மாரடைப்பில் இருந்து மீண்ட பின் வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்!

  • SHARE
  • FOLLOW
மாரடைப்பில் இருந்து மீண்ட பின் வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்!


உணவு முறை, உடலுக்கு சரியான வேலை கொடுக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வயது வரம்பின்றி மாரடைப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது. அப்படி ஏற்படும் மாரடைப்பில் இருந்து மீண்டபிறகு பலரது வாழ்க்கை முறையும் மாறிவிடும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மாரடைப்பில் இருந்து மீண்டதற்கு பிந்தைய வாழ்க்கையில் ஆரோக்கியமாக இருக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

இதய ஆரோக்கிய வழிகள்

உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் அன்றாட தேர்வுகள் உங்கள் இதய பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாரடைப்பு உலகளவில் மரணத்திற்கான முதன்மையான காரணங்களில் ஒன்றாகும், இது இதய தசையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் திடீரென தடைபடும் போது ஏற்படுகிறது, இரத்த உறைவு உள்ளிட்டவைகள் காரணமாக இந்த பிரச்சனை ஏற்படும்.

இதையும் படிங்க: தோலில் தோன்றும் இதய நோயின் அறிகுறிகள் இங்கே

மாரடைப்புக்கான சிகிச்சை அணுகல்

மாரடைப்புக்கான உயிர்வாழ்வு விகிதம் என்பது மாரடைப்பின் தீவிரம், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை, தனிநபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான அணுகல் போன்ற காரணங்களின் அடிப்படையில் மாறுபடும்.

பொதுவாக, மாரடைப்பை அனுபவிக்கும் கணிசமான சதவீத மக்கள் உயிர் பிழைத்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கின்றனர். இருப்பினும், அதற்கு ஒழுக்கம் மற்றும் முறையான வாழ்க்கை முறை தேர்வுகள் தேவை. இதுகுறித்து onlymyhealth குழு உடன் பேசிய டாக்டர் சுப்ரத் அகோரி (இயக்குனர்-கேத் லேப், இன்டர்வென்ஷனல் கார்டியலஜிஸ்ட், ஃபரிதாபாத், ஆசிய மருத்துவமனையின் தலைவர்) சில நுண்ணறிவு விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

மாரடைப்பு ஏன் கவலைக்குரிய விஷயம்

"21 ஆம் நூற்றாண்டில் மக்கள் மத்தியில் ஏற்படும் அகால மரணத்திற்கு திடீர் மாரடைப்பு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்" என்று டாக்டர் அகோரி கூறுகிறார், கடந்த சில ஆண்டுகளில் திடீரென மாரடைப்பு ஏற்படுவதை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை ஆபத்தான முறையில் அதிகரித்துள்ளது.

மாரடைப்பு திடீரென வருவதால், அது மிகவும் ஆபத்தானது. ஒன்று அல்லது இரண்டு கைகள், முதுகு, கழுத்து, வயிறு அல்லது தாடை போன்ற பல்வேறு உடல் பகுதிகளில் அழுத்தம், பொதுவான வலி போன்ற அறிகுறிகள் மாரடைப்பு காரணமாக ஏற்படலாம். இது இல்லாமலும் இருக்கலாம். இது GERD, பதட்டம் போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகளாலும் ஏற்படும். எனவே இத்தகைய வலியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி , மாரடைப்பிற்குப் பிறகு முதல் சில வாரங்களில் ஆண்களை விட பெண்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்களுக்கு சிறிய தமனிகள் உள்ளன. அதேபோல் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் இதய நோயின் வெவ்வேறு அறிகுறிகளை அனுபவிக்கலாம், இது சில நேரங்களில் நோயறிதலுக்கான தாமதத்தையும் ஏற்படுத்தும்.

