Blood Pressure Remedies: உயர் இரத்த அழுத்தத்தை சமாளிக்க உதவும் வீட்டு முறைகள்

  • SHARE
  • FOLLOW
Blood Pressure Remedies: உயர் இரத்த அழுத்தத்தை சமாளிக்க உதவும் வீட்டு முறைகள்

உயர் இரத்த அழுத்தம்

இதயத்திலிருந்து தமனிகளுக்கு இரத்தத்தை செல்லும் சக்தி இரத்த அழுத்தம் எனப்படுகிறது. சாதாரணமாக இரத்த அழுத்த அளவீடு 12/80 மிமீ பாதரசம் அளவீட்டில் இருக்கும். இந்த குறிப்பிடப்பட்ட அளவை விட, இரத்த அழுத்தம் அதிகமாகும் போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இவ்வாறு உயர் இரத்த அழுத்தம் இருக்கும் போது, தமனிகள் வழியாகச் செல்லும் இரத்தம் அதிக சக்தியுடன் நகர்கிறது. இது தமனிகளில் அழுத்தத்தை அதிகரித்து அதில் உள்ள மென்மையான திசுக்களின் மீது இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் வீட்டு வைத்தியம்

இதய பாதிப்பை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க சில வீட்டு வைத்திய முறைகள் உதவுகின்றன. அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

குறைந்த அளவு உப்பு

உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் சோடியம் உட்கொள்ளுதலைக் குறைப்பது நல்லது. இது இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதற்கு வழிவகுக்கிறது. அதிக சோடியம் எடுத்துக் கொள்வது, உடலில் திரவத்தைத் தக்க வைத்து, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும், உணவில் சோடியத்தைக் குறைக்க உப்புக்குப் பதில் உணவுகளில் சில மசாலாப் பொருள்கள் மற்றும் மூலிகைகள் சேர்க்கலாம். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Detox Liver: இதை குடித்தால் கல்லீரல் பாதுகாப்பாக இருக்கும்!

சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம்

பெரும்பாலும் வேலை செய்யாமல் ஒரே இடத்தில் இருக்கும் நபர்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், சுறுசுறுப்பாக இருப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றாகும். எனவே செயலற்ற நிலையில் இருப்பவர்கள், பாதுகாப்பான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இது உடலின் மனவலிமை மற்றும் சமநிலைக்கு நன்மை பயக்கும். மேலும், உடல் சுறுசுறுப்பாக இருப்பது நீரிழிவு மற்றும் பிற இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

மிதமான எடை பராமரிப்பு

எடை அதிகரிக்க அதிகரிக்க, இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. இதனால், அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு, இரத்த அழுத்தம் அதிகமாக காணப்படும். எனவே, மிதமான எடையைப் பராமரித்து இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பது மிக முக்கியமானதாகும். இடுப்பைச் சுற்றியுள்ள கூடுதல் கொழுப்பு உள்ளுப்பு கொழுப்பு என அழைக்கப்படுகிறது. இது உடலை எதிர்மறையாக பாதிப்பதுடன், கடுமையான உடல் நலப்பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Headache Relief: தலைவலியில் எத்தனை வகை? அதை இயற்கையான முறையில் சரி செய்வது எப்படி?

மது அருந்துதலைக் கட்டுப்படுத்துதல்

உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் மது அருந்துதலைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மது அருந்தவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். மேலும், அதிகப்படியான ஆல்கஹால் குடிப்பது உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மன அழுத்தத்தைக் குறைக்க

இன்றைய கால கட்டத்தில், தூக்கமின்மை, வேலைப்பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் ஓய்வெடுக்கவும், மனதை சமநிலைப்படுத்தவும் கடினமாக்குகிறது. எனவே, மன அழுத்தத்தை குறைக்க, அன்றாட பொறுப்புகளில் இருந்து சற்று விலகி இருக்கலாம். மன அழுத்தம், தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை உயர்த்தக் கூடியதாகும். எனவே, மன அழுத்தத்திற்கான தூண்டுதலைக் கண்டறிந்து, மனதை சமநிலைப் படுத்துவதற்கான வழியைத் தேடவும். மேலும், மன அழுத்தத்தை ஆரோக்கியமான முறையில் பாதுகாப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Best Home Remedies: வீட்டில் செய்யக் கூடிய கசாயங்களும், நன்மைகளும்

Image Source: Freepik

Read Next

Ear Pain: காது வலி வரக் காரணமும், குணமாக வீட்டு வைத்தியமும்!

Disclaimer

குறிச்சொற்கள்