Expert

Weight loss drinks: தினமும் காலையில் இந்த ஜூஸ் குடியுங்க… ஒரே வாரத்தில் தொப்பை காணாமல் போய்டும்!

  • SHARE
  • FOLLOW
Weight loss drinks: தினமும் காலையில் இந்த ஜூஸ் குடியுங்க… ஒரே வாரத்தில் தொப்பை காணாமல் போய்டும்!

நீங்களும் உங்கள் எடையைப் பற்றி கவலைப்படுபவரா? என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லையா? குறிப்பாக தொப்பை குறையனுமா? ஆம் எனில், கண்டிப்பாக இந்த எடையைக் குறைக்கும் பானத்தை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். ப்ரக்கோலி, கேரட், எலும்பிச்சை சேர்த்து தயார் செய்யப்படும் இந்த பணத்தை தினமும் குடித்து வந்தால் அடம் பிடிக்கும் தொப்பையை கூட எளிமையாக 7 நாளில் குறைக்கலாம். உடல் எடை மட்டும் அல்ல பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட கேரட், ப்ரக்கோலி ஜூஸ் எப்படி தயாரிப்பது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Fiber Rich Foods: உங்க உடல் எடையை அசால்ட்டாக குறைக்க இந்த 5 உணவுகள் போதும்!

தேவையான பொருட்கள் :

ப்ரக்கோலி - 2.
கேரட் - 3.
எலுமிச்சை பழம் - 1.
பீட்ரூட் - 1.
முள்ளங்கி - 2.
வெள்ளரி - 1.
உப்பு, மிளகு - தேவையான அளவு.

ஜூஸ் செய்முறை :

  • முதலில் எடுத்துக்கொண்ட ப்ரக்கோலி, பீட்ரூட், முள்ளங்கி, வெள்ளரி ஆகியவற்றை நன்கு கழுவி தோலை நீக்கி சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • இதனிடையே, எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி, சாறு புழிந்து தனியே எடுத்து வைக்கவும்.

இந்த பதிவும் உதவலாம் : Weight Loss During Period: மெனோபாஸ் காலத்தில் உடல் எடையை குறைப்பது உண்மையில் கடினமான விஷயமா?

  • தற்போது, மிக்ஸி ஜார் ஒன்றை எடுத்து அதில் முதலில் முள்ளங்கி மற்றும் பீட்ரூட் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து, நறுக்கிய ப்ரகோலி மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைக்கவும். அதில், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்துக் மீண்டும் அரைத்துக் கொள்ளவும்.
  • இறுதியாக இதில் எலுமிச்சை சாறு போதுமான அளவு சேர்த்து அரைத்து, வடிகட்டி எடுத்தால் ப்ரக்கோலி - கேரட் ஜூஸ் ரெடி.

இந்த பதிவும் உதவலாம் : அதிகம் சாப்பிடுவதை நிறுத்துவது சிரமமா? காரணம் என்ன?

இந்த ஜூஸை பாரும் போது சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்து குடிக்கவும். தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் எப்பேர்ப்பட்ட தொப்பையாக இருந்தாலும் ஒரே வாரத்தில் கரைந்து விடும். காய்கறிகளை சுத்தம் செய்து, பின் நறுக்கும் போது, வெள்ளரிக்காயின் தோல் நீக்காமல் நறுக்குவது நல்லது. வெள்ளரி தோலில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும்.

கேரட், ப்ரக்கோலி ஜூஸ் குடிப்பதன் நன்மைகள்:

  • ப்ரோக்கோலி மற்றும் கேரட் குறைந்த கலோரி உணவுகள். அதனால்தான் எடையைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு அவற்றின் நுகர்வு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Journey: எடை இழப்பு பயணத்தில் உள்ளீர்களா.? இதை நினைவில் கொள்ளுங்கள்..

  • ப்ரோக்கோலியில் அதிக அளவு வைட்டமின்கள் சி மற்றும் கே உள்ளது. கேரட்டில் வைட்டமின் பி, எ, C மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
  • ப்ரோக்கோலி மற்றும் காளானில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் முழுமை உணர்வை ஊக்குவிக்கிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Ghee for Weight Loss: நெய்யை இப்படி சாப்பிட்டு பாருங்க! சீக்கிரமா தொப்பையைக் குறைக்கலாம்

Disclaimer