இருப்பினும், மாரடைப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உயிர்வாழ்வு விகிதம் தோராயமாக 90-97% என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

மாரடைப்பில் இருந்து மீண்டதற்கு பின் வாழ வேண்டிய வாழ்க்கை முறை

டாக்டர் அகோரியின் கூற்றுப்படி, பெரும்பாலான மக்கள் தங்கள் முதல் மாரடைப்பிலிருந்து மீண்டு, நீண்ட, நிறைவான வாழ்க்கையை நடத்துகிறார்கள். இருப்பினும், இரண்டாவது மாரடைப்பு, 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 20% பேருக்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் ஏற்படும் என்று அவர் கூறுகிறார். அதனால்தான் மற்றொரு மாரடைப்பைத் தவிர்க்க நடவடிக்கை எடுப்பது உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

பரிந்துரை செய்த மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றொரு இதயத் தாக்குதலை அனுபவிக்கும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும். இதன் காரணமாக உங்கள் மருந்துகளை எப்படி எடுத்துக்கொள்வது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் சரியமான முறையில் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தடுத்து சந்திப்பு

மருந்துவர் பரிந்துரைத்த நேரத்தில் அடுத்தடுத்து சந்திப்பை மருத்துவருடன் மேற்கொள்ளுங்கள். இது உடல்நிலை தன்மை மற்றும் மீட்பு செயல்முறையை கண்டறிய உதவும். மருத்துவர் குறிப்பிட்ட நேரத்தில் சென்று முறையாக சிகிச்சை நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.

இதய மறுவாழ்வு

இதய மறுவாழ்வு என்பது மாரடைப்பிற்குப் பிறகு உங்கள் மீட்புக்கு உதவுவதற்காக மருத்துவ மேற்பார்வையின் கீழ் நடத்தப்படும் ஒரு திட்டமாகும் . நீங்கள் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டபோது இதய மறுவாழ்வுக்கான பரிந்துரையைப் பெற்றுவிட்டீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் இல்லையென்றால் மருத்துவரிடம் கேளுங்கள்.

மாரடைப்புக்குப் பிறகு, பயம், அதிக சக்தி அல்லது குழப்பம் ஏற்படுவது பொதுவானது. குடும்ப உறுப்பினர்களிடமோ அல்லது மாரடைப்பு ஏற்பட்டவர்களிடமிருந்தோ உதவியை நாடுங்கள். பிறரிடம் பேசுங்கள். முன்னதாக குறிப்பிட்டது போல் மாரடைப்பில் இருந்து மீண்ட ஏராளமானோர் நல்ல வாழ்க்கை முறையை கடைபிடித்து ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.

ஆபத்து காரணிகளை கட்டுப்படுத்தவும்

மாரடைப்பிற்குப் பிறகு, மருந்து உட்கொள்வது, புகைபிடிப்பதை நிறுத்துதல், சீரான உணவை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆபத்து காரணிகளை கட்டுப்படுத்த முடியும். ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமான செயலில் ஈடுபடுங்கள்.

அதேபோல் மருத்துவ அவசரநிலையை எதிர்கொள்ள தயாராக இருப்பதும் முக்கியம் என டாக்டர் அகோரி கூறுயுள்ளார். அதாவது திடீர் இதயத் தடுப்பு ஏற்பட்டால் விரைவான எதிர்வினை நேரம் மிக முக்கியமானது. அத்தகைய மருத்துவ அவசரநிலைக்கு ஒருவர் சென்றால், விரைவாகச் செயல்படுவது மற்றும் நிலைமையைக் கையாள தேவையான நடவடிக்கைகளைப் பின்பற்றுவது முக்கியம். துடிப்பை உணருதல், இதய நுரையீரல் புத்துயிர் பெறுதல் (CPR), ஆம்புலன்ஸை அழைப்பது மற்றும் CPR உடன் தொடர்வது ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் பகிர்ந்து கொள்கிறார்.

மாரடைப்பு ஒரு தீவிரமான மற்றும் பெரும்பாலும் வாழ்க்கையை மாற்றும் நிகழ்வாக இருந்தாலும், மேம்பட்ட மருத்துவ சிகிச்சைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் தொடர்ந்து கவனிப்பு ஆகியவை உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை கணிசமாக மேம்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: இதய அடைப்பின் 5 அறிகுறிகள்: பெண்களே உஷார்!!

இதய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதன் மூலமும், மருத்துவ வழிகாட்டுதலை கடைப்பிடிப்பதன் மூலமும், மாரடைப்பிலிருந்து தப்பிய நபர்கள் சிறந்த வாழ்க்கையை வாழுகிறார்கள்.

image source: freepik

Read Next

Heart Health: இதய ஆரோக்கியத்தை கெடுக்கும் தவறுகள் என்னென்ன தெரியுமா?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்