Ways To Solve Problems With Meditation: தியானம் என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய செயலாகும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் தியானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. இன்றைய பிஸியான காலகட்டத்தில் மன அழுத்தம், மனநலப் பிரச்சனைகள் போன்றவற்றால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இந்த பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாக தியானத்தை மேற்கொள்வது அவசியமானதாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் தியானம் செய்வதன் மூலம் மூளையை ஓய்வு நிலையில் வைப்பதுடன், மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. தியானம் செய்ய விரும்புபவர்களில் சிலருக்கு எப்படி தியானம் செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்பது பற்றித் தெரியவில்லை. இதில் மனநலப் பிரச்சனைகளைத் தீர்க்க எவ்வளவு நேரம் தியானம் செய்யலாம், எப்படி தியானம் செய்யலாம் என்பது குறித்து லக்னோவில் உள்ள போதித்ரி இந்திய மையத்தின் ஆலோசனை உளவியலாளர் டாக்டர் நேஹா ஆனந்தி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: சோர்வை எவ்வாறு நிர்வகிப்பது தெரியுமா? வாங்க பாக்கலாம்..
மனநலப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் தியானம்
தியானம் செய்வதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியும். அந்தவகையில் தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.
- தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
- பதட்டம் ஏற்படுவதைக் குறைக்க உதவுகிறது.
- மனக் கவலையை நீக்க உதவுகிறது.
- செறிவை அதிகரிக்கிறது
- தியானம் செய்வதன் மூலம் எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம்.

தியானம் பற்றி தெரியுமா?
தியானம் செய்வதற்கு முன் தியானத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும். இதில், ஒன்று உடற்பயிற்சி, மற்றொன்று மனப்பயிற்சி. தியானம் என்பது மனப்பயிற்சி ஆகும். இதில் கவனம், தளர்வு, மற்றும் விழிப்புணர்வு போன்றவை அடங்கும். தியானம் செய்வது மூளையை அமைதியாக வைத்து வேலையில் அதிக கவனத்தை செலுத்த உதவுகிறது.
தியானத்தை எப்படி தொடங்கலாம்?
தியானத்தை எப்படி தொடங்குவது என்பது குறித்து காண்போம். தியானம் செய்ய, முதலில் சுவாசத்தில் கவனம் செலுத்த முயற்சிக்க வேண்டும். அதன் பிறகு, நீண்ட மற்றும் ஆழமான சுவாசத்தை எடுக்கலாம். இவ்வாறு சுவாசத்தில் கவனம் செலுத்தி, அவற்றை உணர்ந்து மனதை ஒருநிலையில் வைத்திருக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: மனநிலையை புத்துணர்ச்சியோடு வைக்க தினசரி இதை செய்யுங்கள்!
எவ்வளவு நேரம் தியானம் செய்யலாம்?
முதன் முதலாக தியானத்தைத் தொடங்குபவர்கள் 10 நிமிடங்களில் இருந்து தொடங்கலாம். அதன் பின் வரும் நாள்களில் நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். அதன் படி, தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் தியானம் செய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது. காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் காலை 20 நிமிடம், மாலை 20 நிமிடம் என தியானம் செய்யலாம். இவ்வாறு செய்வது அதிக மற்றும் உடனடி பலன்களைப் பெறலாம்.
எங்கு தியானம் செய்ய வேண்டும்?
தியானம் செய்வதற்கு முன்பாக, தியானத்தை மேற்கொள்வதற்கான நல்ல இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில், சத்தமில்லாத அமைதியான மற்றும் காற்றோட்டமான இடத்தில் தியானம் செய்வதே மிக நல்லது. இவ்வாறு தனிமையில் தியானம் செய்வது நல்ல பலன்களைத் தரும்.
இவ்வாறு தியானம் செய்து வருவதன் மூலம் மனநலப் பிரச்சனைகளை எளிதில் சுலபமாக தீர்க்கமுடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Best Bathing Oils: மனக்கவலை நீங்க குளிக்கும் போது இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துங்க