Sat Sep 12, 2026 | 12:46 AM IST

Doctor Verified

Dehydration Causes: நீரிழப்பால் இதயத்துடிப்பு அதிகமாகுமா? நிபுணர் தரும் விளக்கம்

How Does Dehydration Affect Heart Rate: ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் மற்றும் மோசமான பழக்க வழக்கங்களால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். அந்த வகையில் அதிகரித்த இதயத்துடிப்பு அபாயத்தை ஏற்படலாம். இரத்த அழுத்தம் குறையும் போது அல்லது அதிகரிக்கும் போது, இதயத்துடிப்பு குறையும் அல்லது அதிகரிக்கலாம். அதிகரித்த இதயத்துடிப்பு பக்கவாதம், மாரடைப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

பொதுவாக இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை துடிக்கும். அதாவது ஒரு நிமிடத்தில் இதயத்துடிப்பு 60 முறைக்குக் குறைவாகவோ அல்லது 100 முறைக்கு அதிகமாகவோ இருக்கக் கூடாது. உடலில் தண்ணீர் இல்லாததன் காரணமாகவும் இதயத்துடிப்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதில், நீரிழப்பு காரணமாக இதயத்துடிப்பு அதிகரிக்குமா? அவ்வாறெனின் அதை தடுப்பது எப்படி? என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Walnuts For Heart Health: இதய பிரச்சனைகளைத் தூள் தூளாக்கும் வால்நட்ஸ். எப்படி சாப்பிடணும் தெரியுமா?

நீரிழப்பு இதயத்துடிப்பை ஏற்படுத்துமா?

இதயத்துடிப்பு அதிகரிப்பது அல்லது குறைவது பல காரணங்களால் ஏற்படலாம். குறிப்பாக, கவலை, கோபம், வேகமாக ஓடுவது அல்லது நடப்பது போன்ற காரணங்களால் இதயத்துடிப்பு அதிகரிக்கும். இது குறித்து லக்னோவின் பிரபல இருதயநோய் நிபுணர் டாக்டர் கே.கே.கபூர் அவர்கள் கூறுகையில், “இதயத் துடிப்பு அதிகமாக மற்றும் குறைய பல காரணங்கள் இருக்கலாம். இதில் உடலில் நீர் பற்றாக்குறை காரணமாகவும் இதயத்துடிப்பு அதிகமாகும். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக உடலில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, இதயத்துடிப்பு அதிகமாகலாம்” என்று கூறியுள்ளார்.

உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில் அதிக நேரம் வெயிலில் இருப்பது, குறைந்தளவு தண்ணீர் அருந்துவது, அதிக வியர்வை போன்றவற்றால் உடலில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும். அதிகம் மது அருந்துபவர்களும் நீரிழப்பால் பாதிக்கப்படலாம்.

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பின் இரத்த ஓட்டம் குறையலாம். இந்த சூழ்நிலையில் இதயம் சீரான இரத்த ஓட்டத்தை பராமரிக்க வேண்டியிருக்கும். இதனால் அதிகரித்த இதயத்துடிப்பை உணரலாம். நீரிழப்பால் ஏற்படும் இந்த அதிகரித்த இதயத்துடிப்பு பிரச்சனை நீரின் அளவு மீட்டெடுத்தவுடன் தீர்மானிக்கப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Intermittent Fasting: மக்களே உஷார்!! அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பது இதய நோய் ஆபத்தை அதிகரிக்குமாம்!

தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்வது?

உடலில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை நீக்க, எலக்ட்ரோலைட் நீரைக் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் அளவு தண்ணீர் குடிப்பது நீர்ச்சத்து குறைபாட்டை நீக்குகிறது. இது தவிர, நீரேற்றமாக இருக்க திரவ உணவுகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளலாம். மேலும் நீரேற்றமாக இருக்க எலுமிச்சைச் சாறு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றைத் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக உடல் வலி, சோர்வு, தலைவலி போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். நீர் பற்றாக்குறையின் அறிகுறிகளை எப்போதும் புறக்கணிக்கக் கூடாது. இதனால் அதிகரித்த இதயத்துடிப்பு மட்டுமல்லாமல் பல பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் இதயத்துடிப்பு தொடர்ந்து அதிகரித்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Heart Health Juices: இதய ஆரோக்கியத்துக்கு நீங்க குடிக்க வேண்டிய சுவையான ஜூஸ் வகைகள்

Image Source: Freepik

Read Next

Heart Attack For Women: இளம் வயதிலேயே பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content