Can Drinking Hot Milk Increase BP: உயர் இரத்த அழுத்தம் ஒரு தீவிரமான மற்றும் ஆபத்தான பிரச்சனைகளில் ஒன்று. வாழ்க்கை முறை கோளாறுகள், ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளல் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது. குறிப்பாக, உணவுப் பழக்கம் தொடர்பான கவனக்குறைவு தீவிரமானது. உயர் இரத்த அழுத்தம் காரணமாக, இதயம் தொடர்பான நோய்களுக்கும் நீங்கள் பலியாகலாம்.
எனவே, உயர் இரத்த அழுத்தத்தை புறக்கணிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய விளைவை ஏற்படுத்தும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சூடான பால் குடிப்பதால் பல பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. சூடான பால் குடிப்பதால் உண்மையில் இரத்த அழுத்தம் அதிகரிக்குமா? என்பதற்கான பதிலை இங்கே பார்க்கலாம். மேலும், இரத்த அழுத்த தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Blood Pressure Remedies: உயர் இரத்த அழுத்தத்தை சமாளிக்க உதவும் வீட்டு முறைகள்
சூடான பால் குடித்தால் BP அதிகரிக்குமா?

பால் உடலுக்கு நன்மை பயக்கும் ஒரு சூப்பர்ஃபுட். இதில், போதுமான அளவு கால்சியம், புரதம், வைட்டமின் டி மற்றும் பிற தாதுக்கள் உள்ளன. பால் அருந்துவது உடலின் அனைத்து உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பெரும்பாலும் மக்கள் வெதுவெதுப்பான பால் அல்லது சூடான பால் குடிப்பார்கள். அந்தவகையில், உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் சூடான பால் குடிப்பது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது.
இது குறித்து ஆரோக்யா ஹெல்த் சென்டரின் மருத்துவ உணவியல் நிபுணர் டாக்டர் வி.டி.திரிபாதி கூறுகையில், “ஏற்கனவே உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சூடான பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக சூடான பால் குடிப்பதால் திடீரென பிபி அதிகரிக்கும். எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் அதிக சூடான பால் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இந்த பதிவும் உதவலாம் : Lower Blood Pressure: இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த டிப்ஸ்

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, இந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்:
ஆரோக்கியமான உணவு: ஆரோக்கியமான உணவை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதற்கு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் புதிய பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வழக்கமான உடற்பயிற்சி: வழக்கமான உடற்பயிற்சி இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். யோகா, தியானம், உடற்பயிற்சி ஆகியவற்றைப் பயிற்சி செய்யுங்கள்.
உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்: அதிக உப்பை உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே உப்பு உட்கொள்ளலை குறைக்கவும்.
மது மற்றும் புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்: மது மற்றும் புகைபிடித்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், எனவே அவற்றை நிறுத்துங்கள்.
சூடான பாலுக்குப் பதிலாக குளிர்ந்த பாலை உட்கொள்ளுங்கள்: உங்களுக்கு ரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், சூடான பாலுக்கு பதிலாக குளிர்ந்த பாலை உட்கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : Blood Pressure Remedies: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த அருமையான வீட்டு வைத்தியம்!
உயர் இரத்த அழுத்தத்தைத் தவிர்க்க, நீங்கள் சீரான மற்றும் சத்தான உணவை உண்ண வேண்டும் மற்றும் உடற்பயிற்சி அல்லது யோகாவை தவறாமல் பயிற்சி செய்ய வேண்டும். உடல் ரீதியாக செயலற்ற நிலையில் இருப்பது உயர் இரத்த அழுத்த அபாயத்தையும் அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் இருந்தால், மருத்துவரை அணுகி சரியான நேரத்தில் சிகிச்சை பெற வேண்டும்.
Pic Courtesy: Freepik