Chakras Meditation: சக்ரா தியானம் செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? எப்படி செய்வது

  • SHARE
  • FOLLOW
Chakras Meditation: சக்ரா தியானம் செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? எப்படி செய்வது


7 Chakras Meditation And Its Benefits: தியானம் என்பது சிறந்த ஆன்மீக பயிற்சியாகும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிற்கும் மிகுந்த நன்மைகளைத் தருகிறது. தியானத்தின் மூலம் ஒரு நபர் தன் மனதை இயக்குதல் அல்லது பயிற்றுவித்தல் அல்லது உணர்வு நிலையைத் தூண்டுதல் மூலம் செய்யப்படும் நடைமுறையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

தியானத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. இதில் மிகவும் சக்தி வாய்ந்த தியான நுட்பங்களில் ஒன்றாக சக்ரா தியானம் அமைகிறது. மனிட உடலில் ஏழு வகையான முக்கிய ஆற்றல் மையங்கள் நிறைந்துள்ளன. இந்த ஒவ்வொரு சக்கரமும் தனிப்பயன்களைக் கொண்டுள்ளது. இதன் இருப்பிடங்கள், நன்மைகள் மற்றும் அவற்றை எவ்வாறு அடைவது என்பதற்கான சிறந்த வழிகாட்டி முறைகளைக் காணலாம்.

சக்ரா தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ரூட் சக்ரா

முலதாரா என்றழைக்கப்படும் ரூட் சக்ரா, முதுகுத்தண்டின் அடிப்பகுதியிலும், வாலெழும்பிற்கு அருகிலும் அமைந்துள்ளது. இது உயிராற்றலின் களஞ்சியமாகும். இது மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, தூக்கம் மற்றும் நீரேற்றம் போன்றவற்றுடன் தொடர்புடையதாகும். இந்த சக்கரத்தை அடையும் போது, உடல் வலுவடைந்து இருமல் மற்றும் சளி போன்ற பொதுவான நோய்களால் பாதிக்கப்படுபவதற்கான வாய்ப்பு குறைவாகும். கூடுதலாக, இது எதிர்மறையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் திறன் மற்றும் நிலைநிறுத்துதலை வழங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Yoga For Dry Eyes: கண்கள் அடிக்கடி வறண்டு போகுதா? இந்த யோகாவை தினமும் செய்யுங்க

சாக்ரல் சக்ரா

புனித சக்ரா அல்லது சுவாதிஸ்தானா, இனப்பெருக்க உறுப்புகளின் வேரில் அமைந்துள்ளது. இது இனப்பெருக்க உறுப்புகளின் வேரில் அமைந்துள்ளது. இந்த சக்ரா ஏக்கம், உணர்ச்சிகள், சிற்றின்பம் மற்றும் பாலியல் ஆசை போன்றவற்றுடன் தொடர்புடையதாகும். இதனை அடையும் போது, இது அதிக நினைவாற்றலை அடையவும் மற்றும் செயலற்ற ஆற்றலை ரூட் சக்ராவிலிருந்து மேல்நோக்கி உயர்த்துகிறது.

சோலார் பிளெக்ஸஸ் சக்ரா

மணிபுரா அல்லது சோலார் பிளெக்ஸஸ் சக்ரா என்பது தொப்புள் பகுதியைச் சுற்றி அமைந்திருப்பதாகும். இது தியானத்தின் அடிப்படையில் செரிமான அமைப்பு மற்றும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை நிர்வகிப்பதாகும். இது அதிகார உணர்வைத் தருகிறது. இது வாழ்க்கையில் நம்பிக்கையை அதிகரித்து, உறுதியான வேகத்தைப் பெற அனுமதிக்கிறது.

இதய சக்கரா

அனாஹட்டா அல்லது இதய சக்கரம் உயர்ந்த உணர்வைக் குறிக்கும் நான்காவது ஆற்றல் மையங்களில் ஒன்றாகும். இந்த சக்கரம் அன்பு, தைரியம் மற்றும் பக்தி போன்றவற்றைக் குறிக்கிறது. இது உடலில் இதயப் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது. இந்த சக்கரத்தை அன்லாக் செய்யும் போது, அனைவரிடமும் அன்பாக இருப்பதை ஊக்குவிக்கிறது. இது ஒவ்வொரு சூழ்நிலையையும், தைரியத்துடன் எதிர்கொள்ளவும், எதிர்மறை உணர்ச்சிகளை விடுவிக்கவும் உதவுகிறது.

