Headache Relief: விடியும் பொழுது நிம்மதியானதாக இருந்தால் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு செயல்படலாம். காலையில் எழுந்திருக்கும் போது பலருக்கும் பல்வேறு காரணங்களால் தலைவலி ஏற்படும். காலையில் எழுந்த உடன் இதுபோன்ற சிக்கல் வருவது என்பது அன்றைய நாளையே கெடுத்து விடும். சிலருக்கு திடீரென தலைவலி ஏற்படும். தலைவலிகளில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கிறது என உங்களுக்கு தெரியுமா? தலைவலி தீர்ப்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
தலைவலி வகைகள் என்னென்ன தெரியுமா?
உங்களுக்கு ஏற்படும் தலைவலி எந்த வகையான தலைவலி என கண்டறிவது சிரமம். இவற்றில் சில கொடிய தலைவலியும் அடங்கும். உடனடியாக குறையும் எளிய தலைவலிகளும் உள்ளன. தலை மற்றும் கழுத்தில் உள்ள ஒன்பது உணர்திறன் பகுதிகள், தலையில் உள்ள இரத்த நாளங்களின் அழுத்தம், வீக்கம், சளி போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முக்கிய கட்டுரைகள்
அடிக்கடி ஏற்படும் தலைவலியை அலட்சியப்படுத்தக் கூடாது, உடனே மருத்துவரை அணுக வேண்டும். தலைவலி பல வகையான பிரச்சனைகளுடன் தொடர்புடையது ஆகும். இது முக்கியமான இரத்த நாளங்கள் மற்றும் மூளை தொடர்பான பிரச்சனை தொடர்புடையதாகும். பொதுவான தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் பெற இந்த குறிப்புகளை பயன்படுத்தலாம்.
தலைவலிக்கான காரணங்கள்

தலைவலி ஒரு பக்கம் மட்டும் இருந்தால், அது 'மைக்ரேன்'. அதிக நேரம் வெயிலில் நிற்பதாலோ அல்லது அதிக சத்தம் கேட்பதாலோ இவ்வகை தலைவலி அதிகரிக்கிறது. தலைக்குள் அதிக அழுத்தம் இருந்தால், தலையில் ரப்பர் பேண்ட் சுற்றியிருப்பது போன்ற உணர்வு ஏற்படும். மன உளைச்சல் காரணமாக இயற்கையாக இந்த தலைவலி வரலாம். இது ஒரு ஆபத்தான தலைவலி அல்ல.
நெற்றிக்குப் பின்னால், கண்களுக்கு இடையே, கண்களுக்குக் கீழே அல்லது தலையின் பின்பகுதியில் வலி ஏற்பட்டால், அது சைனஸ் தலைவலி. சைனஸ் தலைவலி பொதுவாக நாள்பட்டதாக இருக்கும். தலைவலியுடன் கண் சிவத்தல், கண்கள் வீக்கம், கண்களில் நீர் வடிதல் போன்றவை இருந்தால், அது 'கொத்துத் தலைவலி'.
சில உணவுப் பொருட்களை உட்கொண்டாலோ அல்லது குறிப்பிட்ட வாசனையை சுவாசித்தாலோ தலைவலி ஏற்பட்டால் அது அலர்ஜி தலைவலி. சரியான தூக்கம் இல்லாதது, டிவி மொபைல் லேப்டாப் போன்ற அதிக திரை பயன்பாடு போன்ற காரணங்களாலும் தலைவலி வரலாம்.
தலைவலிக்கான தீர்வுகள்
● காலையில் எழுந்த உடன் தலைவலி ஏற்படும் பட்சத்தில் ஒரு கிளாஸ் வெந்நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தலைவலி குறையும்.
● வெதுவெதுப்பான பசுவின் பால் தலைவலிக்கு மருந்தாகவும் செயல்படுகிறது.
● இரவில் நிம்மதியாகவும், போதுமான அளவும் தூங்கி எழுந்தால் தலைவலி காலையில் ஏற்பட வாய்ப்பில்லை.
● யூகலிப்டஸ் எண்ணெய் தலைவலியை போக்குவதில் நன்றாக வேலை செய்கிறது.
● பாலில் சிறிது கல் உப்பு சேர்த்து சாப்பிட்டால் தலைவலி குறையும்.
● உங்கள் வீட்டில் சந்தனப் பொடி இருந்தால்.. பேஸ்ட் செய்து தலையில் தடவுங்கள்.
● தேநீர் அல்லது நல்ல காபி குடிப்பது தலைவலியை போக்கலாம்.
● இஞ்சியை மெல்லுவதால் தலைவலி குறையும்.
● வீட்டில் தலைவலி கடுமையாக இருக்கும்போது.. குறைந்த வெளிச்சத்தில் ஓய்வெடுக்கவும்.
● சிறிது பூண்டு எடுத்து தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்யவும். இந்த கலவையை ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டால் தலைவலி குறைக்கும்.
● தலைவலியை குறைப்பதில் தேங்காய் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனை சிறிது சிறிதாக தலையில் தடவி மசாஜ் செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
● ஆட்டிறைச்சி மற்றும் வெண்ணெய் அதிகம் உட்கொள்பவர்களுக்கு அதிக தலைவலி வரும்.
● வைட்டமின்-சி, டி, பி12 மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் தலைவலியிலிருந்து விடுபடலாம்.
● தலைவலி இருக்கும்போது காரமான உணவுகளை உட்கொள்ளவே கூடாது.
● நல்ல தூக்கமும் உடற்பயிற்சியும் தலைவலியிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
இதையும் படிங்க: டெங்கு காய்ச்சலிலிருந்து விரைவில் குணமடைய உங்கள் குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய ஐந்து உணவுகள்
இந்த குறிப்புகளானது தலைவலிக்கான காரணத்தை கண்டறியவும் அதை தீர்ப்பதற்கான வழிகளையும் அறிய உதவியாக இருந்தது என்றாலும் அதன் தீவிரத்தை உணர்ந்து உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
image source: freepik