How Sleep Affects Women Fertility: இன்றைய காலக்கட்டத்தில், மக்கள் தங்கள் பிஸியான வாழ்க்கையில் மிகவும் பிஸியாகிவிட்டனர். இதனால், போதுமான தூக்கத்தைப் பெற அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. ஒரு நல்ல இரவு தூக்கம் உங்கள் மனதிற்கு மட்டுமல்ல, உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. தூக்கமின்மையால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
தற்போதைய காலத்தில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சனை அதிகமாக சந்தித்து வருகின்றனர். எனவே தான், தெருவுக்கு தெரு கருவுறுதல் மையங்கள் காணப்படுகிறது. குழந்தையின்மை பிரச்சினைக்கு செயலாற்ற வாழ்க்கை முறை மற்றும் தீய பழக்கங்கள் தான் முக்கிய காரணம். தூக்கம் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்று நாம் அனைவருக்கும் தெரியும்.
இந்த பதிவும் உதவலாம் : Eye Health Tips: உங்க பார்வை திறனை இயற்கையாக அதிகரிக்க தினமும் இதை செய்யுங்க!
எனவே, தினமும் 7 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், தூக்கமின்மை உங்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்நிலையில், ராஜ் ஹோமியோபதி கிளினிக்கின் (புனே) ஹார்மோன் மற்றும் கருவுறுதல் நிபுணர் டாக்டர் ஜைனப் தாஜிரிடமிருந்து, தூக்கத்திற்கும் கருவுறுதலுக்கும் என்ன சம்பந்தம்? என விளக்கியுள்ளார். அவற்றை பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.
தூக்கம் கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது?

உடல், உணர்ச்சி மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான தூக்க அட்டவணை மிகவும் முக்கியம். தூக்கம் நம் உடலில் உள்ள முக்கியமான ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகிறது. இது கருவுறுதல் செயல்முறைக்கு அவசியம். தூக்கமின்மை காரணமாக, நம் உடலில் உள்ள ஹார்மோன்கள் சமநிலையற்றதாக மாறும், இதில் சில ஹார்மோன்கள் குறைந்த அளவிலும், சில ஹார்மோன்கள் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே, ஹார்மோன் சமநிலையின்மை பாலியல் ஹார்மோன்களில் தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது, இது கருவுறுதலை பாதிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : High blood pressure: அதிகமாக உப்பு சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் ஏன் அதிகரிக்கிறது? டாக்டர் கூறுவது என்ன?
பெண் கருவுறுதலில் தூக்கம் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

தூக்கமின்மையால், பெண்களின் உடலில் லெப்டின் ஹார்மோன் சமநிலையற்றதாக காணப்படும். லெப்டின் ஒரு முக்கியமான அண்டவிடுப்பின் ஹார்மோன் ஆகும். இது தூக்கத்தை பாதிக்கிறது. போதிய தூக்கமின்மை பெண்களின் உடலில் லெப்டின் ஹார்மோனின் அளவை சீர்குலைத்து, மாதவிடாய் சுழற்சி, புரோஜெஸ்ட்டிரோன், ஈஸ்ட்ரோஜன், லுடினைசிங் ஹார்மோன் போன்ற இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான ஹார்மோன்களை பாதிக்கிறது. எனவே, ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு இரவும் 7 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். ஏனெனில், தூக்கமின்மை பெண்களுக்கு மலட்டுத்தன்மையையும் கருச்சிதைவையும் ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம் : Milk and Blood Pressure: சூடான பால் குடித்தால் BP அதிகரிக்குமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
ஆண்களின் கருவுறுதலில் தூக்கம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

போதிய தூக்கமின்மை ஆண்களின் கருவுறுதலையும் எதிர்மறையாக பாதிக்கிறது. தூக்கமின்மை ஆண் கருவுறுதல் ஹார்மோன்கள் மற்றும் சர்க்காடியன் தாளங்களில் சிக்கல்களை ஏற்படுத்தும். மோசமான தூக்கம் ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையில் குறைவை ஏற்படுத்தும், இது கருவுறாமைக்கு வழிவகுக்கும். மோசமான தூக்கத்தின் தரம் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களை சீர்குலைக்கும், இது ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது.
தூக்கம் மற்றும் கருவுறுதல் ஒன்றையொன்று பாதிக்கிறது. எனவே, ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கத் திறனுக்காக போதுமான அளவு தூக்கம் பெறுவது முக்கியம். இந்நிலையில், நீங்கள் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், தூக்கமின்மைக்கான காரணங்களைக் கண்டுபிடித்து மருத்துவரை அணுகவும்.
Pic Courtesy: Freepik