. அதில் ஒன்றாக இதயத்தில் ஏற்படும் பிரச்சனையும் அடங்கும். எனவே, வாரத்திற்கு மூன்று நாள்கள் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
லிப்போபுரோட்டீன் அபெரிசிஸ் பயன்படுத்துதல்
குடும்பத்தில் மூத்த தலைமுறையினர்களிடம் இருந்து வரும் உயர் கொலஸ்ட்ரால் குடும்ப ஹைபர்கொலஸ்டிரோலீமியா (FH) என அழைக்கப்படுகிறது. இந்த FH நோயாளிகள் பெறக்கூடிய சிகிச்சை முறைகளில் ஒன்று லிப்போபுரோட்டின் அபெரிசிஸ் ஆகும். இந்த சிகிச்சையில் வடிகட்டி கருவியைப் பயன்படுத்தி எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பு இரத்தத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. மேலும், மீதமுள்ள இரத்தம் இயந்திரத்திற்குத் திரும்பும்.
மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்
நீண்ட கால மற்றும் அதிக அளவிலான மன அழுத்தம் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து, நல்ல கொழுப்பின் அளவை குறைக்கிறது. எனவே, மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் உடலில் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கலம்.
இந்த பதிவும் உதவலாம்: Dark Chocolate Benefits: டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் இதயத்திற்கு இவ்வளவு நன்மையா?
எடை மேலாண்மை
உடல் எடையைச் சரியாகக் கவனிப்பதன் மூலம், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறி உள்ளவர்களுக்கு, இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் சப்ளிமென்ட்ஸ்
கொலஸ்ட்ராலைக் குறைக்க சில உணவுப் பொருள்கள் உதவுகின்றன. அதன் படி, ஆளிவிதை, பூண்டு, சிவப்பு ஈஸ்ட் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் உள்ளன. ஆனால், இதுவரை கொலஸ்ட்ராலைக் குறைக்கும் உணவுப் பொருள்களுக்கு போதுமான ஆதாரம் கிடைக்கவில்லை. எனவே சப்ளிமென்ட்ஸ்களை எடுத்துக் கொள்ளும் முன் முதலில் மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Cardiac Arrest Symptoms: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கார்டியாக் அரெஸ்ட்டின் முக்கிய அறிகுறிகள்
Image Source: Freepik