$
What To Do And What Not To Do After Heart Attack: இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள், குழந்தைகள் என பெரும்பாலானோர் இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மோசமான வாழ்க்கை முறை, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் அதிகரிக்கலாம்.
மாரடைப்பு ஏற்பட்டால், பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இதனால், அந்த நபர் 3 முதல் 7 நாட்கள் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும். மருத்துவமனையில் உள்ளவரை செவிலியர்கள் நமக்கு வேண்டிய அறிவுரைகளை வழங்குவார்கள். மருத்துவமனையில் இருந்து வந்த பிறகும், சில நாட்கள் நோயாளிக்கு சிறப்பு கவனிப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இந்த பதிவும் உதவலாம் : Healthy Heart: இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடலாம்!
ஏனென்றால், மாரடைப்புக்குப் பின் உடலை மீட்டெடுக்க சிறிது காலம் எடுக்கும். எனவே, வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்வதும், உணவில் சிறப்புக் கவனம் செலுத்துவதும் உங்களை மீட்டெடுக்க உதவியாக இருக்கும். மாரடைப்பிற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றிய தகவலுக்கு, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் திவ்யா சிங்கிடம் பேசினோம். அவர் கூறிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மாரடைப்புக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும்?

சரியான இடைவெளியில் மருத்துவரை அணுகவும்
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, சரியான கால இடைவெளியில் மருத்துவரை அணுக வேண்டியது முக்கியம். அதே போல, எல்லா மருந்துகளையும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில், மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகளை எடுப்பது உங்கள் உடல் நிலையை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தால், உங்கள் மருத்துவரிடம் உடனே தெரிவிக்கவும்.
ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

மாரடைப்புக்குப் பிறகு விரைவில் குணமடைய, ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் விரைவில் குணமடையலாம். உங்கள் உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்கள் இருப்பதை உறுதி செய்யவும். அதே சமயம், எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Cardiac Arrest Symptoms: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கார்டியாக் அரெஸ்ட்டின் முக்கிய அறிகுறிகள்
லேசான உடற்பயிற்சி அவசியம்

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, உடற்பயிற்சி அவசியம். மாரடைப்புக்குப் பிறகு உங்கள் உடலை மீட்டெடுக்க, லேசான உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் இவற்றைச் செய்வதற்கு முன், நிச்சயமாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க நீங்கள் லேசான நடைப்பயணத்தையும் மேற்கொள்ளலாம்.
மாரடைப்புக்குப் பிறகு என்ன செய்யக்கூடாது?

மன கவலை வேண்டாம்
மாரடைப்பிற்குப் பிறகு உங்கள் உடலை மீட்டெடுக்க சிறிது காலம் எடுக்கும். எனவே, மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள். எதற்கும் பதற்றம் படாமல் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்க முயற்சியுங்கள். மன அழுத்தத்தைக் குறைக்க, உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்யுங்கள். மென்மையான இசையைக் கேளுங்கள், தியானம் செய்யுங்கள் மற்றும் உங்களை உணர்ச்சி ரீதியாக வலிமையாக்கும் நபர்களுடன் மனம் விட்டு பேசுங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : மாரடைப்பில் இருந்து மீண்ட பின் வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்!
புகைபிடிக்க வேண்டாம்

புகைபிடித்தல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால், மாரடைப்புக்கு பின், புகைபிடித்தால் அது நேரடியாக இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுமட்டுமின்றி, புகைபிடிப்பதால் நீங்கள் பல கடுமையான நோய்களுக்கும் ஆளாகலாம். எனவே, இவற்றை தவிர்ப்பது உங்களை விரைவாக மீட்டெடுக்க உதவும்.
Pic Courtesy: Freepik