இன்றைய பிஸியான காலகட்டத்தில் உடல் பராமரிப்பில் கவனம் செலுத்துவதை பலரும் மறந்து விடுகின்றனர். ஆம். உண்மையில் நீண்ட நேர உட்கார்ந்த வாழ்க்கைமுறை, போதிய ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் அதிகளவு திரை பயன்பாடு உள்ளிட்டவற்றால் ஏற்படும் முதன்மையான பிரச்சனைகளில் ஒன்று கருவளையங்கள் ஆகும். இது அனைத்து வயதினரின் வாழ்க்கை முறைகளையும் பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான தோல் பிரச்சனையாகும். கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையங்களுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
இந்த காரணங்களில் ஒன்றாக நாம் தண்ணீர் குடிப்பதும் அடங்குகிறது. தண்ணீர் குடிப்பதும் நீரேற்றத்துடன் இருப்பதும் கருவளையங்களைக் குறைக்கலாம் அல்லது நீக்கலாம் என்பது மிகவும் பிரபலமான கூற்றுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் இது எவ்வளவு உண்மை தெரியுமா? கருவளையங்களை அகற்றுவதற்கு தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பதையும், குறைவான தண்ணீர் குடிப்பதற்கும் கருவளையங்களுக்கும் என்ன தொடர்பு என்பதையும் அறிய காஸ்மெட்டிக்கின் அழகுசாதன நிபுணர் டாக்டர் சிம்ரத் சாந்து அவர்கள் நமக்குப் பகிர்ந்துள்ள தகவல்களைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: கருவளையங்களை போக்க வீட்டிலேயே இதை செய்யவும்!
நீரேற்றம் மற்றும் கருவளையங்களுக்கு இடையே உள்ள தொடர்பு
தோல் மருத்துவர்களின் கூற்றுப்படி, கண் கருவளைய பிரச்சனைக்கு நீரிழப்பு ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. ஆனால், இது மட்டுமே கருவளையங்களுக்குக் காரணம் அல்ல. கண்களுக்குக் கீழே உள்ள தோல் மெல்லியதாகவும், மென்மையாகவும் இருப்பதன் காரணமாக, உடலின் நீர் சமநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு இது மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக அமைகிறது.
முக அழகு நிபுணர் டாக்டர் சிம்ரத் சாந்து அவர்களின் கருத்துப்படி, “நீரிழப்பு ஏற்பட்டால், தோல் அதன் மென்மை மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை இழந்து, கண்களுக்குக் கீழே உள்ள இரத்த நாளங்கள் அதிகமாகத் தெரியும்” என்று விளக்குகிறார். இது கருவளையங்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கக்கூடும். குறிப்பாக வெளிர் அல்லது மெல்லிய சருமம் உள்ளவர்களுக்கு ஏற்படலாம். நீரேற்றம் இல்லாதது கருவளையங்களை ஏற்படுத்தாது. ஆனால், அது அவற்றை அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது.
போதுமான தண்ணீர் குடிப்பதால் கருவளையங்களைக் குறைக்கலாமா?
நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்போது, சரும அமைப்பு மேம்படுகிறது. அதாவது நன்கு நீரேற்றம் பெற்ற சருமம் குண்டாகவும், மென்மையாகவும் காணப்படும். இது கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் நீரேற்றம் முக்கியமாகும். இவை கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களைக் குறைக்க உதவுகின்றன. நீரேற்றமாக இருக்கும்போது, இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இது கருவளையங்களாகத் தோன்றக்கூடிய இரத்தக் கட்டிகளைக் குறைக்கிறது.
அது மட்டுமல்லாமல், தண்ணீர் குடிப்பது உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இவை சருமத்தின் ஒட்டுமொத்த பளபளப்புக்கும் மிகவும் முக்கியமானதாகும். எனினும், நன்கு நீரேற்றம் கொண்ட உடல், மந்தமான மற்றும் சோர்வான சருமத்தை ஏற்படுத்தும் நச்சுக்களை சிறப்பாக வெளியேற்றும்.
இந்த பதிவும் உதவலாம்: கருவளையம் ஒழிய.. ஒரு இயற்கை வைத்தியம்.! வெள்ளரி இருக்க கவலை எதுக்கு..
கருவளையங்களை நீக்குவதற்கான வைத்தியம்
நீரேற்றமாக இருப்பதன் மூலம் மட்டும் கருவளையங்களைக் குறைக்க முடியாது என நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். மரபணு முன்கணிப்பு, ஒவ்வாமை, இரும்புச்சத்து குறைபாடு அல்லது ஹைப்பர் பிக்மென்டேஷன் கூட தண்ணீரால் குணப்படுத்த முடியாத கருவளையங்களுக்கு காரணமாகலாம். எனவே கருவளையங்களை முழுமையாக சமாளிக்க நிபுணர் சில வைத்தியங்களைப் பகிர்ந்துள்ளார்.
நீரேற்றத்துடன் இருப்பது - ஒரு நாளைக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை இலக்காக வைக்கலாம். வெப்பமான காலநிலையில் வாழ்ந்தால் உடலுக்குப் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். எனினும், அதிக தண்ணீரைக் குடிக்கக் கூடாது. ஏனெனில், அதிகப்படியான தண்ணீர் சிறுநீரகங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் சருமத்திற்கு எந்த கூடுதல் நன்மைகளையும் அளிக்காது.
கண் கிரீம் பயன்படுத்துவது - வைட்டமின் சி ரெட்டினோல், காஃபின் மற்றும் ஹைலூரோனிக் அமிலம் போன்ற பொருட்கள் நிறமி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
இரவு நன்றாகத் தூங்குவது - தூக்கமின்மை காரணமாக சருமம் வெளிர் நிறமாக மாறும். இது கண்களுக்குக் கீழே உள்ள கருமையான இரத்த நாளங்களைத் தெரியும்படி செய்கிறது.
ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்வது - இரும்பு மற்றும் வைட்டமின் கே, ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். இவ்வாறு ஊட்டச்சத்து குறைபாடுகள் உடலில் இரத்த ஓட்டத்தை பாதிப்பது மற்றும் ஆக்ஸிஜன் குறைபாட்டிற்கு வழிவகுக்கக்கூடும். இவை கருவளையங்களை மோசமாக்கலாம்.
சூரிய ஒளியைத் தவிர்ப்பது - புற ஊதா வெளிப்பாடு கண்களுக்குக் கீழே நிறமியை மோசமாக்கக்கூடும். எனவே சன்கிளாஸ்கள் மற்றும் SPF அடிப்படையிலான கண் கிரீம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கருவளையங்களைக் குறைக்கவும் உதவுகிறது என்றாலும், இது மட்டும் ஒரே சிகிச்சை அல்ல. கருவளையங்களை திறம்பட நிர்வகிப்பதற்கு நல்ல தூக்கம், சூரிய ஒளி பாதுகாப்பு, சீரான உணவு மற்றும் இலக்கு வைக்கப்பட்ட சரும பராமரிப்பு போன்ற பலதரப்பட்ட அணுகுமுறையை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம், கருவளையங்களுக்கான உண்மையான காரணங்களையும் சிகிச்சையையும் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: போமாட்டேன்னு பிடிவாதம் பண்ணும் கருவளையங்கள்.. அடிச்சி விரட்டும் ரெமிடிஸ் இங்கே..
Image Source: Freepik