How To Deal With Morning Anxiety: காலை நேரம் மிகவும் முக்கியமான நேரம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், இரவில் பல மணி நேரம் தூங்கினாலும், காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே நிம்மதியில்லாத உணர்வை பலரும் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, இது கவலையில் அறிகுறியாகக் கருதப்படுகிறது. இவ்வாறு அதிகாலையில் மன அழுத்தத்துடன் இருப்பது அன்றைய நாளின் ஆற்றலைக் குறைக்கிறது. மேலும் ஆற்றல் உற்பத்தியையும், மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. ஆனால் இதை கவனிப்பது மிகவும் முக்கியமாகும்.
காலை பதட்டம்
காலை பதட்டம் என்பது மன அழுத்தம் மற்றும் கவலை போன்ற உணர்வுகளுடன் எழுந்திருப்பதைக் குறிக்கிறது. மன அழுத்தம் நிறைந்த கட்டங்களைச் சந்தித்தால், துயரத்தின் வழியாகச் செல்வது அல்லது வாழ்க்கையில் கடுமையான மாற்றங்களைக் கையாள்வது போன்ற அனுபவங்களை அனுபவிப்பது பொதுவானதாகக் கருதப்படுகிறது. எனவே மன அழுத்தம், பதட்டம் அல்லது காலையில் கவலை போன்றவற்றை அன்றாடம் அனுபவித்தால் உடனடியாக சுகாதார நிபுணரைத் தொடர்புகொள்வது நல்லது.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Mental Health: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கண்டிப்பா மனநல மருத்துவரை சந்திக்கனும்!
மேலும், கவலைக் கோளாறு இருப்பின், அதற்கு சரியான சிகிச்சைகள் மூலம் பயனடையலாம். அதிகப்படியான மற்றும் கட்டுப்பாடற்ற கவலையின் உணர்வானது பொதுவான கவலைக் கோளாறைக் குறிக்கிறது. இது நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுகிறது. மேலும் தபட்சம் 6 மாதங்களுக்கு இந்த பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படலாம். அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் சில சங்கடங்கள் காரணமாக இது போன்ற கவலைக் கோளாறுகள் நிகழ்கிறது.
காலை பதட்டத்தின் பொதுவான அறிகுறிகள்
கவலை ஏற்படுவது மனதைத் தொந்தரவு செய்வதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக அமைகிறது. இதில் காலையில் பதட்டம் ஏற்படுவதால் ஏற்படும் பொதுவான அறிகுறிகளைக் காணலாம்.
- எரிச்சல்
- சோர்வு
- அமைதியின்மை
- அதிகரித்த இதயத்துடிப்பு
- பதட்டமான தசைகள்
- செரிமான பிரச்சனைகள்
- வயிற்றுப்போக்கு
- தலைவலி
இந்த பதிவும் உதவலாம்: Financial Stress Relax Tips: நிதி அழுத்ததால் மன அழுத்தமா.? எப்படி சமாளிப்பது?
காலை பதட்டம் ஏற்படுவதற்கான காரணங்கள்
கவலைக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய அதே காரணங்கள் காலை பதட்டத்திற்கான காரணங்களாகும். பொதுவாக நீண்ட நேரம் மன அழுத்தத்தில் இருப்பதன் விளைவாக காலை பதட்டம் ஏற்படுகிறது. இதில் கடந்த காலத்தில் நடந்த ஒன்றைப் பற்றி கவலையில் இருப்பது, எதிர்கால நிகழ்வு பற்றி எதிர்பார்ப்பது உள்ளிட்டவை காலை கவலை அறிகுறிகளுக்கான சில பொதுவான காரணங்களாகும்.
காலை பதற்றத்தை எப்படி சரி செய்வது?
காலை பதற்றத்தை சில அன்றாட நடவடிக்கைகள் மூலம் சரி செய்யலாம். இதில் காலை பதற்றத்தை சரி செய்யும் வழிகளைக் காணலாம்.
உடலை சுறுசுறுப்பாக வைப்பது
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் காலை கவலை அறிகுறிகளை பெரிய அளவில் கட்டுப்படுத்தலாம். இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மன ஆரோக்கியத்தையும் நேர்மறையாக பாதிக்கிறது. எனவே 30-35 நிமிடங்கள் வாரத்தில் குறைந்தது 5 நாட்கள் வழக்கமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Anxiety Chest Pain: கவலை நெஞ்சு வலியை ஏற்படுத்துமா?
எதிர்மறை எண்ணங்களை சவால் செய்வது
எதிர்மறையான எண்ணங்கள் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கிறது. இதில் ஒருவர் தனது கட்டுப்பாட்டை இழந்து அன்றாட செயல்களில் செய்யக்கூடிய செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காலை கவலை தொடங்கி ஒவ்வொரு நாளும் மூளைத் திறன் குறைந்து கொண்டே வருகிறது. இந்த காலை கவலையை அதிகரிக்கும் இந்த எண்ணங்களிலிருந்து விடுபட்டு, காலை கவலையைக் குறைக்க நேர்மறையான எண்ணங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
ஆழ்ந்த சுவாசப் பயிற்சி
தினமும் காலையில் ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்வது சுவாசம் மற்றும் உடலின் ஆற்றலுக்கு கவனத்தை செலுத்துவதன் மூலம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. இதற்கு தினமும் மூச்சுப்பயிற்சியை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு மூச்சையும் 6 வினாடிகள் வைத்திருக்கலாம். பிராணயாமா செய்வது உடலின் பதட்டத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
வாழ்க்கைமுறை மாற்றங்கள்
காலை பதட்டத்தைக் குறைக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களைக் கையாள வேண்டும். அதன் படி, போதுமான தூக்கம் பெறுவது, ஆல்கஹால் மற்றும் காஃபின் நுகர்வைக் குறைத்தல், ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது உள்ளிட்டவற்றைக் கையாள வேண்டும்.
இவ்வாறு காலை பதற்றத்தை எளிமையான முறையில் விரைவில் சமாளிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Meditation For Anxiety: மன அழுத்தத்திலிருந்து சீக்கிரம் விடுபட இந்த ஒன்னு மட்டும் செய்யுங்க போதும்
Image Source: Freepik