How To Cure Dry Eyes With Yoga: இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் வறண்ட கண் பிரச்சனையால் பாதிப்படைகின்றனர். இதனால் கண்கள் பலவீனமடையலாம். குறிப்பாக, கணினி மற்றும் மொபைல் திரைகளை அதிகம் பயன்படுத்துவது கண்களைப் பலவீனமடையச் செய்யலாம். மேலும் வறண்ட கண்களால் கண்களில் வலி, அரிப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுகிறது.
கர்ப்ப காலம், மெனோபாஸ் மற்றும் ஹார்மோன் சிகிச்சை போன்றவற்றால் கண்களில் வறட்சி பிரச்சனை அதிகரிக்கிறது. இந்த வறண்ட கண் பிரச்சனையை சமாளிக்க யோகாவை மேற்கொள்ளலாம். இதில் லக்னோவிலுள்ள ரவீந்திர யோகா கிளினிக்கின் யோகா நிபுணர் டாக்டர் ரவீந்திர குமார் ஸ்ரீவஸ்தா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: கண் பார்வையை மேம்படுத்த உதவும் முக்கியமான 5 யோகாசனங்கள்!
வறண்ட கண்களுக்கான உடற்பயிற்சிகள்
கண் வறட்சி பிரச்சனையை சமாளிக்க, சில எளிய யோகாசனங்களை மேற்கொள்ளலாம்.
பிரமாரி பிராணாயாமம்
பிரமாரி பிராணாயாமம் என்பது எளிய மூச்சுப்பயிற்சி ஆகும். இதில் மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்ற வேண்டும். இந்த பயிற்சி செய்வது கண்களுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கவும், கண் வறட்சி பிரச்சனையை நீக்கவும் உதவுகிறது.
ஷவாசனம்
இந்த யோகாசனத்தில் கண்களை மூடிக் கொண்டு முதுகுப் பகுதியில் படுத்துக் கொள்ளலாம். இந்த யோகா செய்வதன் மூலம் கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுடன், வறண்ட கண் பிரச்சனையை குணப்படுத்தலாம்.
அனுலோம்-விலோம் பிராணாயாமம்
இந்த யோகா ஒரு குறிப்பிட்ட வகை பிராணயாமா அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சுவாசமாகும். இதில் மூச்சை உள்ளிழுக்கும் போது ஒரு நாசியை மூடுவதும், மூச்சை வெளியேற்றும் போது மற்றொரு நாசியை மூடி வைத்திருப்பதும் அடங்கும். பிறகு இந்த செயல்முறை தலைகீழாக மாற்றப்பட்டு மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: இந்த யோகாக்கள் உங்கள் கண் பார்வையை மேம்படுத்த உதவும்..
ட்ராடக்
இந்த வகை ஆசனம் கண் பார்வை மேம்பாட்டிற்கும், கண் வறட்சியை நீக்கவும் உதவுகிறது. இந்த ஆசனத்தில் ஒரு பொருளில் கவனம் செலுத்தி, அந்த பொருளைப் பார்க்கும் முறையாகும். இதன் மூலம் கண் வறட்சி பிரச்சனையை நீக்கலாம்.
உள்ளங்கை தேய்ப்பது
இதில், கைகளைத் தேய்க்கும் போது கைகள் சூடாக மாறிவிடும். இதைத் தேய்ப்பது கண்களுக்கு நிவாரணம் தருவதுடன், கண் வறட்சி பிரச்சனையை நீக்க உதவுகிறது.
கண் வறட்சி பிரச்சனையைத் தவிர்ப்பது எப்படி?
வறண்ட கண் பிரச்சனையை நீக்க சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.
- கண் வறட்சி பிரச்சனையிலிருந்து பாதுகாக்க கண் சொட்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.
- தினமும் கண்களைச் சுத்தம் செய்வது கண்கள் வறட்சி அடைவதிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
- ஆரோக்கியமான கண்களைப் பெற வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
- நீண்ட நேரம் கணினி, மொபைல் ஸ்கிரீன் பயன்பாட்டைத் தவிர்ப்பதன் மூலம் கண்களில் ஏற்படும் வறட்சியை நீக்கலாம்.
- சூரிய ஒளி மற்றும் மாசுபாட்டிலிருந்து கண்களைப் பாதுகாக்க சன்கிளாஸைப் பயன்படுத்தலாம்.
இவை அனைத்தும் கண் வறட்சி பிரச்சனையைத் தவிர்க்கும் வழிகளாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Eyesight Yoga: கண்ணில் அடிக்கடி பிரச்சனையா? இந்த யோகாசனங்களை டிரை பண்ணுங்க
Image Source: Freepik