Fri Oct 9, 2026 | 03:29 AM IST

Weight Loss: 15 நாளில் உடல் எடையை குறைக்க தினமும் காலையில் இந்த ஜூஸ் குடியுங்க!

Weight Loss: 15 நாளில் உடல் எடையை குறைக்க தினமும் காலையில் இந்த ஜூஸ் குடியுங்க!Weight Loss: 15 நாளில் உடல் எடையை குறைக்க தினமும் காலையில் இந்த ஜூஸ் குடியுங்க!

Tomato Carrot Ginger Juice For Weight Loss: உடல் எடையை குறைக்க, மக்கள் நிறைய பழச்சாறுகள் மற்றும் ஸ்மூத்திகளை உட்கொள்கிறார்கள். ஏனெனில், அவை கலோரிகள் குறைவாக இருந்தாலும் ஊட்டச்சத்து நிறைந்தவை. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் பலர், பழ ஜூஸ் அல்லது காய்கறி ஜூஸ் என தங்களுக்கு விருப்பப்பட்டதை எடுத்துக்கொள்கிறார்கள். நீங்களும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் பழ ஜூஸ்களை விட காய்கறி ஜூஸ்யை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

ஏனென்றால், பழச்சாற்றில் அதிக இனிப்பு உள்ளது, காய்கறி ஜூஸ் மிகவும் சத்தானது. அந்தவகையில், தக்காளி, கேரட் மற்றும் இஞ்சி சாறு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் இந்த சாற்றுடன் உங்கள் நாளைத் தொடங்கினால், அது விரைவாக எடையைக் குறைக்கலாம். உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் தக்காளி, கேரட், இஞ்சி ஜூஸ் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Benefits of Coriander Water: வெறும் வயிற்றில் தினமும் காலை கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?

தக்காளி, கேரட் மற்றும் இஞ்சி ஜூஸ் உண்மையில் உடல் எடையை குறைக்குமா?

இந்த சாற்றின் சிறந்த விஷயம் என்னவென்றால், இது மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது மற்றும் கூடுதல் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. காலையில் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது சிறந்த பானமாக இருக்கும்.

ஏனெனில், இதை உட்கொள்வது உடலுக்கு விரைவான ஆற்றலைத் தருகிறது மற்றும் வொர்க்அவுட்டின் போது சோர்வை ஏற்படுத்தாது. தவிர, ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. இது தவிர, உடலில் தேங்கியுள்ள அழுக்குகளை நீக்கி, நச்சு நீக்கி, நீரேற்றமாக வைக்க உதவுகிறது. மேலும், இந்த ஜூஸை குடித்த பிறகு நீண்ட நேரம் பசி எடுக்காது.

இந்த பதிவும் உதவலாம் : Turmeric Water Benefits: குளிர் காலத்தில் மஞ்சள் நீர் குடிப்பது இவ்வளவு நல்லதா?

தக்காளி, கேரட் மற்றும் இஞ்சி ஜூஸின் நன்மைகள்

  • உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
  • இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.
  • இதில் வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், லைகோபீன் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
  • வாயு, வீக்கம், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.
  • பல கடுமையான நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
  • அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

தக்காளி, கேரட் மற்றும் இஞ்சி சாறு செய்முறை:

தேவையான பொருட்கள்:

கேரட் - 2.
தக்காளி - 2.
இஞ்சி - 1 சிறிய துண்டு.
கொத்துமல்லி தழை - 1 கொத்து.
எலுமிச்சை சாறு - அரை.

ஜூஸ் செய்முறை:

ஜூஸ் தயாரிக்க ஜூஸரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அனைத்து பொருட்களையும் கழுவி, அவற்றை நன்றாக அறைத்து சாறு எடுக்கவும். சாற்றை வடிகட்டி ஒரு கோப்பையில் எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து உட்கொள்ளவும்.

இந்த பதிவும் உதவலாம் : இந்துப்பு Vs கடல் உப்பு: எது ஆரோக்கியத்திற்கு நல்லது?

ஒருவேளை நீங்கள் ஒரு பிளெண்டரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், எலுமிச்சையைத் தவிர அனைத்து பொருட்களையும் ஜாடியில் போட்டு, அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அறைக்கவும். இப்போது ஒரு சல்லடை உதவியுடன் வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் சாற்றை வடிகட்டி, சாறு பிரிக்கவும். அதில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடவும்.

Pic Courtesy: Freepik

Read Next

→ Weight Loss: வெறும் 7 நாளில் தொப்பை குறைய இந்த பானத்தை தினமும் குடியுங்க!!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.