Sat Sep 12, 2026 | 01:48 AM IST

Doctor Verified

தூக்கமின்மை கொலஸ்ட்ராலை பாதிக்குமா? இருதயநோய் நிபுணர் தரும் விளக்கம்

சரியான தூக்கம் இல்லாததால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளில் இதய பாதிப்பும் ஒன்று. இதில், இருதய ஆரோக்கியம் உட்படப் பல வழிகளில் உங்கள் உடலை எதிர்மறையாகப் பாதிக்கிறது. இது கொலஸ்ட்ராலை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து இருதயநோய் நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காண்போம்.

உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் மரபியல் போன்ற பல்வேறு காரணிகள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். எனினும், நம்மால் பெரும்பாலும் கவனிக்ப்படாத ஒரு முக்கியமான காரணியாக தூக்கமின்மை அமைகிறது. போதுமான தூக்கம் பெறுவது பல உடல் மற்றும் மன ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால், உலகம் மேலும் மேலும் பரபரப்பான வாழ்க்கை முறை, நீண்ட வேலை நேரம், மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றை இயல்பானதாகக் கருதுவதால், தூக்கமின்மை ஒரு புதிய இயல்புநிலையாகிவிட்டது.

இந்நிலையில், கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், நீண்ட கால தூக்கமின்மை கொலஸ்ட்ரால் அளவை பாதிப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும் இது இறுதியில் இருதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. இதில் மோசமான தூக்கம் கொலஸ்ட்ராலை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து பெங்களூரில் உள்ள ஆஸ்டர் வைட்ஃபீல்ட் மருத்துவமனையின் தலையீட்டு இருதயவியல் ஆலோசகர் டாக்டர் சிராக் டி என்பவர் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், அந்த அபாயத்தைக் குறைப்பதற்கான வழிகளையும் விளக்குகிறார்.

தூக்கமின்மை கொலஸ்ட்ராலை பாதிக்குமா?

ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் போதுமான தூக்கம் அவசியமாகும். ஏனெனில் இது உடலின் செல்கள், திசுக்கள் மற்றும் பிற உறுப்புகள் ஓய்வெடுக்கவும் மீண்டு வரவும் அனுமதிக்கிறது. இது குறித்து டாக்டர் சிராக் டி கூறுகிறார், "நீண்ட கால மோசமான தூக்கம் மறைமுகமாக உயர் கொலஸ்ட்ராலுக்கு வழிவகுக்கும். ஏனெனில் இது உயர் இரத்த அழுத்தம், அதிகரித்த அழற்சி மற்றும் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துகிறது" என்று கூறினார்.

மேலும் அவர், "அதிகரித்த அழற்சி மற்றும் மன அழுத்தத்தால் வெளியிடப்படும் ஹார்மோன்களில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் ஆகியவை அடங்கும். இந்த ஹார்மோன்கள் ட்ரைகிளிசரைடுகள் மற்றும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கின்றன" என்றார்.

 

image

what-foods-are-best-to-reduce-cholesterol-main-1765180168969.jpg

உடலில் கொலஸ்ட்ரால் புரதங்களுடன் இணைந்து இரத்தத்தில் கொண்டு செல்லப்படுகிறது. இவை லிப்போபுரோட்டீன்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த லிப்போபுரோட்டீன்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை எச்டிஎல் (உயர் அடர்த்தி லிப்போபுரோட்டீன்) மற்றும் எல்டிஎல் (குறைந்த அடர்த்தி லிப்போபுரோட்டீன்) ஆகும். இந்த எல்டிஎல் கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படுகிறது. இவையே நீண்ட கால உயர் கொலஸ்ட்ரால் கரோனரி தமனி நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். இது குறித்து மருத்துவர், "தூக்கமின்மை உடலின் வளர்சிதை மாற்றத்தையும், அழற்சி செயல்முறையின் தொடக்கத்தையும் பாதிக்கிறது, இது எல்டிஎல் அதிகரிப்பு மற்றும் எச்டிஎல் குறைவுக்கு வழிவகுக்கிறது" என்று கூறினார்.