தொண்டை சக்கரா

இது விஷூத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சக்ரா தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. இது ஒரு உயர்ந்த சக்கரமாகும். இந்த தொண்டை சக்ரா தூய்மையைக் குறிப்பதாகும். இந்த சக்கரத்தை அன்லாக் செய்யும் போது, எதைப் பற்றி பேசினாலும் அது உண்மையாகி விடும். பேசுவதன் மூலமாகவோ அல்லது பாடுவதன் மூலமாகவோ, குரல் வளம் பெறுகிறது. மிகவும் திறமையான பாடகர்கள், இந்த சக்ராவில் நிலை நிறுத்துகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: Joint Pain Yoga: மூட்டு வலி சீக்கிரம் குறையணுமா? இந்த 3 யோகாசனங்களை செய்யுங்க

மூன்றாவது கண் சக்கரா

அஜ்னா அல்லது மூன்றாவது கண் சக்கரா என்பது நெற்றியிலுள்ள புருவங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஓர் உயர்ந்த சக்கரமாகும். இது மூன்றாவது கண்ணைக் குறிக்கிறது. இந்த சக்கராவில் நம்மை நிலைநிறுத்துவது ஒருவரின் மனதை ஆன்மாவுடன் ஒன்றாக்கி நிலையான ஆற்றலை பெற உதவுகிறது. இதன் மூலம் உண்மையான நிகழ்வை அறிய முடியும்.

கிரீடம் சக்ரா

இது சஹஸ்ராரா எனவும் அழைக்கப்படுகிறது. இது மிக உயர்ந்த சக்கரம் அல்லது பிரபஞ்சத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாகும். இது தலையின் கிரீடத்தில் அமைந்துள்ளது. இந்த சக்ரா நிலையை அடைந்தவுடன், இருப்பு மற்றும் யதார்த்தத்தைப் பற்றிய உண்மையைக் கற்றுக் கொள்ள முடியும். இந்த சக்ராவில் உணர்வோடு ஒன்றாகி விட முடியும். இது ஒளியின் முன்னோடி மற்றும் ஆன்மீக ஞானத்தின் களஞ்சியமாகும்.

சக்கரங்களை அன்லாக் செய்வது எப்படி?

இந்த தியான சக்கரங்களைத் திறக்க பல வழிகள் உள்ளன. ஆனால், இதை அடைவதற்கு பல ஆண்டுகள் ஆழ்ந்த தியான பயிற்சி தேவைப்படுகிறது. உகந்த நிபுணரின் துவக்கத்தின் மூலம், சக்கரங்களைத் திறப்பதற்கு அவர்கள் ஆற்றலை செலுத்துவதன் மூலம் இதை அடையலாம். எனினும், இந்த முறைகள் ஆன்மீகத்திலிருந்து உருவாகிறது. மேலும், இது ஒவ்வொரு நபருக்கும் குறிப்பிட்டவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • சக்ரா தியானம் செய்ய விரும்புபவர்கள் திறக்க விரும்பும் சக்கரத்தை பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதாரணமாக, மூன்றாவது கண் சக்கரத்தைத் திறக்க விரும்புபவர்கள், அதன் இருப்பிடத்தை உணர்ந்து அதில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • சக்கரம் ஒவ்வொன்றையும், ஒவ்வொரு நாளும் தியானிக்க வேண்டும். இது சக்திகளைப் பயன்படுத்தவும், ஆற்றலை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.
  • செயலற்ற சக்கரங்களை அன்லாக் செய்ய, சில மந்திரங்களை உச்சரிக்கலாம்.
  • நிபுணரின் ஆலோசனைக்காக வழிகாட்டப்பட்ட தியான வகுப்புகள் அல்லது அமர்வுகளில் சேர வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Yoga For Thyroid: தைராய்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிறந்த யோகாசனங்கள்

Image Source: Freepik

Read Next

Yoga For Thyroid: தைராய்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிறந்த யோகாசனங்கள்

Disclaimer

குறிச்சொற்கள்