Sat Sep 12, 2026 | 12:22 AM IST

Yoga for belly fat: தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்க இந்த ஒரு யோகாவை செய்தால் போதும்!!

Yoga for flat tummy in 7 days: செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் உடல் எடை அதிகரிப்பதுடன், தொப்பையும் நாளுக்கு நாள் வளரும். அதிகரித்த உடல் எடையை கஷ்டப்பட்டு குறைத்தாலும், தொப்பையை குறைப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. ஆண்களும், பெண்களும் தங்களின் வயிறு தட்டையாக இருப்பதையே விரும்புகிறார்கள். ஆண்களை விட தொப்பை பிரச்சனை பெண்களை அதிகம் பாதிக்கிறது.

வயிற்றில் உள்ள கொழுப்பு தோற்றத்தை கெடுப்பது மட்டுமின்றி நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது அல்ல. சரியான உணவுப்பழக்கம், ஆரோக்கியமான பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் தொப்பையை குறைக்க நீங்கள் முயற்சி செய்யும் போது, நீங்கள் செய்த மில்லியன் கணக்கான முயற்சிகளும் இன்ச் கணக்கில் தொப்பையை குறைக்க மட்டுமே உதவுகிறது. பிடிவாதமான தொப்பை கொழுப்பைக் குறைக்கும் பயனுள்ள யோகாசனத்தைப் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

இந்த பதிவும் உதவலாம் : உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் செய்ய வேண்டிய 5 யோகாசனங்கள்

தொப்பையை குறைக்க உதவும் தனுராசனம் (Dhanurasana)

  • தனுராசனம் செய்ய, முதலில் யோகா பாயில் குப்புற படுக்கவும்.
  • இப்போது உங்கள் கால்களை இடுப்புக்கு அருகில் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இதையடுத்து, மூச்சை உள்நோக்கி இழுக்கவும்.
  • உங்கள் கைகளால் கால்களின் கணுக்கால்களைப் பிடிக்கவும்.
  • உங்கள் கழுத்தை நேராக வைக்கவும்.
  • உடலை வில் போன்று வைக்கவும்.
  • ஆழ்ந்த மூச்சை எடுத்து, இந்த நிலையை வைத்திருக்க முயற்சிக்கவும்.
  • ஆரம்பத்தில் உடலில் அழுத்தம் கொடுக்க வேண்டாம். உங்களால் முடிந்தவரை நிலையை வைத்திருங்கள்.
  • சில வினாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேற்றி, இந்த நிலையில் இருந்து பழைய நிலைக்கு வரவும்.

இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Exercise For Women: உடல் எடை சீக்கிரம் குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க!

பெண்கள் தனுராசனா செய்வதன் நன்மைகள்

  • இந்த ஆசனம் செய்வதன் மூலம் பிடிவாதமான தொப்பையை குறைக்கலாம்.
  • அதுமட்டுமின்றி, இவ்வாறு செய்வதால் உடலின் கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் பருமன் குறைகிறது.
  • இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. உணவு நன்றாக ஜீரணமாகி பசியும் அதிகரிக்கும்.
  • இந்த ஆசனம் செய்வதன் மூலம், வயிற்று தசைகள் வலுவடைந்து, நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்.
  • இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் இந்த ஆசனம் பயனுள்ளதாக இருக்கும்.
  • இதனால் முதுகு வலி குறையும்.
  • இந்த ஆசனம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிடிப்புகளை போக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த யோகாசனம் தொப்பையை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு ஏதேனும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரை அணுகவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Yoga for BP: இரத்த அழுத்த பிரச்சனையிலிருந்து விடுபட இந்த 3 யோகாசனங்கள் செய்யுங்க.

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content