இந்த பதிவும் உதவலாம்: கொலஸ்ட்ராலை வேகமாகக் கரைக்க காலை, மாலை, இரவு இந்த உணவுகளை சாப்பிடுங்க.. நிபுணர் தரும் கூடுதல் டிப்ஸ்

மேலும், ஃபிரான்டியர்ஸ் இன் ஜெனடிக்ஸ் இதழில் 2020-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தூக்கமின்மை வளர்சிதை மாற்ற நோய்களின் அபாய அதிகரிப்பு மற்றும் கல்லீரலில் கெட்ட கொலஸ்ட்ரால் குவிப்புடன் நெருங்கிய தொடர்புடையது. இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உயர் இரத்த அழுத்தம், கரோனரி இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கும் பங்களிக்கிறது, இவை அனைத்தும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும்.

தேசிய இதயம், நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனத்தின் படி, பெரியவர்கள் குறைந்தது ஏழு முதல் ஒன்பது மணி நேரம் தூங்க வேண்டும். ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குபவர்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அல்லது எல்டிஎல் அளவு அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக இந்த ஆபத்து 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே அதிகமாகக் காணப்பட்டது. எனினும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களும் உடல் உழைப்பின்மையும் இப்போது இளைஞர்களிடமும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் அபாயகரமாக அதிகரிக்க வழிவகுக்கின்றன.

image

how-to-get-sleep-at-night-1765163728749.jpg

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவது எப்படி

  • ஒரு சீரான உறங்கும் நேர வழக்கத்தை உருவாக்க வேண்டும்
  • குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்
  • பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்
  • வாரம் முழுவதும் குறைவாகத் தூங்கி, வார இறுதி நாட்களில் ஈடுசெய்வது பலனளிக்காது
  • படுக்கையறையின் வெப்பநிலையை சாதாரணமாக வைத்திருக்க வேண்டும். அது மிகவும் குளிராகவோ அல்லது மிகவும் சூடாகவோ இருக்கக்கூடாது
  • தூங்கும்போது ஒளியை மங்கலாக வைத்திருக்க வேண்டும்
  • தூங்குவதற்கு முன் ஓய்வெடுக்க ஒரு புத்தகம் படிக்கலாம்
  • ஸ்மார்ட்போனை உங்கள் படுக்கைக்கு அருகில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • அதிக உணவு உண்ட உடனேயே தூங்க வேண்டாம்
  • முடிந்தால் இரவில் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம்
  • மது அருந்துதல், காஃபின் அல்லது நிகோடின் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்க்கவும் அல்லது கட்டுப்படுத்தவும், ஏனெனில் இவை தூக்கத்தைக் கெடுக்கும்.
  • தியானம், யோகா அல்லது மென்மையான நீட்சிப் பயிற்சிகள் போன்ற தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்யலாம்.

முடிவுரை

நல்ல தரமான தூக்கம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானதாகும். ஏனெனில் இது இதயத்திற்கும், மூளைக்கும் ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் அனுமதிக்கிறது. தூக்கமின்மை அல்லது மோசமான தூக்கத்தின் தரம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இருதய ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை விளைவிக்கிறது. எனவே இது கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான சுகாதார காரணியாகும். தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மற்றும் சிறந்த உணவுத் தேர்வுகளை மேற்கொள்வது போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: கொலஸ்ட்ராலை இயற்கையாகக் குறைக்க டாக்டர் தீபா கூறும் 3 எளிய குறிப்புகள்.!

Image Source: Freepik

Read Next

ஹார்ட் அட்டாக் வராம இருக்க நீங்க பின்பற்ற வேண்டிய 5 பழக்கங்கள்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 14, 2025 23:35 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content