Foods To Avoid For Healthy Heart: ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக இன்று பலரும் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்றாக இதய நோய் அமைகிறது. இதயம் மற்றும் இரத்த நாளங்களைப் பாதிக்கும் நோய்களின் குழுவாக இதய நோய் உள்ளது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதய பிரச்சனைகளைத் தூண்டுவதில் பல்வேறு காரணிகள் உள்ளன. இதில் உணவுமுறை முக்கிய காரணியாக உள்ளது. ஆரோக்கியமற்ற உணவுமுறையால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இதயத்தைப் பாதிக்கும் சில உணவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும். இதில் இதய ஆரோக்கியத்திற்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் சிலவற்றைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Walnuts For Heart Health: இதய பிரச்சனைகளைத் தூள் தூளாக்கும் வால்நட்ஸ். எப்படி சாப்பிடணும் தெரியுமா?
இதய ஆரோக்கியத்திற்கு சாப்பிட கூடாத உணவுகள்
கொழுப்பு உணவுகள்
இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளாக நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்பு என இரண்டு வகை கொழுப்புகள் உள்ளன. நிறைவுற்ற கொழுப்பு வகைகளில் மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, அதிக கொழுப்புள்ள பால் போன்றவை அடங்கும். டிரான்ஸ் கொழுப்பு வகைகளில் வறுத்த உணவுகள், வேகவைத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களான பாப்கார்ன் போன்றவை அடங்கும். எனவே இந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை உணவுகள்
சர்க்கரை உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவது காலப்போக்கில் இதய நோய்க்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அதிகளவு சர்க்கரையை எடுத்துக் கொள்வது இதயத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே குக்கீகள், மிட்டாய்கள், கேக்குகள், சோடா போன்ற சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடல் பருமன், இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஏற்படுத்தலாம்.
வறுத்த உணவு
இது உடலில் இரத்த அழுத்த அளவுகள், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கலாம். இவை அனைத்தும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம். வறுத்த உணவை எடுத்துக் கொள்வது பெரிய அளவிலான இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற அபாயம் அதிகரிப்பதாகக் கண்டறியப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேலாக வறுத்த மீன்களை எடுத்துக் கொள்வது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Dehydration Causes: நீரிழப்பால் இதயத்துடிப்பு அதிகமாகுமா? நிபுணர் தரும் விளக்கம்
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் இதயத்திற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். சலாமி, மதிய உணவு இறைச்சி, தொத்திறைச்சி போன்றவை இதயத்திற்கு மிகவும் மோசமான பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகும்.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அல்லது கார்போஹைட்ரேட்டுகளின் உற்பத்தி செயல்முறையின் மூலம் இதன் ஊட்டச்சத்து மதிப்பை அகற்றும் உணவுகளாகும். இதனால் வைட்டமின்கள், தாதுக்கள், பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவற்றின் உணவை இழக்கக் கூடும். வெள்ளை ரொட்டி போன்றவற்றில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளில் நார்ச்சத்துக்கள் மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் இல்லை. இது மீண்டும் உடல் எடை இழப்பை ஏற்படுத்துவதுடன் நீரிழிவு, இதய நோய் போன்ற அபாயத்தை ஏற்படுத்தும்.
இந்த உணவுகளை எடுத்துக் கொள்வது இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். எனவே இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Dairy Items For Heart: இதய ஆரோக்கியத்திற்கு நீங்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத பால் பொருள்கள்
Image Source: Freepik