Meditation Benefits For Anxiety: மனஅழுத்தம், பதட்டம், மனக்கவலை போன்றவற்றிற்கு இன்று பஞ்சமே இல்லை என்றே கூறலாம். ஏனெனில், இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் பல்வேறு காரணங்களால் மனக்கவலையால் அவதியுறுகின்றனர். இந்த பதட்டம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனினும் இந்த பதட்டம் காரணமாக ஒரு நபர் அதிகரித்த இதயத்துடிப்பு, வியர்வை போன்ற சில அறிகுறிகளை அனுபவிப்பர்.
இதிலிருந்து விடுபட பெரும்பாலானோர் மருந்துகளின் உதவியை நாடுகின்றனர். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நபர் பதட்டமாக இருக்கும் போது தியானம் செய்வது மிகுந்த நன்மையைத் தரும். மனக்கவலையை நீக்க தியானம் தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Meditation Benefits: மனநலப் பிரச்சனையைத் தீர்க்க தினமும் 20 நிமிஷம் இத செய்யுங்க போதும்.
மனக்கவலைக்கு தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
தூக்கத்தை மேம்படுத்த
ஏஎஸ்டி யோகா குடும்பத்தின் நிறுவனர் யோகாச்சார்யா தீபக் தன்வார் அவர்களின் கூற்றுப்படி, “பதட்டத்தை தூங்குவதன் மூலம் குறைக்கலாம். நல்ல தூக்கத்தைப் பெற ஆழ்ந்த தியானம் உதவுகிறது” என்று கூறியுள்ளார். ஃபோர்ப்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி,”முறையான தியானம் செய்வதன் மூலம் ஒருவர் நல்ல தூக்கத்தைப் பெறுவர். மேலும், இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். குறிப்பாக, கவலை மற்றும் பதட்டத்தினால் மனதில் பல வகையான எண்ணங்கள் தோன்றும். இதை தியானத்தின் மூலம் நிலைப்படுத்த முடியும்” என்று கூறப்படுகிறது.
பதட்டத்தைக் குறைக்க
பதட்டம் இருக்கும் போது தியானம் செய்வது சிறந்த பலன்களைத் தரும். தியானம் செய்வதன் மூலம் மனதில் உள்ள கவலைகள் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். மேலும் இது கவனத்தை அதிகரிக்கிறது. மயோகிளினிக் படி,”கவலையில் இருக்கும் தியானம் செய்வது கவனத்தை அதிகரிக்க உதவுகிறது. பதட்டம் ஏற்படும் போது தியானம் செய்வது நேர்மறையை ஊக்குவிக்கிறது. மேலும் தியானத்தின் போது சுவாசத்தின் வேகத்தை கவ்னத்தில் கொள்ள வேண்டும்.”
மன ஆரோக்கியத்தை மேம்படுத்த
கவலையைக் குறைக்க விரும்புபவர்கள் தியானம் மேற்கொள்ளலாம். தினமும் தியானம் செய்வது மனநலத்தை மேம்படுத்த உதவுகிறது. இது படைப்பாற்றலை அதிகரிப்பதுடன், கவனத்தை மேம்படுத்துகிறது. இத்துடன் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Stress Reduce Tips: நொடிப் பொழுதில் கவலை நீங்க, இந்த மெடிடேஷன் ஃபாலோ பண்ணுங்க
இரத்த அழுத்தத்தைக் குறைக்க
யோகாச்சார்யா தீபக் தன்வார் அவர்களின் கூற்றுப்படி, “மனக்கவலையைக் குறைக்க தியானம் செய்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உண்மையில், பதட்டத்தால் இரத்த அழுத்தத்தின் அளவு பல மடங்கு அதிகரிக்கிறது. எனினும், பதட்டத்தால் இரத்த அழுத்தம் நிரந்தரமாகக் குறைவதில்லை. இது எப்போதும் ஒரு கவலையாகவே மாறிவிடுகிறது. எனினும் தியானத்தின் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும். கேனோஹெல்த் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள படி, “தியானம் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கிறது. இது இரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.”
உடல் தளர்வடைய
யோகாச்சார்யா தீபக் தன்வார் அவர்களின் கூற்றுப்படி, “பதட்டத்தைக் குறைக்க தியானம் செய்வது உடலைத் தளர்வாக வைத்திருக்க உதவுகிறது. இவ்வாறு தியானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். மேலும் இதில் இதயத்துடிப்பு சீராக இருக்கும். இதன் மூலம் பல வகையான நோய்களில் இருந்து விடுபடலாம்” என்று கூறியுள்ளார்.
இவை அனைத்தும் மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Mind Detox Tips: எந்த கவலையும் இல்லாம மனச லேசா வைத்திருக்க இதெல்லாம் செய்யுங்க
Image Source: Freepik