$
Which Drinks Is Best For Reduce Belly Fat: இன்றைய நவீனகாலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை பழக்கங்கள் போன்றவை உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றன. அந்த வகையில் பல்வேறு உடல் நல அபாயங்களை ஏற்படுத்தும் வகையில் உடல் பருமன் அதிகமாகிறது. இந்த உடல் பருமன் காரணமாக நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு தீவிர பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், உடலில் கொழுப்பு அதிகம் சேர்வது, தொப்பையை ஏற்படுத்துகிறது. இந்த தொப்பையால் உடலுக்கு எண்ணற்ற கோளாறுகள் ஏற்படும் என்று ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. அதிலும் சில பேர் தொப்பைக் கொழுப்பால் அழகு சார்ந்த பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர். இதை மறைப்பதற்கு எண்ணற்ற முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனவே தொப்பை எப்போது அதிகரிக்கிறது என்பதை உணர்கிறீர்களோ அப்போதே அதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Weight loss drinks: தினமும் காலையில் இந்த ஜூஸ் குடியுங்க… ஒரே வாரத்தில் தொப்பை காணாமல் போய்டும்!
தொப்பை உருவாகக் காரணங்கள்
தொப்பையில் கொழுப்பு அதிகமாகி தொப்பைப் பெரிதாவதற்கு சில காரணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
- ஒரு நாளில் குறைய வேண்டிய கலோரிகள் குறையாமல் இருப்பது
- அதிக கலோரிகள் நிறைந்த உணவு உட்கொள்ளல்
- வயது அடிப்படையில்
- மரபு அடிப்படையில்
இந்த காரணங்களால் தொப்பை கொழுப்பு அதிகமாகி சிரமத்திற்கு வழிவகுக்கிறது. அதிலும் அதிக கலோரி உணவுகளை எடுத்துக்கொண்டு, அவற்றை கரைக்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாதவர்களுக்கு உடல் எடை கூடலாம். இதனால் தொப்பை உண்டாகும்.
மேலும், வயோதிகமும் உடலில் மாற்றத்தை கொண்டுவரும். வயதாகும்போது தசைகளில் அது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதில் உடற்பயிற்சி செய்யாதவர்கள் விரைவில் தசைகளால் பாதிக்கப்படும் அபாயம் உண்டாகலாம். இது அவர்கள் ஆரோக்கியமாக உடல் எடையைப் பராமரிக்காமல் இருக்கும் போது நிகழ்கிறது. அதாவது வயிற்றுப்பகுதியில் அதிகளவில் தசைகள் சேர்வது தொப்பைக்கு வழிவகுக்கிறது.

தொப்பையைக் குறைக்க உதவும் பானங்கள்
தொப்பையைக் குறைக்க ஆரோக்கியமான உணவுகளுடன், உடற்பயிற்சியும் கட்டாயம் தேவை. எனினும், சில ஆரோக்கியமான பானங்களை உட்கொள்வதன் மூலம் தொப்பையில் உள்ள கொழுப்பை கரைக்கலாம். இதில் தொப்பையைக் குறைக்கும் ஆரோக்கியமான பானங்களைக் காணலாம்.
மஞ்சள் பால்
மஞ்சளில் ஆன்டிபாக்டீரியல் குணங்கள் நிறைந்துள்ளது. இவை மழைக்காலத்தில் வரும் நோய்கள் மற்றும் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் இது உடலில் இருந்து நச்சுக்களை நீக்கி உடல் எடை மற்றும் கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது. எனவே, பாலில் மஞ்சள் கலந்து மஞ்சள் பால் அருந்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Drinks: வெறும் வயிற்றில் இதை குடித்தால் போதும்; எப்பேர்ப்பட்ட தொப்பையும் காணாமல் போய்டும்!
மூலிகை தேநீர்
தண்ணீரில் புதினா, பட்டை, ஏலக்காய், மஞ்சள் தூள், துளசி, கிராம்பு, சீரகம், இஞ்சி, சோம்பு போன்றவற்றைத் தண்ணீரில் கலந்து தயார் செய்வது மூலிகை தேநீர் ஆகும். இதை வடிகட்டி, தேநீர் கலந்து பருகும் போது, சுவையான மூலிகை டீ தயாராகி விடும். மூலிகை தேநீரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், மனதை அமைதிப்படுத்தும் திறன் போன்றவை உடல் எடையைக் குறைக்கவும், தொப்பையில் உள்ள கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது.
பிளாக் காபி
பிளாக் காபியை மிதமான அளவு உட்கொள்வது, உடலில் உள்ள கொழுப்பை வெகுவாகக் கரைக்க உதவுகிறது. மேலும் இது உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. எனினும், இதை மிதமான அளவில் உட்கொள்வது மிகவும் நல்லது.
எலுமிச்சை தண்ணீர்
வெந்நீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்து அருந்துவது தொப்பைக் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. எனவே இந்த சாற்றை தினமும் வெறும் வயிற்றில் அருந்துவதன் மூலம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, தொப்பையைக் கரைக்கலாம்.

கிரீன் டீ
ஒரு கப் அளவிலான கிரீன் டீயில் எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளின் உதவியுடன் தொப்பைக் கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கலாம். எனவே இதனை தினமும் வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம் உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
ஆம்லா சாறு
ஆம்லா சாறு குறைந்த அளவிலான கலோரிகளைக் கொண்டுள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவுகிறது.
இவ்வாறு பல்வேறு ஆரோக்கியமான பானங்களை அருந்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கவும், தொப்பைக் கொழுப்பை எளிதில் கரைக்கவும் முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss: வெறும் 7 நாளில் தொப்பை குறைய இந்த பானத்தை தினமும் குடியுங்க!!
Image Source: Freepik