Turmeric Water Benefits: குளிர் காலத்தில் மஞ்சள் நீர் குடிப்பது இவ்வளவு நல்லதா?

  • SHARE
  • FOLLOW
Turmeric Water Benefits: குளிர் காலத்தில் மஞ்சள் நீர் குடிப்பது இவ்வளவு நல்லதா?


மஞ்சள் தனது மகத்துவ பண்புகளால், உலகளவில் புகழ் பெற்றுள்ளது. இதனை நம் உணவில் இணைத்துக்கொள்வதன் மூலம் இதன் நன்மைகளை நாம் முழுமையாக அடைய முடியும். மேலும் இதனை மஞ்சள் நீராகவும் குடிக்கலாம். இதனை உட்கொள்வதன் மூலம் பல உடல் நல பிரச்சனைகளை தவிர்க்க முடியும். இதனால் கிடைக்கும் நன்மைகளை இங்கே காண்போம்.

செரிமானம் மேம்படும்

உணவில் மஞ்சள் சேர்த்து உட்கொள்வதால், உங்கள் செரிமான அமைப்பு மேம்படும். இது உங்கள் குடல் இயக்கத்தை சீராக்கி உங்கள் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். இதனால் உடல் எடை குறையும். 

இதையும் படிங்க: Amla Benefits: நெல்லிக்காயில் மறைந்திருக்கும் ஆகச்சிறந்த நன்மைகள்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

சருமத்திற்கு நல்லது

மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கலால் ஏற்படுத்தும் சேதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் இது சருமத்தை உள்ளிருந்து ஜொலிக்க செய்யும். 

வலி நிவாரணம்

நீங்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ மஞ்சளை பால் அல்லது நீருடன் கலந்து குடியுங்கள். இது சிறந்த வலி நிவாரணமாக செயல்படும். இதனால் மூட்டு வலி தீரும். 

எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

மஞ்சளில் உள்ள குர்குமின், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, உங்கள் உடலை பேக்டீரியா, வைரஸ் நோய் போன்றவற்றில் இருந்து காக்க உதவுகிறது. மேலும் இது ஃப்ரீ ரேடிக்கலால் ஏற்படுத்தும் சேதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. 

இந்த பதிவில் உள்ள தகவல்கள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. உங்களுக்கு ஏதேனும் உணவு ஒவ்வாமை இருந்தால், நீங்கள் புதிதாக ஏதேனும் உணவு மாற்றங்கள் செய்யும் முன் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.  

Image Source: Freepik

Read Next

Cumin Powder Benefits : சீரகப் பொடியை இப்படி குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்